வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 6 ஜூன், 2011

சங்க இலக்கியம் -காட்சிப் பதிவு.

சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது சங்ககாலக் காட்சி ஒன்று மனதில் பதிகிறது.

நான் கண்ட சங்ககாலக்காட்சியை உங்களுக்கும் தெரியவைக்கும் முயற்சிதான் இது...

பாடல் இதோ..


எழுதரு மதியம் கடற் கண்டாங்கு
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன்
ஞாயிறு அணையன் தோழி
நெருஞ்சி அணைய என் பெரும் பணைத் தோளே.

குறுந்தொகை - 315
வரைவிடை வேறுபடுகின்றாய் என்ற தோழிக்கு கிழத்தி உரைத்தது.

தோழி..
கடலிலிருந்து மேலெழும் முழு நிலவினைப் பார்த்தால்
அதன் ஒளி வெள்ளம் மலையிலிருந்து விழும் அருவி போலவே உள்ளது.

அத்தகு உயர்ந்த ஓங்கிய மலைநாடன் தலைவன். அவன் கதிரவனைப் போன்றவன்
என் தோள்கள் கதிரவனையே நோக்கும் நெருஞ்சி மலர் போன்றவை.

(அருவி மேலிருந்து பலரும் காண கீழ் இறங்கி வரும் என்பது, தலைவன் தலைவியைப் பலரும் காண வரைந்து கொள்ள வருவான் என்பது உணர்த்தப்பட்டது.)

சொற்பொருள்

வரைவு - திருமணம்
கிழத்தி - தலைவி
மதியம் - நிலா
பணைத்தோள் - பருத்த தோள், மூங்கில் போன்ற தோள்.

10 கருத்துகள்:

 1. பார்வை உங்களுடையது குணா..காட்சி எங்களுக்காக..அழகு சங்க இலக்கியம் என்றும் நீங்கள் பரிமாறும் விதம்...

  பதிலளிநீக்கு
 2. @தமிழரசி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்.

  பதிலளிநீக்கு
 3. .அழகு சங்க இலக்கியம் என்றும் நீங்கள் பரிமாறும் விதம்...

  பதிலளிநீக்கு
 4. இயற்கையின் ஒப்பீடு காதலன் காதலி அருவி.ஒளியென்று அட்டகாசம் குணா !

  பதிலளிநீக்கு
 5. அருமையான பகிர்வுக்கு.. இப்படியான பதிவுகளை அதிகம் எதிர்பாக்கிறேன். இவ்வளவுகாலமும் 'கதிரவனையே நோக்கும் சூரிய காந்தி போல' என்ற உவமையைதான் பயன்படுத்தியிருக்கிறேன், படித்திருக்கிறேன். 'கதிரவனை நோக்கும் நெருஞ்சி மலர் போல' புதிய விடயம் ஒன்றை கற்றுக்கொண்டேன்.நன்றி.

  அஷ்வின் அரங்கம் இன்றைய பதிவு

  பதிலளிநீக்கு