வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 8 ஏப்ரல், 2009

பசி

தினமும் சாப்பிடுகிறோம் பசி அடங்கிவிடுகிறதா? மீண்டும் மீண்டும் பசிக்கிறது. என்ன கொடும சார் இது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பசி என்றால் என்ன? என்று கேட்கும் மக்கள் ஒரு புறம் இருக்க.இன்னொரு பக்கம் தன் வயிற்றோடு போராட்டம் நடத்தும் கூட்டம் என்ன உலகம் இது...!
தமிழிலக்கியங்கள் பசியை மிகுதியாகப் பாடியுள்ளன. ஆற்றுப் படை இலக்கியங்கள், மணிமேகலை, திருமந்திரம்,என ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கு.
இங்கு ஔவையார் நல்வழி என்னும் நூலில், வயிற்றோடு ஒரு வாக்கு வாதம் நடத்திப் பார்த்துள்ளார்.

பசி கொடியது

11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.


துன்பம் மிகுந்த என் வயிறே உணவு கிடைக்காத போது ஒரு நாளைக்கு உணவு உண்ணாமல் ஒழி என்றால் கேட்கமாட்டாய். உணவு கிடைக்கும் போது இருநாளைக்கு உணவினை உண்டு கொள் என்றால் அதுவும் உண்ணமாட்டாய்.
ஏ.... வயிறே உன்னோடு சேர்ந்து வாழ்ந்து காலம் தள்ளுதல் அரிது.
என்பது பாடலின் கருத்தாகும். இப்பாடல் நான் ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும் நினைவுக்கு வருகிறது.அப்போது பசி என் வரமா? சாபமா? என்ற வினா எனக்குள்ளே வந்து வந்து போகிறது.

2 கருத்துகள்:

 1. ஒவ்வை காலத்திலேயே பாடப்பட்டது
  இந்த வயிற்றுப்பாடு.....

  இலக்கிய நயமாக நீங்கள் என்றோ சொல்லியாச்சா குணா?
  உண்மைத் தான் இந்த பசி வரமா? சாபமா என்னுள்ளும் இப்போது எழுகிறது இந்த சந்தேகம்........

  சங்கக் காலத்தில் இத்தகைய வருமை வாழ்ந்து வந்ததா குணா?

  பதிலளிநீக்கு
 2. இரவு பகல் இன்பம் துன்பம் போல
  செல்வமும் வறுமையும் அன்றும் இருந்தது...

  பசி வரமே ஏனென்றால் உயிர்களின் இயக்கத்துக்குக் காரணமாக அமைவது பசி அல்லவா..!

  பதிலளிநீக்கு