Thursday, June 9, 2011

பலவீனமே பலம்!


பலம் என்பதற்கும் பலவீனம் என்பதற்குமான அளவீடுகள் சூழலுக்குத் தக்க மாறிப்போய்விடுகின்றன.

பலமே சிலருக்குப் பலவீனமாகிவிடுகிது.
பலவீனமே சிலருக்குப் பலமாகிப்போகிறது.

இதோ இவருக்கு உடல் குறையே பலமாகப் போனது.


தாமசு ஆல்வா எடிசன் காது கேளாதவராவார். அவர் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் போது அவர் கவனம் முழுக்க கண்டுபிடிக்க வேண்டிய பொருளின் மீது மட்டுமே இருக்கும். ஒரு நாள் அவரது நண்பர் ஒருவர்..

“எடிசன் உங்களுக்குக் காது கேட்கவில்லையே இந்தக் குறைபாடு தங்களை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது?“ என்று கேட்டார்.
அதற்கு எடிசன்..
“எனக்குக் காது கேட்கவில்லையே என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. அது எனக்கு பலவகையில் உதவியாகவுள்ளது. நான் ஆய்வில் ஈடுபடும் போது யார் என்னை அழைத்தாலும் எனக்குக் கேட்பதில்லை. அதனால் என் எண்ணம் சிதையாமல் என்னால் ஆய்வு செய்யமுடிகிறது என்றார்.இதோ ஒட்டக்கூத்தருக்கு தற்பெருமையே பலவீனமாகிப்போகிறது

ஒரு தடவை ஒட்டக்கூத்தர் புகழேந்தியைப் பார்த்து ..

எங்கள் சோழமன்னர் முதுகுக்குக் கவசம் அணிவதே இல்லை.
உங்கள் பாண்டிய மன்னர் தான் உறுதியான முதுகுக் கவசம் அணிகிறார் என்றார். எங்கள் மன்னர் ஏன் முதுகுக் கவசம் அணிவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா..?
எங்கள் மன்னர் புறமுதுகு காட்டி ஓடுவதே இல்லை அதனால் தான் என்றார்.
அதற்கு புகழேந்திப்புலவர்....
உங்கள் மன்னர் கவசம் அணியாததற்குக் காரணம் நீங்கள் சொன்னது அல்ல. புறமுதுகிட்டு ஓடும் கோழைகள் மீது எங்கள் பாண்டிய மன்னர் வேல் எறிவதில்லை என்ற நம்பிக்கைதான் காரணம் என்றார்.


இதோ இந்த மாதர் சங்கத்தின் பலவீனமே அவர்கள் நினைத்ததை சாதிக்கும் பலமாக மாறிப்போகிறது.


பெர்னாட்சாவுக்கு ஒரு மாதர் சங்கத்திடமிருந்து தாங்கள் எழுதிய புத்தகம் ஒன்றை இலவசமாக அனுப்பிவைக்கும் படி கடிதம் ஒன்று வந்தது.
பெர்னாட்சா புத்தகம் எதையும் அனுப்பாமல் மாதர் சங்கம் எழுதிய கடிதத்திலேயே சிகப்பு மையால் “ நான் எழுதிய புத்தகத்தை விலை கொடுத்துக் கூட உங்களால் வாங்கமுடியவில்லை. மிக மிக வெட்கம் என் புத்தகத்துக்காக 12 சில்லிங் 6பென்சு செலவழிக்க முடியாத மாதர் சங்கம் இருப்பதே கேவலமானது என்று எழுதி அனுப்பியிருந்தார்.

நான்கு நாட்களுக்குப்பின்னர் பெர்னாட்சாவுக்கு மீண்டும் ஒரு கடிதம் மாதர் சங்கத்திடமிருந்து வந்தது.

“அன்புடைய பெர்னாட்சாவுக்கு உங்கள் கையெழுத்திட்ட கடிதம் கிடைக்கப்பெற்றோம். மிக்க மகிழ்ச்சி. அதை ஒரு புத்தக வியாபாரியிடம் காட்டினோம். அதை அவர் விலைக்கு எடுத்துக்கொண்டு உங்கள் புத்தகம் ஒன்றைக் கொடுத்துவிட்டார். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி“ என்று அதில் எழுதியிருந்தது.கீழே வீழ்வது பலவீனமானலும் மீண்டும் எழுவதே பலமாகிறது.

ஓர் இராணுவ வீரனை நெப்போலியன் முன் கொண்டு வந்து நிறுத்தினார் உயர் அதிகாரி. “இவன் அவ்வளவு திறமையானவன் அல்ல அதனால் போரிலிருந்து இவனுக்கு ஓய்வளிக்கவேண்டும்.“ என்று அந்த உயர் அதிகாரி கூறினார்.
இவன் என்ன செய்தான் என்று கேட்டார் நெப்போலியன்.

“எதிரிகள் தாக்குதலில் காயம்பட்டு ஒன்பது முறை கீழே விழுந்தான் பத்தாவது முறைதான் எழுந்தான்“ என்றார்.

உடனே நெப்போலியன் முகம் பிரகாசமானது. வீரனைப்பார்த்து, “உன் விடா முயற்சியையும் வீரத்தையும் நான் பாராட்டுகிறேன். ஒன்பது முறை வீழ்ந்தாலும் சோர்ந்துவிடாமல் பத்தாவது முறை எழுந்து நின்று வெற்றிபெற்றாயே நீதான் மற்றவர்களை விட மாவீரன் என்று வாழ்த்தினார்.

14 comments:

 1. நீங்கள் சொல்வது போலத்தான் .வானத்தில் இருள் வரும்போதுதானே நட்ச்சத்திரங்கள் பிரகாசிக்கின்றன .....

  ReplyDelete
 2. அழகிய படைப்பு...
  வாசிக்க வாசிக்க வாசிக்கத்தூண்டுகிறது
  அருமை
  தொடருங்க....

  நம்ம பக்கமும் உங்க கருத்தை எதிபார்க்கிறேன்

  ReplyDelete
 3. பலவீனத்தையே பலமாக்கிக் கொள்வது அவரவர் கையில்தான் உள்ளது!மிக அருமையான தொகுப்பு!

  ReplyDelete
 4. @vidivelli கருத்துரைக்கு நன்றிகள் விடிவெள்ளி.

  ReplyDelete
 5. @சென்னை பித்தன் உண்மைதான் ஐயா.

  தன் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை உணர்ந்து அதை ஈடுசெய்யத் தெரிந்தவர்கள் வாழ்வில் வெற்றிபெற்றுவிடுகிறார்கள்.

  ReplyDelete
 6. தாங்கள் கூறிய அனைத்தும் படிக்க மிகவும் ஸ்வாரஸ்யமானதாகவே இருந்தன.

  இதையே தான் SWOT Analysis என்று கூறுகிறார்கள்.

  அதாவது
  STRENGTH,
  WEAKNESS,
  OPPORTUNITIES &
  THREATS
  நம் பலம் என்ன?
  நம் பல்கீனம் என்ன?
  நமக்குள்ள வாய்ப்புகள் என்ன?
  நமக்குள்ள அச்சுறுத்தல்கள் என்ன?

  என்பது தெரிந்து திட்டமிட்டால்
  வெற்றி இலக்குகளை சுலபமாக அடையமுடியும் என்று மிகப்பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சிறப்புப்பயிற்சி வகுப்புகளில் சொல்லித் தருகிறார்கள்.

  நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. பலம் பலவீனமாகாமல் போவதும், பலவீனத்தை பலமாக ஆக்குவதும் நம் கையில் தானுள்ளது.

  ReplyDelete
 8. @வை.கோபாலகிருஷ்ணன் மிகவும் அழகாகச் சொன்னீங்க ஐயா.

  தன்னை உணர்தல் வெற்றிக்கான முதல்படி என்பதை தங்கள் கருத்துரை மேலும் புலப்படுத்துகிறது.

  நன்றி.

  ReplyDelete
 9. தகுந்த முறையில் திட்டமிட்டு செயல்பட்டால் பலவீனம் கூட தக்க பலமே.
  எதிரியின் பலத்தை அறியாமல் செயல்பட்டால் பலம் கூட பலவீனமே....

  உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 10. எம் பலவீனம் சிலருக்குப் பலமாக மாறுகிறதே !

  ReplyDelete
 11. பலவீனம் பலமாய் பலமே பலவீனமாய் என அருமையாய் உதாரணத்தோடு விளக்கியிருக்குரீர்கள் மிக்க நன்றி

  இதுவே எனக்கு ஒரு உத்வேகமாய் ஒரு கவிதையாகும் என்று நம்புகிறேன்

  ஜேகே

  ReplyDelete
 12. ..ஒன்பது முறை வீழ்ந்தாலும் சோர்ந்துவிடாமல் பத்தாவது முறை எழுந்து நின்று வெற்றிபெற்றாயே நீதான் மற்றவர்களை விட மாவீரன் என்று வாழ்த்தினார்...''
  முழுவதும் தேன் துளிகளாக உள்ளன. உங்கள் சிந்தனையை எண்ணி வியக்கிறேன். இறை ஆசி கிட்டட்டும். படிக்கப் படிக்க மிகவும் பிடிக்கிறது.வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete