வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 15 ஏப்ரல், 2009

குருவின் ஐயம்




குருவுக்கு உறக்கத்திலிருந்து திடீரென விழிப்பு வந்தது. சீடர்கள் ஓடி வந்து என்ன குருவே கலக்கமாக இருக்கிறீர்கள்? என வினவினார்கள்.

குரு எனக்கு ஒரு ஐயம் என்று சொன்னார்..
சீடர்கள் சொன்னார்கள் குருவே எங்கள் ஐயத்தையே தாங்கள் தான் தீர்த்து வைக்கிறீர்கள். தங்களுக்கே ஐயமா?
அப்படி என்ன ஐயம் என்றார்கள்.
குரு சொன்னார் வேறு ஒன்றுமில்லை நான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்....
அப்போது கனவு வந்தது. அந்தக் கனவில் பட்டாம்பூச்சி ஒன்று பறந்து வந்து பல பூக்களில் அமர்ந்து தேனருந்தியது. இது தான் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்திய கனவு என்றார்.
சீடர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை..
இதில் என்ன ஐயம் குருவே என்றார்கள் சீடர்கள்.
குரு சொன்னார்.....
நான் தூங்கினேன் கனவு வந்தது. கனவில் பட்டாம்பூச்சி வந்தது..

என் கனவில் பட்டாம்பூச்சி வந்ததா?
இல்லை பட்டாம்பூச்சியின் கனவு தான் என் வாழ்கையா?


இது தான் எனது ஐயம் என்றார் குரு.

குருவுக்கு மட்டுமில்லை எனக்கும் இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை.

மாறும் உலகில் மாற்றம் ஒன்று தான் மாற்றமில்லாதது. அந்த மாற்றங்களுக்கான காரண காரியத் தொடர்புகளை ஆன்மீகமும், அறிவியலும் விளக்க முற்படுகின்றன. ஆயினும் இது போன்ற சில கேள்விகளுக்கு இன்று வரை விடை தெரியவில்லை.

5 கருத்துகள்:

  1. இந்த விடைத்தாள் வாழ்கையில் வினாக்கள் விளங்குவதில்லை..
    விடிவெள்ளி வந்தாலும் விண்மீன்கள் விழ்வது இல்லை..வேதனைகள் விடுவதில்லை விரகங்களும் தீர்வதில்லை ஆனாலும் இது தோல்வி இல்லை வெறும் துவக்கம் தான்..தெளிவான தொன்மையான பல சிறப்பு பயனுள்ள தகவல்கள் இங்கு பரிமாறபட்டுள்ளது....மேலும் பயின்று பயனுற எண்ணுகிறேன்......

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. பட்டாம்பூச்சி வாழ்க்கையே கனவு போன்றது.
    கனவே கனவு காணுமா?

    பதிலளிநீக்கு
  4. குரு அல்லவா!

    பட்டாம்பூச்சியும் அவரே!

    அதனால்தான் இந்த வார்த்தைகள்..

    பதிலளிநீக்கு
  5. பட்டாம்பூச்சியும் குருவும் ஒன்று.
    தேன் என்னும் அறிவுதாகத்தில் பூக்களில் அமரும் பொழுது, அந்த மலர் ,வண்ணத்துப் பூச்சிக்குக் கல்வி கற்கும் கூடம்.
    அமரும் அடுத்தமலர், வ.பூச்சிக்குக் கற்பிக்கும் வகுப்பறை.
    தான் பெற்ற மகரந்தப்பொடிகளை ஊட்டி, மாணவனை முதிர்ச்சியடையச் செய்கிறது.
    பட்டாம் பூச்சியின் பிறவியின் லட்சியமே ,தேன் தேடிப் போவது போல், மலர்களின் வளர்ச்சிக்கு உதவுவதுதான் .
    குருவின் கடமையும் அதுதானே.
    மாணவமணிகளை உயர்த்துவதுதான்...
    அவரது கனவில் பட்டாம்பூச்சி வந்தது குறித்து அவர் ஏன் ஐயம் கொண்டார்?
    ஒரு வேளை அவர் தன் கடமையிலிருந்து சிறிது பிசகி இருப்பாரோ?

    பதிலளிநீக்கு