வெள்ளி, 25 ஜூலை, 2014

பொய்சாட்சி சொன்னால்..ஒரு கதை...

ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் 

பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும்  என்று அறிவித்தார்.நாட்டின் பல 

பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் 

அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.ஒரு நாள்  கந்தல் உடை அணிந்த 

ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள 

விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் 

தெரிவித்தார்.அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம்  

இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர 

வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான்  இன்று இங்கு நான் 

வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய்   

..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று 

கத்தினான்.உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் 

கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே 

போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் 

கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை 

உணர்ந்தான்.உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் 

சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது 

அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர 

வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை 

சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.


பொய் குறித்து இப்படிப் பல கதைகள் உண்டு. மருத்துவரிடமும், 

வழக்கறிஞரிடமும் பொய் சொல்லக்கூடாது என்பார்கள். ஆனால் இவர்கள் 

எவ்வளவு வேண்டுமானாலும் பொய்சொல்லலாம் என்பது இன்றைய 

நிலையாகிவிட்டது.பொய் பற்றிய சங்ககால நம்பிக்கையைக் காண்போம்


கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி


கலித்தொகை 34-10


பொய் சாட்சி கூறியவன் வந்து கீழே தங்கியதால் பட்டுப்போன மரம் போல 

நானும் அழகினை இழந்துவிட்டேன் என்கிறாள் தலைவி. 


பொய் சாட்சி உரைத்தவன் கீழே நின்றால் அந்த மரம் வாடிவிடும் என்ற 

இச்செய்தி அக்கால மக்களின் நம்பிக்கைக்குத் தக்க சான்றாக அமைகிறது.


தொடர்புடைய இடுகைகள்


11 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா

  சிந்தனைக்கு அறிவான கதை படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. பொய் பற்றிய
  சிறந்த இலக்கியக் கண்ணோட்டம்

  பதிலளிநீக்கு
 3. மிக அருமையான கதை அதற்குத் தாங்கள் கொடுத்த கலித்தொகை பாடல் விளக்கம் அருமை. சரிதான் டாக்டரிடமும், வக்கீலிடமும் பொய் சொல்லக் கூடாதுதான். ஆனால் அவர்கள் ரொம்பவே பொய் சொல்லலாம்....காலம் ....கதையை மிகவும் ரசித்தோம்! சமயோஜித பொய்

  பதிலளிநீக்கு
 4. அறிந்த கதைதான் என்றாலும் மீண்டும் படித்து ரசித்தேன்! சங்க கால நம்பிக்கை வியக்க வைத்தது! நன்றி!

  பதிலளிநீக்கு