வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 23 ஜூன், 2011

பொய் சொல்லிகள்.

எல்லோருமே பொய் சொல்கிறோம்.
எவ்வளவு பொய் சொல்கிறோம்?
எதற்காகப் பொய் சொல்கிறோம்?
என்பதில் தான் வேறுபாடு இருக்கிறது.

அரிச்சந்திரனுக்குப் பிறகு பொய்சொல்லாதவர்களை விரல்விட்டுத்தான் எண்ணவேண்டியதாக இருக்கிறது.

தவறான அபிப்பிராயங்கள் பொய்களை விடப் பெரிய எதிரிகள்!

என்கிறது ஒரு பொன்மொழி.

ஒவ்வொரு பொய்யும் ஒவ்வொரு பல்லைத் தட்டுவதாக
இருந்தால் யாருக்கும் பல்லே இருக்காது.


என்கிறது இன்னொரு அனுபவமொழி.

பொய் பற்றிய ஆய்வு முடிவுகள்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 4 பொய்கள் சொல்கிறார்கள். ஆண்டுக்கு 1460 பொய்களை ஆண்டு முழுவதும் சொல்கிறார்கள்.

பெரும்பாலானோர் சொல்லும் ஒரே பொய் “நான் நன்றாக இருக்கிறேன்“ என்பதாகும்.

அண்டப்புளுகு (பூமி அளவுக்குப் பெரிய பொய்.)
ஆகாசப்புளுகு (வானம் அளவுக்குப் பெரிய பொய்.) என்பார்கள்.


 ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணலாம் என்று சொல்லுவாங்க.

(ஆயிரம் பேருக்குப் போய் சொல்லிக் கல்யாணம் செய்யனும் என்பதே உண்மையான பொருள்)

 விற்பனைப் பிரதிநிதியின் தகுதி

கையில பை
கழுத்துல டை
வாயில பொய்!

திரைப்படப் பாடல்கள்..

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே!

கவிதைக்குப் பொய்யழகு!

ஒரு பொய்யாவது சொல் கண்ணே!


பொய்யின் வகைகள்


1. சுயநலப் பொய்
2. பொது நலப் பொய்
3. பொழுதுபோக்குப் பொய்
4. மகிழ்விக்கும் பொய்
5. அழவைக்கும் பொய்
6. ஏமாற்றும் பொய்
7. தன்னம்பிக்கைக்காக சொல்லப்படும் பொய்
8. மூடநம்பிக்கையை வளர்க்கும் பொய்
9. கவி நயத்துக்காக சொல்லும் பொய்
10.கதையின் வளத்துக்காகச் சேர்க்கும் பொய்

இவற்றில் நாம் சொல்லும் பொய் எந்த வகையில் வருகிறது என்று மதிப்பிட்டுக்கொள்வோமா..?

16 கருத்துகள்:

 1. @"என் ராஜபாட்டை"- ராஜாநன்றி நண்பா

  தங்கள் தளத்தில் கருத்துரையளிப்பதில் சிக்கல் இருக்கிறது நண்பா

  பதிலளிநீக்கு
 2. முற்றும் துறந்த முனிவர்களே.. சில நேரம் பொய்யுரைத்து விடுகின்றனர்...
  வாழ்க்கையில் பொய் சில நேரங்களில் அவசர ...அவசிய தேவையாகிறதென்னவோ....உண்மைதான்...!!!
  நீங்கள் சொல்வதும் நியாயம் தான்....!!! குழப்பத்தில் இருந்து விடுபட...வள்ளுவனே துணை "பொய்மையும் வாய்மை இடத்து........ "

  பதிலளிநீக்கு
 3. நம்ம தொழிலையும் உட்டுவைக்கலையா? ( விற்பனை பிரதிநிதி )

  :-)

  பதிலளிநீக்கு
 4. பொய் பொய்யாய் எத்தனை பொய்க்ள்.

  பதிலளிநீக்கு
 5. விற்பனை பிரதிநிதி தன் வாடிக்கையாளரிடம் பொய் சொன்னால் அவன் வாழ்க்கை அழிந்து விடும் என்பது விற்பனை பிரதிநிதியாய் இருந்த பொழுது அறிந்து கொண்டது... அவன் சொல்லும் பொய் அவனின் நிறுவனத்திடமும் மேலாளரிடமும் தான்..

  பதிலளிநீக்கு
 6. பொய்யைப்பற்றிய தங்கள் பதிவும் அருமை.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. வாய்மை அதிகாரத்தையும் பொய் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளையும் பதிவாக்கியது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 8. பொய்யில் சின்ன பொய்,பெரிய பொய்என்றெல்லாம் இல்ல.உள்ளதை உள்ளதென்றும்,இல்லதை இல்லவென்றும் சொல்ல வேண்டும்...

  பதிலளிநீக்கு