வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

கங்குல் வெள்ளத்தார்

'எல்லை கழிய முல்லை மலர
கதிர் சினம் தணிந்த கையறு மாலை
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்
எவன்கொல் வாழி? – தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே'

குறுந்தொகை-387.


பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கித்தி வன்புறை எதிரழிந்து கூறியது.

தலைவனின் பிரிவால் தலைவி துன்புற்றிருக்கிறாள். தோழி ஆற்றியிருக்கவேண்டும் என்று கூறிகிறாள். அதற்குத் தலைவி,
மாலைப் பொழுதிலாவது ஒருவாறு ஆற்றியிருக்கலாம். ஆனால் அம்மாலையின் முடிவில் வரும் இரவு என்னும் ஊழி வெள்ளம் கடலைக் காட்டிலும் பெரியதாகவுள்ளது.அவ்வெள்ளத்தை எவ்வாறு நீந்திக் கடக்க முடியும் எனப் புலம்புகிறாள்.

தலைவன் பிரிவால் வாடும் தலைவிக்கு இரவுப் பொழுது “கங்குல் வெள்ளமாக“ கடலைவிடப் பெரிய பரப்பாக இருந்தது எனத் தலைவியின் மனநிலையைக் கங்குல் வெள்ளத்தோடு இயைபு படுத்திப் பாடியமையால் இப்புலவர் கங்குல் வெள்ளத்தார்  எனப் பெயர் பெற்றார்.
(கங்குல் வெள்ளம்-இரவாகிய ஊழிவெள்ளம்)

சங்க இலக்கியத்தில் தொடரால் பெயர் பெற்ற புலவர்களின் வரிசையில் இப்புலவருக்கான பெயர்காரணத்தை எடுத்தியம்புவதாக இப்பாடல் அமைந்தது.

7 கருத்துகள்:

 1. கங்குல் வெள்ளம் என்ற புது வார்த்தையை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. நல்ல எடுத்துத் காட்டு முனைவரே!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 3. அறியாத தகவல்...

  பகிர்வுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 4. எதிர்பார்த்து
  எதிர்பார்த்து
  கிடைக்காமல் போன ஒன்று
  இன்று முழுதும் கிடைக்காது
  என்று தெரிகையில் அதன் பின்னர் வரும் பொழுதுகளின்
  ஓட்டங்களை எதிர்மறையாக நிறுத்தி வைப்பதுபோல தோன்றும்.
  கடலின் பரப்பிற்கு மேலானது என்று பிரிவுத் துயரை
  சொல்லியிருப்பது மிகவும்
  சாலச் சிறந்தது முனைவரே....

  பதிலளிநீக்கு
 5. நன்றி ஜீவா
  நன்றி புலவரே
  நன்றி மகேந்திரன்
  நன்றி இராஜா

  பதிலளிநீக்கு
 6. நல்ல விளக்கம். இந்தப் பாடலுக்கு ஒரு சுவையான விளக்கம் தேடி இணையத்தைத் துழாவியபோது உங்களைக் கண்டுபிடித்தேன்.. நன்றி.. இவ்விளக்கத்தை என் கவிதைப் பதிவு ஒன்றிலும் சுட்டி மூலம் இணைத்துள்ளேன்

  பதிலளிநீக்கு