வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 23 ஜூன், 2011

ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பு (கூகுள்)கூகுள் பல மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு சேவை வழங்கி வந்தபோதெல்லாம் இந்த சேவை தமிழுக்கும் இலக்கண மரபுகளுடன் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற வருத்தம் பலருக்கும் இருந்துவந்தது. இதனை உணர்ந்து கூகுள் நிறுவனத்தார் அதற்கும் புதிய சேவையை வழங்கியமை பாராட்டுக்குரியது. இதனால் தமிழர்களின் இணையப் பயன்பாடு மேலும் அதிகரிக்கும்.

இந்த சேவையை இந்த இணைப்பு வழியே பெறமுடியும்.

இதுவரை தமிங்கில வழியே தமிழ் எழுதியவர்கள் இலக்கண மரபுகளுடன் தமிழ் மொழியை ஆங்கில வழி எழுதவும் இந்த தொழில்நுட்பம் துணைநிற்கும்.

அறிவுக்கு மொழி தடையில்லை
என்ற உயரிய நிலையை அடைய இத்தகைய கண்டுபிடிப்புகள் மிகவும் தேவையானவை என்றே கருதுகிறேன்.

13 கருத்துகள்:

 1. நீங்களும் போட்டு இருக்கீங்களே கவனிக்க வில்லை நண்பா நானும் எனது தளத்தில் இதையே தான் போட்டிருக்கிறேன். மன்னிக்கவும் முன்பே பார்த்திருந்தால் போட்டிருக்க மாட்டேன்.

  பதிலளிநீக்கு
 2. @சசிகுமார்அதனாலென்ன நண்பா இந்த செய்தி பலரையும் சென்றடைய தங்கள் இடுகை தேவையானதுதான்!!

  பதிலளிநீக்கு
 3. அறியத் தந்தமைக்கு நன்றி குணா !

  பதிலளிநீக்கு
 4. தகவலுக்கு மிக்க நன்றி முனைவர் அவர்களே..!

  பதிலளிநீக்கு
 5. அப்படியே நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் அதில் உள்ள சில குறைகளை நீக்க நான் முடிவு செய்துள்ளேன், அனைவரும் ஒன்று கூடினால் கொஞ்சம் சீக்கிரமாகவே தமிழ் இலக்கியங்கள் மொழிகள் கடந்து பரவும் என்பதில் ஐயமில்லை...

  பதிலளிநீக்கு