வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 3 ஜூன், 2011

சிரல்வாய்த் தளவு


'சிரல் வாய் உற்ற தளவின்'

நற்றிணையில் இடம்பெறும் இவ்வுவமை புலவரின் கற்பனைத் திறனுக்குத் தக்கதொரு சான்றாகவும், இயற்கையோடு இயைந்த சங்ககால வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.

'மீன்கொத்திப் பறவையின் வாய்போன்ற அரும்புகளைக் கொண்ட முல்லை' என்பது இதன் பொருளாகும்.

தமிழ்ச்சொல் அறிவோம்

தளவம் - முல்லை மலர்
சிரல் - மீன்கொத்திப் பறவை

2 கருத்துகள்:

  1. தமிழ் மொழி வளர்த்தல் குறித்த கருத்து விவாதம் ஏதும் உங்கள் இடுக்கையில் இதற்க்கு முன் நடைபெற்றதுண்டா?

    பதிலளிநீக்கு
  2. உவமை அருமை. படங்களும் பொருத்தமே. பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு