Thursday, June 16, 2011

கல்வி + அறிவு = வாழ்க்கை!கல்வி என்றால் என்ன?
கல்வியை கல்விநிலையங்களில் மட்டும்தான் பெறமுடியுமா?
அச்சடித்த காகிதங்களிலும்..
வாங்கும் மதிப்பெண்களிலும்..
வைத்திருக்கும் பட்டங்களிலும் தான் கல்வி இருக்கிறதா?

நகலெடுக்கும் இயந்திரங்களா மாணவர்கள்?
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளா மாணவர்கள்?

கல்விச் சாலைகள் கூடா? கூண்டா?
பறவைகள் கட்டும் கூட்டில் அவற்றுக்கு சுதந்திரம் இருக்கும்.
கிளிகள் வாழும் கூண்டுக்குள்..???

இதுவல்லவா கல்வி!

o “எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்குமோ,
விரிந்த அறிவைத் தருமோ,
ஒருவனைத் தன் சொந்தக்காலில் நிற்கச் செய்யுமோ
அத்தகைய கல்வி தான் நமக்குத் தேவை.
மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்துவத்தை
வெளிப்படுத்துவதே கல்வி.
அறிவு வளர்ச்சிக்கு ஒரேயொரு வழிதான் உண்டு.
அதுதான் மனதை ஒருமுகப்படுத்துதல். கல்வியின்
இலட்சியமே மனதை ஒருமுப்படுத்துவதுதான்.“
– விவேகானந்தர்.

o உயர்கல்வியின் ஒட்டுமொத்த நோக்கமே நல்ல எண்ணங்களை உருவாக்குவதுதான் – பிளாட்டோ.


நான் கண்டவரை என் அனுபவத்தில்....


கல்வியால் கிடைக்கும் அறிவு வாழ்க்கைக்குப் பயன்படும்போது அந்த வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கையாக அமைகிறது. அந்த வாழ்க்கை தரமான நல்லதொரு சமூகத்தை உருவாக்கத் துணைநிற்கிறது!

கல்வி என்பது படிக்கும் ஏட்டில் மட்டும் இல்லை!
நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் இருக்கிறது கல்வி என்றே நம்புகிறேன்.

(அரசுப் பள்ளிக்கூடத்தில் மகளைச் சேர்த்த ஈரோடு கலெக்டர் ) என பரபரபரபரப்பாக ஈரோடு மக்கள் பேசிக்கிறாங்க!!
பரபரப்பா பேசறதுக்கு இதுல என்ன இருக்குங்கறார் அந்த மாவட்டக் கலெக்டர்.
(மக்களோட வியப்புக்கு என்ன காரணம்? அரசுப்பள்ளியில் தரமான கல்வி கிடைக்குமா? என்ற கேள்விதான்)

இதுவே இன்றைய கல்விக்கான சரியான சான்றாக அமையும் என நினைக்கிறேன்.

22 comments:

 1. //கல்வி என்பது படிக்கும் ஏட்டில் மட்டும் இல்லை!
  நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் இருக்கிறது கல்வி//

  அருமை!!

  ReplyDelete
 2. ///கல்வி என்பது படிக்கும் ஏட்டில் மட்டும் இல்லை!
  நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் இருக்கிறது கல்வி என்றே நம்புகிறேன்./// உங்கள் சிந்தனை நன்றாய் இருக்கிறது நண்பா ...

  ReplyDelete
 3. அருமையான பகிர்வு

  ReplyDelete
 4. அவர் தான் நாட்டோடு சார்ந்திருப்பதை உணர்த்துகிறார்.
  அந்தப் பாடசலையும் அதை உணர்த்துமா...அந்த மாணவியின் எதிர்காலத்தை வளமாக்குமா என்பதே கேள்வி !

  ReplyDelete
 5. உண்மைதான் .. கல்வியை வசதியை பெருக்க பயன்படுத்தி கொள்ளும் ஆயுதமாகி போனதன் விளைவு இது ..
  நன்றி ..

  ReplyDelete
 6. நல்ல சிந்தனை.
  //கல்வியால் கிடைக்கும் அறிவு வாழ்க்கைக்குப் பயன்படும்போது அந்த வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கையாக அமைகிறது//
  உண்மை.

  ReplyDelete
 7. நல்ல பதிவு. விவேகானந்தர் சொல்லுவது யாவும் மிகச்சிறந்த கருத்துக்கள்.

  ReplyDelete
 8. உண்மையான கல்வி குறித்து ஒரு அருமையான விளக்கம்

  ReplyDelete
 9. குணா அருமையா தெளிவுபடுத்தியிருக்கீங்க..எல்லாம் யோசிப்போம் பாராட்டுவோம் பின்பற்றுவோமா? அப்படின்னு கேட்டா கண்டிப்பா மாட்டோம்..

  ReplyDelete
 10. கலெக்டருக்கு என்ன ஆச்சு

  ReplyDelete
 11. கல்வி பற்றிய உங்களின் பார்வை அருமை... சரியா சொன்னீங்க... அரசு பள்ளியில் சேர்ப்பது நியூஸ் ஆகற அளவுக்கு இருக்குங்க... அந்த அளவுக்கு மேல் தட்டு கல்வி வியாபாரமாவும் தரமானதாவும் பார்க்கபடுது

  ReplyDelete
 12. வணக்கம் சகோதரரே பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன்
  சென்று அனுபவியுங்கள் வாழ்த்துக்கள்...........

  ReplyDelete
 13. நன்றி இராஜா
  நன்றி அருண்
  நன்றி கந்தசாமி
  நன்றி சசி
  நன்றி தமிழ் உதயம்
  நல்ல கேள்வி ஹேமா நன்றி.

  ReplyDelete
 14. நன்றி அரசன்
  நன்றி சென்னைப் பித்தன் ஐயா
  நன்றி கோபால கிருஷ்ணன் ஐயா
  நன்றி பாலா
  நன்றி தமிழசி.

  ReplyDelete
 15. வருகைக்கு நன்றி குணசேகரன்
  உண்மைதான் தங்கமணி
  வருகைக்கு நன்றி அம்பாளடியாள்

  ReplyDelete
 16. ''...கல்வி என்பது படிக்கும் ஏட்டில் மட்டும் இல்லை!
  நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் இருக்கிறது கல்வி என்றே நம்புகிறேன்...'''
  ஏட்டறிவோடு கிடைக்கும் அத்தனை அனுபவமும் அறிவாகிறது என்பது தான் உண்மை.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 17. @kovaikkavi தங்கள் புரிதலுக்கு நன்றி இலங்காதிலகம்.

  ReplyDelete
 18. நல்ல இடுகை . நன்றி

  ReplyDelete