Wednesday, September 7, 2011

உங்கள் பெயரின் பொருள்??

அன்பான உறவுகளே..
இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

பெயர் என்பது இருவகைப்படும்.

1. இடுகுறிப்பெயர் – இட்டுக் குறித்து வழங்குவது.
(மரம் – எல்லா மரங்களுக்கும் பொதுவாக வருவது)
2. காரணப் பெயர் – பொருள் கருதி இடுவது.
(காக்கை- கா கா என்று கரைவதால் காக்கை)

சில ஊர்ப் பெயர்களின் உண்மையான பொருள்.

குளித்தலை – குளிர் தண்டலை (குளிர்ந்த சோலைகள்)
காரைக்குடி – காரைச் செடிகள் அதிகம் கொண்ட ஊர்.
ஈரோடு – இரண்டு ஓடைகள் கொண்டமையால்.
சேலம் – சைலம், மலை
ஆட்டையாம்பட்டி – ஆட்டு இடையன் பட்டி.
இடைபாடி – இடையர்பாடி

“தமிழகம் ஊரும் பேரும்“ என்றொரு பயனுள்ள நூலை தமிழறிஞர் ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். இதில் பல்வேறு ஊர்களுக்கான பெயர்க்காரணத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.

கங்காரு பெயர்க்காரணம்.

கங்காரு என்ற துள்ளிக்குதிக்கும் விலங்கை யாவரும் அறிவர். அதற்கான பெயர் அமைந்த சூழல் மிகவும் நகைச்சுவைக்குரியதாகும். ஆத்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களிடம் அங்கு வந்தவர்கள் கேட்டார்களாம்..

புதுமையாகத் துள்ளிக் குதிக்கும் இந்த விலங்கின் பெயர் என்ன என்று..
அதற்கு அந்த பழங்குடி மக்கள் “கங்காரு“ என்றார்களாம்.

கங்காரு என்றால் அவர்கள் மொழியில் “தெரியாது“ என்று பொருள். இன்று வரை நாம் நமக்கும் தெரியாது தெரியாது என்று தான் அழைத்து வருகிறோம்.

இப்படி பெயர் வைப்பதில் பல உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.

நான் என் மாணவர்களை முதல் வகுப்பில் சந்திக்கும்போதே கேட்கும் முதல்கேள்வி..
உங்கள் பெயர் என்ன? அதன் பொருள் என்ன? என்பதே..

என்னால் முடிந்தவரை அவர்களின் பெயர்களுக்கான காரணத்தையும் அவர்களுக்குப் புரியவைத்திருக்கிறேன்.

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே“ என்று பெருமிதத்துடன் சொல்லும் பெருமை நம் தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு.

பெயரிட்டு அழைக்கும் மரபு காலகாலமாகவே நமக்கு இருந்திருக்கிறது. பெரும்பாலும் காரணம் கருதியே பெயரிட்டு வந்திருக்கிறோம்.

மனிதர்களுக்கான பெயரிடும் மரபு.

1. குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல், பாலை என நிலம் சார்ந்து ஆண்களும் பெண்களும் பெயரிடப்பட்டனர்.
2. அரசமரபு சார்ந்த பொதுவான பெயர்களே யாவருக்கும் வழங்கப்பட்டன.
3. தொழில் சார்ந்த பெயர்களாலும், அப்பெயர்களோடும் சேர்த்து பெயர்கள் வழங்கப்பட்டன.
(கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்)
4. சாதிகளின் அடையாளமாகப் பெயர்கள் வழங்கப்பட்டன.
5. மதத்தின் அடையாளமாகப் பெயர்கள் வழங்கப்பட்டன.
6. மொழியின் அடையாளமாகவும், இனத்தின் அடையாளமாகவும் பெயரிடப்பட்டன.
7. பண்பாட்டின் குறியீடாக பெயர்கள் உருமாறின.
8. தேசத் தலைவர்களின் மீது கொண்ட மதிப்பால் அவர்களின் பெயரிட்டு அழைத்தனர்.
9. கடவுளரின் பெயர்களை இட்டுக்கொண்டனர்.
10. தாத்தா, பாட்டியின் பெயர்களை இடும் மரபும் வந்தது.

இன்றைய சூழலில் பெயரிடுதல்.

1. நாட்டுக்காக உழைக்கும் திரைப்பட நடிகை, நடிகர்களின் பெயர்களை விரும்பி வைத்துக்கொள்கின்றர்.
2. சோதிடம், எண்ணியல் என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி பல்வேறு மொழிகளில் பொருளே இல்லாமலோ, தெரியாமலோ பெயரிட்டுக் கொள்கின்றனர்.
3. அப்பா பெயரில் ஓரெழுத்து, அம்மா பெயரில் ஓரெழுத்து தாத்தா பெயரில் ஓரெழுத்து என்று இட்டுக்கொள்ளும் பெயரிகளில் எவ்வாறு பொருள் கண்டறிவது என்று தலையே சுற்றுகிறது.
4. பாரதி, சூர்யா போன்ற பெயர்களை ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடில்லாமல் இட்டுக்கொள்கிறார்கள்.
5. ன் என்ற இறுதிச் சொல் இவன் ஆண் என்பதையும்
ள் என்ற இறுதிச் சொல் இவள் பெண் என்பதையும் ஒருகாலத்தில் காட்டியது... இன்று..?
இன்று பலருக்குத் தம் பெயரின் பொருள் என்ன என்பதே தெரிவதில்லை. அதைத் தெரிந்து கொள்வதில் அவர்களுக்கும் அந்த அளவுக்கு ஆர்வம் கொள்வதில்லை.

நகைச்சுவை..

ஒரு வீட்டில கணவனுக்கும் மனைவிக்கும் பெயர் வைப்பதில் பெரிய சண்டை தன் அப்பா பெயரைத்தான் வைக்கவேண்டும் என்று கணவனும், தன் அப்பா பெயரைத்தான் வைக்கவேண்டும் என்று மனைவியும் விவாதம் செய்துகொண்டிருக்கும் போது சத்தம் கேட்டு வந்த மூன்றாவது நபர்,

கணவனிடம் கேட்டார்... உங்க அப்பா பெயர் என்ன?
கணவன் சொன்னார் – வெங்கட்ராமன்.
அவர் மனவியிடம் கேட்டார்... உங்க அப்பா பெயர் என்ன?
மனைவி சொன்னார்- கிருஷ்ணன்

இப்போது அந்த மூன்றாம் நபர் அந்தக் குழந்தைக்குப் பெயரிட்டார்.
“வெங்கட்ராம கோபலகிருஷ்ணன் என்று.

கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய குழப்பம்.

வெங்கட்ராமன் என்னோட அப்பா
கிருஷ்ணன் உன்னோட அப்பா

கோபாலன் யாருன்னு அந்த மூன்றாவது நபர்கிட்டே கேட்டாராம் கணவர். அதற்கு அந்த நபர் சொன்னாராம்...

அது என்னோட அப்பா பெயர் என்று!!

இப்படி நம் பெயருக்குப் பின் இருக்கும் பொருள் என்ன என்றுதான் தெரிந்துகொள்வோமே..

அன்பான உறவுகளே..

உங்கள் பெயர்களையும், அதற்கான பொருள் என்ன என்பதையும் நீங்கள் அறிந்த வரை சொல்லுங்கள்..

தெரியாவிட்டால் மறுமொழியில் தெரிவியுங்கள்.

என்னால் முடிந்தவரை நான்சொல்கிறேன்.

நம் பெயர்கள் எந்த அளவுக்கு நம்மொழியின், இனத்தின், பண்பாட்டின் அடையாளத்தோடும், அடையாளமின்றியும் இருக்கிறது என்பதை அறிந்துகொள்வோம்.

முதலாவதாக என்பெயருக்கான காணரத்தைச் சொல்கிறேன்

குணம் - நல்லபண்பு
சீலன் - ஒழுக்கம்

நான் குழந்தையாக இருந்தபோது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தேனாம். அப்போது குணசீலன் என்றொரு மருத்துவர் என்னைக் காப்பாற்றினாராம். அதனால் அவரின் நினைவாக எனக்கு குணசீலன் என்று பெயர் வைத்து விட்டார்களாம்.

473 சங்கப்புலவர்களின் பெயர்கள் தங்கள் பார்வைக்காக.


சரி உங்கள் பெயருக்கான பொருள் சொல்லுங்கள் பார்ப்போம்..

211 comments:

  1. பழமைபேசி

    பழமொழி என்றால் பழைய மொழி என எல்லோரும் கருதுவர். ஆனால், அது அஃதன்று! மாறாக, பழம்+மொழி என்பதே சரியாகும்.

    இன்றே கூட நீங்கள் ஒரு கனிவான முதிர்ச்சியுடைய ஒரு சொற்றொடரைக் கூறுவீர்களேயானால், அதுவும் பழமொழியே!!

    அப்படியாக, கொங்குநாட்டில் பழகப் பாவிக்கும் பழம் போன்ற பேச்சுகளைப் பேசுவது பழமை பேசுவதாகும். அப்படியான, சினையாகு அல்லது காரியாகு பெயர்தான் பழமைபேசி என்பதாகும். எனது இயற்பெயர் மணிவாசகன் என்பதாகும்.

    ReplyDelete
  2. ஃபிஜித்தீவில் மாடுகளுக்கு ( அங்கே எருமைகள் இல்லை) புல்மகாவ் என்று ஃபிஜியன் மொழியில் சொல்கிறார்கள்.

    முதன்முதலில் வெள்ளையர்கள் கொண்டுவந்த பசுவையும் காளையையும் பார்த்த பழங்குடிகள் அவை என்ன என்று கேட்க, Bull Cow என்று வெள்ளையர் சொல்ல, அதுவே பெயராகியது:-)

    ReplyDelete
  3. குணம் - நல்லபண்பு
    சீலன் - ஒழுக்கம்
    மருத்துவர் என்னைக் காப்பாற்றினாராம். அதனால் அவரின் நினைவாக எனக்கு குணசீலன் என்று பெயர் வைத்து விட்டார்களாம்.
    இது காரணப் பெயர்!
    நான் நினைத்தது நல்ல குணத்துடன் கூடிய ஒழுக்க சீலர் தாங்கள் அதனால்தான் இந்த பட்டப் பெயர் வந்தது என்று (உங்களுக்கு பட்டம் கொடுக்கப்பட்டது)

    ReplyDelete
  4. முனைவரே...
    பெயர்க் காரணம் குறித்த பகிர்வு ரொம்ப அருமை நண்பா.
    சில வருடங்களாக காரணப் பெயர்களைவிட நியூமராலஜி பெயர்கள்தான் வைக்கப்படுகின்றன. இல்லையா?
    எனக்கு வைத்த பெயர் குமாரசாமி. எனது தந்தை திருத்துறைப் பூண்டியில் குமாரசாமி ராஜா வீட்டில் கணக்குப்பிள்ளை வேலை பார்த்தார். அவர் ஞாபகமாக வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆறாவது பிறந்ததால் ஆறுமுகம் என்று வைக்க எனது ஐயா (அம்மாவின் அப்பா) விரும்பியிருக்கிறார். அப்புறம் அப்பாவின் விருப்பமும் ஐயாவின் விருப்பமும் முருகன் பெயராகவே இருப்பதால் அப்பா விருப்பம் வென்றது, ஜாதகப் பெயர் குமாரசாமிதான். ஆனால் பள்ளியில் சேர்க்கும் போது என் அம்மா குமார் என்று சேர்த்துவிட்டார். அவ்வளவுதான் என் பெயர்க் காரணம். மற்றபடி இதற்கான நல்ல தமிழ் என்ன என்று நீங்கள் சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. நல்ல பதிவு !பெயர் காரணம் அறிதல் அருமை!அதுவும் நீங்கள் கொடுத்துள்ள “சில ஊர்ப் பெயர்களின் உண்மையான பொருள்”,”கங்காரு பெயர்க்காரணம்” , ”மனிதர்களுக்கான பெயரிடும் மரபு” மேலும் நகைச்சுவையூட்டும் சம்பவம்...உங்கள் பெயர் காரணம் எல்லாமே ஆர்வமளிப்பவை!473 சங்கப்புலவர்களின் பெயர்கள்....அப்பா...அருமை அருமை!
    என் பெயர் தென்றல்-என் தந்தை தமிழில் ஈடுபாடுள்ள தமிழாசிரியர்...இனிமையைத் தரக்கூடிய தென்றலைப் போல் நானும் இனிமையானவளாக மென்மையான குணத்தை உடையவளாக இருக்க வேண்டும் என்றே இப்பெயரை இட்டார்கள்.(ஏமாற்றவில்லை)....ஆனால் வளர்ந்த போது தேவையான இடத்தில் புயலாக மாறவும் கற்று கொடுத்துள்ளார்கள்!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  7. ஆம் ஐயா,இப்பொழுதெல்லாம் யார் நல்ல பெயர்களை வைக்கிறார்கள்.வாயில்நுழையாத பெயர்கள்தான்..

    என் சின்ன பெண்ணிற்கு மகாலக்ஷ்மி என்று பெயர்.ஆனால் பள்ளிக்கூடத்தில் அவள் கூட படிக்கும் பெண்கள் அவளை லக்கி என்றே அழைக்கிறார்கள்..

    ReplyDelete
  8. தமிழில் புகுந்து விளையடுரிங்க

    ReplyDelete
  9. என் பொண்ணுக்கு ஒரு சந்தேகம் எல்லாம் மிருகத்தோட குட்டிகளையும் அதன் அதன் பெயர் வைத்து கூப்பிடுகிறோம்..
    உதாரணம்: நாய் குட்டி, குரங்கு குட்டி, யானை குட்டி.. என்று..
    ஆனால் இந்த மாட்டோட குட்டிய மட்டும் மாட்டு குட்டி என்று கூறாமல் என் கண்ணு குட்டி என்று கூறுகிறோம் என்று கேட்டால்..
    நானும் யார் யாரையோ கேட்டு பதில் கிடைக்காமல் சலித்து போய் விட்டேன்.. மறந்தும் போய் விட்டேன்..
    இன்னிக்கு நீங்களே ஒரு பதிவ எழுதி ஞாபகம் படுத்தி விட்டீர்கள்..
    என் மகளுக்கு கேட்டு சொல்கிறேன்னு வாக்கு குடுத்திருந்தேன்.. காப்பாத்துங்க முனைவரே..

    என் நிஜப் பெயர் - சுரேஸ் - இந்திரன், கிருஷ்ணன், சிவன் என்று எத்தனையோ பொருள் உண்டு..
    என் புனை பெயர் - சுர்யஜீவா - சூரியனையும் எனக்கு பிடித்து ஜீவானந்தம் தோழரையும் இணைத்து சாம்பார் வைத்து விட்டேன்..

    ReplyDelete
  10. எனக்கு தெரியாது .. கருண் குமார் நீங்கள் சொல்லுங்களேன்?

    ReplyDelete
  11. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே“ என்று பெருமிதத்துடன் சொல்லும் பெருமை நம் தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு./

    பெருமையான பகிர்வு.

    ReplyDelete
  12. அப்பப்பா பெயர்க்காரணம் என்ற இந்த பகிர்வு ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒவ்வொரு வரியும் அத்தனை அருமைப்பா...

    பெயர் வைக்கப்பட காரணங்கள் எப்படி எப்படி இருக்கலாம் என்பதில் தொடங்கி உங்கள் பெயருக்கான அர்த்தத்தையும் சொல்லி எங்களையும் கேட்டு மிக மிக அருமைப்பா... தெரியாதென்றால் சொல்லுங்க நானும் தேடி தருகிறேன் என்ற அன்பை என்னவென்று சொல்வது?

    காகா என்று கரைவதால் காக்கை சரி...
    கங்காரு என்றால் தெரியாது என்றா பொருள்? இத்தனை நாள் நாம் அது தெரியாமலேயே நாமும் கங்காரு என்றே அழைத்துக்கொண்டு இருக்கிறோம் :)

    வெங்கடராம கோபாலக்ருஷ்ணன் பெயர் காரணம் படித்து சிரிப்பு வந்துவிட்டது....

    எனக்கு பெயர் வைத்தது என் தாத்தா....

    மஞ்சு = மேகம் அல்லது தாமரை
    பாஷிணி = மொழி

    உங்க பெயர்க்காரணம் படித்து அறிந்தபோது உங்கள் மீது மதிப்பு இன்னமும் கூடுகிறதுப்பா... இறைவனின் அருளால் என்றும் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நலமுடனிருக்க என் அன்பு வாழ்த்துகள்...

    அருமையான பகிர்வுக்கு என் அன்பு நன்றிகள்பா...

    ReplyDelete
    Replies
    1. அருமையான பதிவுகள்...

      Delete
  13. பகிர்வுக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  14. அன்பு நிறை முனைவரே
    பெயருக்கு காரணம் சொல்லிவந்த படைப்பு
    நெஞ்சம் மகிழச் செய்கிறது.

    மகேந்திரன்
    மேகங்களுக்கு கடவுளான தேவலோக இந்திரனின் பெயர்
    மகா இந்திரன்.
    இதுவே நானறிந்தது. இதைத் தாண்டி வேறேனும் இருந்தால்
    தயைகூர்ந்து தெரிவிக்க.

    ஒன்றே ஒன்று முனைவரே, இன்றைய காலத்தில் பெற்றோர்கள்
    தங்கள் குழந்தைகளுக்கு பெயர்வைக்கிறேன் பேர்வழி என்று
    இரண்டு மூன்று எழுத்துக்கு மேல் போகக்கூடாது என்று
    வைப்பதை பார்க்கையில் மனம் சற்று கவலைப் படுகிறது.
    போகின்ற போக்கினில் நம் தமிழ்ப் பெயர்கள் காணாமல் போய்விடுமோ???

    நீங்கள் கொடுத்த விருதை என் வலைப்பூவில் இட்டிருக்கிறேன் முனைவரே. நன்றி.

    ReplyDelete
  15. முனைவர் அவர்களே.... சிறப்பாக தொகுத்திருக்கிறீர்கள். பெயர் காரணம் சூப்பர்

    ReplyDelete
  16. கங்காரு பற்றிய பெயர்காரணம் அருமை. . .ஒரு உயிர் உருவாவத்ர்காண மந்திரம் பிரணவம். கவிதை எனக்கு உயிர், அதை உருவாக்குவதால் என் பெயரை பிரணவன் என வைத்துக்கொண்டேன். . .

    ReplyDelete
  17. சபாஷ் சார்...!

    ReplyDelete
  18. அருமையான பதிவு.
    படிப்பவர்களின் மனதில் நெருக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  19. நான் அங்கங்கே தங்கள் மறுமொழிகளைக் கண்டு முனைவர் என்ற படித்ததும் உங்கள் தளத்தின் பக்கமே வந்ததில்லை.ஆனாலும் சமீபமாகத்தான் துணிச்சல் வந்து உங்கள் வலைப்பக்கம் வருகிறேன்.தமிழை எளிமையாக புகுத்துகின்றீர்கள்.

    வலைப்பக்கத்தின் இடதுபுறம் இணைப்புகள்,லேபில்கள் இருந்தாலும் தங்களின் கடந்த பதிவு,அதற்கு முந்தின பதிவு என்பதும் இருந்தால் என்னை போன்றோர்க்கு எளிமையாக இருக்கும்.லேபில்களில் எங்களுக்கு எந்த தலைப்பு பிடித்திருக்கிறதோ அதை படிக்கலாம்தான்,ஆனால் தங்களின் தினப்பதிவுகளை டேஸ்போர்டில் பாத்துதான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.இதற்கான வசதிகளையும் அமைக்கவும்.தவறென்றால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  20. தங்கள் வருகைக்கும் ஆழ்ந்த வாசிப்புக்கும்

    பழமைபேசி என்னும் சொல்லுக்கான விளக்கமும்

    தங்கள் இயற்பெயரும் சொன்னமைக்கு மகிழ்ச்சி அன்பரே.

    தங்கள் பெயருக்கேற்ப தங்கள் வாசகங்கள் (சொற்கள்) ஒவ்வொன்றும் மணிபோலவே உள்ளன நண்பா.

    அருமை.

    நன்றிகள்.

    ReplyDelete
  21. அரிய புதிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள் துளசிகோபால். அருமை.. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்

    ReplyDelete
  22. "சோதிடம், எண்ணியல் என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி பல்வேறு மொழிகளில் பொருளே இல்லாமலோ, தெரியாமலோ பெயரிட்டுக் கொள்கின்றனர்."

    நச்சென்று சொன்னீர்கள்... நன்றி

    ReplyDelete
  23. பெயர்க்காரணம் பகிர்வு அருமை

    ReplyDelete
  24. பெயர்கள் பற்றி ஒரு அருமையான பதிவு!சந்திரனைச் சேகரித்து வைத்திருக்கும் இறைவன் பெயர் என் பெயர்!சென்னையைச் சேர்ந்த பித்தன்!

    ReplyDelete
  25. பெயர்கள் குறித்த தங்களின் பதிவு மிக அருமை நண்பரே...

    தெரியாது(கங்காரு) என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன் தங்களால்

    தங்களின் அன்புத் தென்றலுக்கு என் மனம்கனிந்த நன்றி...

    பகிர்வுக்கு வாழ்த்துகள் நண்பரே...

    ReplyDelete
  26. பெயர்கள் குறித்த தங்களின் பதிவு மிக அருமை நண்பரே...

    தெரியாது(கங்காரு) என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன் தங்களால்

    தங்களின் அன்புத் தென்றலுக்கு என் மனம்கனிந்த நன்றி...

    பகிர்வுக்கு வாழ்த்துகள் நண்பரே...

    ReplyDelete
  27. பெயரின் பொருள் பதிவு அருமை...

    ReplyDelete
  28. ஊரும் பேரும் கட்டுரையின் விளக்கம் புதுமை.
    குளிர் தண்டலை,விராலிமலை விரலிச்செடி அதிகமாக ஒரு காலத்தில் அந்த மலையில் இருந்துள்ளது.அதனால் அதற்குப் பெயர் விராலிமலை என்று பெயர் வந்ததாம்.
    இப்படி ஆய்வு தொடர வேண்டும். நல்ல பதிவு வாழ்த்துக்கள் முனைவர் அவர்களே
    அன்புடன்
    முனைவர் துரை.மணிகண்டன்

    ReplyDelete
  29. நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இடுகுறிப் பெயர் என்பது முன்னோரால் ஒரு காரணம் குறித்து இடப்பட்டு இப்போது நம்மால் அக்காரணம் அறியப்ப்படாத பெயர் ஆகும். நன்றி.

    ReplyDelete
  30. நல்ல பதிவுங்க! மூன்றாம் நபர் அப்பாபெயரையும் சேர்த்துக் கொண்ட நகைச்சுவையைய் ரொம்பவே ரசித்தேன்

    ReplyDelete
  31. தாங்கள் என்மீது கொண்ட மதிப்புக்கு நன்றிகள் நீடுர் ஐயா.

    என் பெயருக்கு ஏற்ப என் வாழ்வில் நடந்துகொள்ளவே ஒவ்வொரு நாளும் முயற்சித்து வருகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  32. தங்கள் பெயருக்குபின் இருந்த உண்மைகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி குமார்..

    குமரன் என்பதே இதன் தெளிவான வடிவம் என்று கருதுகிறேன் நண்பா.

    ReplyDelete
  33. தங்கள் வருகைக்கும் தங்கள் பெயருக்கான காரணத்தை உரைத்தமைக்கும் நன்றி தென்றல்.


    மிக அழகாக உணர்ந்து உரைத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  34. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராம்வி.

    தாங்கள் சொல்வது உண்மைதான்.

    இப்படித்தான் எவ்வளவு பெரிய பெயர் வைத்தாலும்
    இன்றைய தலைமுறையினர் அதை இரண்டெழுத்துப் பெயராகவோ மூன்றெழுத்துப் பெயராகவோ மாற்றிவிடுகிறார்கள்.

    ReplyDelete
  35. தங்கள் பெயர் விளக்கத்துக்கு நன்றி சூர்யஜீவா.

    விலங்குகளுக்கான பெயர்கள் ஒவ்வொன்றும் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில்

    மரபியல் என்னும் பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    இவற்றை இவ்வாறுதான் அழைக்கவேண்டும் என்று வரையறை உள்ளது.

    கன்றுக் குட்டி என்பதே கண்ணுக்குட்டி இன்று அழைக்கப்டுவதாக உள்ளது.

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  36. தாங்கள் மிகவும் கருணைமிக்கவராக இருக்கவேண்டும் என்று தங்கள் பெற்றோர் விரும்பினார்கள் போல கருன்.

    குமார் என்றால் குமரன் (முருகக் கடவுள்)

    ReplyDelete
  37. வருகைக்கு நன்றி இராஜேஷ்வரி

    வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் தங்கள் பெயர்விளக்கத்துக்கும் நன்றி மஞ்சு..

    தங்கள் பெயருக்கான விளக்கத்தை மிக அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்

    மகிழ்ச்சி.

    ReplyDelete
  38. தாங்கள் சொல்வது உண்மைதான் மகேந்திரன்.
    இன்றைய தலைமுறை இப்படித்தான் செல்கிறது.

    தங்கள் பெயர் விளக்கத்தை அழகாகச் சொல்லியிருக்கீங்க.


    நானளித்த விருதைத் தாங்கள் வலையில் அலங்கரித்மை எண்ணி மகிழ்ந்தேன்

    நன்றி.

    ReplyDelete
  39. நன்றி பிரகாஷ்
    பெயர் விளக்கம் அருமை பிரணவன்
    மகிழ்ச்சி இரத்தினவேல் ஐயா.

    ReplyDelete
  40. தங்கள் வருகை குறித்து மகிழ்சியடைந்தேன் திருமதி ஸ்ரீதர்.
    தங்கள் நலனுக்காகத்தான் வலைப்பக்கத்தின் மேலே பக்கங்கள் பகுதியில் சிறந்த இடுகைகளை வரிசைப்படுத்தி வைத்திருக்கிறேன்

    அறிவுறுத்தலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  41. வருகைக்கு நன்றி நிரோஷ்
    கருத்துரைக்கு நன்றி உங்கள் நண்பன்.
    நன்றி ரெவரி
    ஓ மகிழ்ச்சி சென்னைப்பித்தன் ஐயா

    வருகைக்கு நன்றி இராஜா எம்எஸ்வி

    ReplyDelete
  42. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முனைவர்.துரை மணிகண்டன்.

    தங்கள் விளக்கத்துக்கு நன்றி முனைவர் ஆ.மணி அவர்களே.

    ReplyDelete
  43. நன்றி முனைவரே.. தொல்காப்பியத்தை தேட வேண்டுமா?

    ReplyDelete
  44. கங்காரு என்றால் அவர்கள் மொழியில் “தெரியாது“ என்று பொருள். இன்று வரை நாம் நமக்கும் தெரியாது தெரியாது என்று தான் அழைத்து வருகிறோம்.

    இந்தவிடயம் நகைச்சுவை கலந்த அறிவுரை எமக்கு .அத்தோடு உங்களுக்கு நான்
    ஒன்று சொல்ல வேண்டும் .நம் மக்கள் புலம்பெயர் மண்ணில் வைக்கும் பெயரும்
    ஒருவகையில் இப்படித்தான் .அதில் எந்தப் பொருளும் விளங்காது என்று சொல்வதைவிட
    கிடையாது என்றுகூடச் சொல்லலாம் .மிகவும் அருமையான பகிர்வு மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  45. காரணப்பெயர், இடுகுறிபெயர் பற்றி முன்பே பள்ளியில் படித்திருந்தாலும் திரும்பவும் தங்கள் பதிவின் மூலம் விளக்கமாக அறியமுடிய அறிந்தது.நன்றி.
    நடன சபைக்கு தலைவனான தில்லை நடராசப்பெருமானின் பெயரையே எனக்கு என் தந்தை வைத்துள்ள காரணம் அவர் ஒரு சிவ பக்தர் என்பதால்.

    ReplyDelete
  46. Super பதிவு.பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  47. மகிழ்ச்சி அம்பாளடியாள்.
    தங்கள் பெயர் விளக்கம் அருமை நடனசபாபதி ஐயா
    நன்றி சதீஷ்

    ReplyDelete
  48. பெயரின் விளக்கம்...
    பகிர்வு அனைவரையும் ஒரு நிமிடம்
    நின்று யோசிக்க வைக்கும்...
    நகைசுவை...சுவையுடன்....
    கருத்துரையில்...,
    அவரவர் பெயர்களின்
    அளித்ததும் அருமை.....
    நன்றி

    ReplyDelete
  49. மிகச்சிறந்த அறப்பணி உங்கள் நட்பு தேவையாக உள்ளது ஆதலினால்
    எனது தொடர்பாடலுக்காய்..
    கை பேசி எண்-00917871193354

    உங்கள் நட்பு கிடைக்கும் என நம்பிக்கையாக இருக்கின்றேன்.
    நன்றி.

    இப்படிக்கு.
    யாழகிலன்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி நண்பரே..

      எனது மின்னஞ்சல் முகவரி..
      gunathamizh@gmail.com

      Delete
  50. இளமாறன் பொருள் என்ன?

    ReplyDelete
  51. "இளமாறன்" பெயரின் அர்த்தம் என்ன? pls reply to my mail id lakshmikanth104@gmail.com

    ReplyDelete
    Replies
    1. பொருள்
      மாறன்(பெ)
      பாண்டியன் எனும் மன்னன்
      சடகோபன்
      மாற்றான்: பகைவன்
      மொழிபெயர்ப்புகள்
      ஆங்கிலம்
      king Paṇḍyan
      A Vaiṣṇava saint
      enemy, foe
      விளக்கம்
      மாரன் எனும் சொல் மன்மதனைக் குறிக்கும். மாறன் எனும் சொல் பாண்டியனைக் குறிக்கும். முன்னது வடசொல். பின்னது தமிழ்ச்சொல். சுகுமாரன் என்பது அழகிய மன்மதன் என்னும் பொருள் கொண்ட வடசொல். இதனைச் சிலர் சுகுமாறன் என்றெழுதுகிறார்கள். இது சரிதானா? திருமாறன், நெடுமாறன், நன்மாறன் - இப்பெயர்கள் எல்லாம் தனித்தமிழ்ப் பெயர்கள். இந்தப் பெயர்களில் உள்ள மாறன் (பாண்டியன்) எனும் தமிழ்ப் பெயரை சுகு என்ற வடசொல்லோடு ஓட்டலாமா? அது சுகுமாரன் என்றே எழுதப்பட வேண்டும். சுகுமாறன் என்று இருமொழியும் இணைத்துப் பொருளற்றதாக ஆக்கிவிடுதல் பிழை. (மொழிப் பயிற்சி - 20: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக் கதிர், 27 டிச 2010 )

      Delete
  52. sugumar entra peyarukku enna porul ?

    ReplyDelete
  53. சுகுமாரன் என்பது அழகிய மன்மதன் என்னும் பொருள் கொண்ட வடசொல்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா!

      Delete
    2. இந்த இணையதளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

      Delete
  54. govindarajulu entra peyarukku porul ena?

    ReplyDelete
    Replies
    1. கோவிந்த ராசு என்று சொல்வார்களே அதைத்தான் கோவிந்த ராஜுலு என்று தங்களுக்கு வைத்திருக்கிறார்கள்.

      Delete
  55. Arivazhagan பெயரின் அர்த்தம் என்ன?

    ReplyDelete
    Replies
    1. அறிவும், அழகும் சேர்ந்து பெற்றவர் என்பது தங்கள் பெயருக்கான பொருள் நண்பரே.

      உடல் அழகைவிட அறிவின் அழகே அழகு என்றும் புரிந்துகொள்ளலாம்.
      மிக நல்ல பெயர் நண்பரே.

      Delete
  56. ranjeetha and niroopana yendra peyaruku enna porul?

    ReplyDelete
    Replies
    1. வண்ணமயமான மற்றும் அழகான முகம் .. புன்னகை என்பது தங்கள் பெயரின் பொருள் ரஞ்சிதா.

      Delete
  57. Replies
    1. பெருந்தன்மையானவர் - தாராளமானவர் என்பதுத தங்கள் பெயரின் பொருள் நண்பரே.

      Delete
  58. கிஷோர்குமார் என்பதர்க்கான் பொருள் என்ன?

    ReplyDelete
  59. கிஷொர்குமார் என்பதன் பொருள் என்ன.

    ReplyDelete
    Replies
    1. கிஷோர் என்பதன் பொருள் இளமை என்பதாகும். குமார் என்பது குமரன் (முருகன்) என்று பொருள்படும் நண்பரே.

      Delete
  60. பிரேமா பெயரின் அர்த்தம் என்ன? பெயருக்கு ஏற்றால் போல் குணமும் அமையுமா? நன்றி

    ReplyDelete
    Replies
    1. அன்பு - காதல் - பாசம் என்பது தங்கள் பெயரின் பொருள்.
      பிரேமா என்ற பெயர் வடமொழிப்பெயராகும்.
      பெயருக்கு ஏற்ப நாம் தான் நம் குணத்தை வடிவமைத்துக்கொள்ளவேண்டும் தோழி. தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  61. யுத்ரன் பெயர் விளக்கம் என்ன?

    ReplyDelete
    Replies
    1. உருத்திரன் (Rudra) என்பவர் சைவ சமயக் கடவுளான சிவபெருமானால் அழிக்கும் தொழில் செய்ய உருவாக்கப்பட்டவர் ஆவார். உருத்திரன் என்ற பெயர்தான் யுத்திரன் என்று வைத்திருக்கவேண்டும் என்பது எனது கருத்து

      Delete
  62. prabakaran peyar vilakkam ennna

    ReplyDelete
  63. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_21.html?showComment=1392963937862#c5891393347810975556
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  64. LAKSHAPPREETAM peyarin artham enna.

    ReplyDelete
    Replies
    1. லக்ஷ என்றால் வெள்ளை ரோஜா என்று பொருள்
      பிரிதம் என்றால் அன்பானவர் என்று பொருள்

      Delete
  65. sathish kannan peyarin artham enna

    ReplyDelete
    Replies
    1. Kind affectionate சதீஷ் என்றால் பாசமானவர் என்றும் கண்ணன் என்றால் கடவுளையும் குறிக்கும்.

      Delete
  66. Replies
    1. கடவுள் இலட்சுமியின் கணவன் என்பது தங்கள் பெயரின் பொருள் நாதன் என்பதே நாத் என வழங்கப்படுகிறது.

      Delete
  67. லோகித் தமில் பெயர் அர்த்தம்

    ReplyDelete
    Replies
    1. லோகித் என்றால் உலகை ஆள்பவன் என்று பொருள் நண்பரே.

      Delete
  68. குப்புசாமி என்பது எனது பெயர்

    மூன்றாம் பிறப்பு ஆகையால் மூக்கு குத்தி குப்புசாமி என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்

    இதைத்தவிர வேற ஏதும் பெயர் காரணம் எனக்கு கிடைக்க வில்லை ஐய்யா
    தங்களுக்கு தெரிந்து இருந்தால் தெரியப்படுத்தவும் எனது பெயருக்கான விளக்கத்தை

    ReplyDelete
  69. பெயர்கள் பற்றிய நம்பிக்கை உலகெங்கிலும் ஒன்று போலவே இருப்பதாகத் தோன்றுகிறது. நம்பிக்கையை அடியொற்றிப் பெயர்கள் வைக்கப்படுவது தமிழர்களிடையே இருக்கிறது. குறிப்பாக ஆதிதிராவிடரித்தும் காணப்படுகிறது. உதாரணமாக குப்பன், கருப்பன் குப்பம்மாள், பிச்சை, பிச்சம்மாள், போன்ற பெயர்கள் தாழ்வாகக் கருதிக் கொள்ளும் நோக்கத்தில் வைக்கப்படுகின்றன. சாவின் பிடியிலிருந்து தங்கள் குழந்தைகளைக் காப்பாற்றும் நோக்கத்தோடு அத்தகைய பெயர்கள் இடப்படுகின்றன.
    பல குழந்தைகள் இழந்த பெற்றோர்கள் கடைசியாகப் பிறந்த ஆண் குழந்தைக்கு மூக்கன் அல்லது மூக்காண்டி எனப் பெயர் வைத்து மூக்குக் குத்தவும் செய்தனர். இம்மாதிரி மூக்குக் குத்துவதன் மூலம் குழந்தையைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. மேலும் வெள்ளையன், கருப்பன் என இயற்கையோடு இயைந்து பெயரிடுகின்ற வழக்கமும் கொண்டிருக்கின்றனர்.

    ReplyDelete
  70. சுகன்யா பெயர் தமிழ் அர்த்தம்

    ReplyDelete
    Replies
    1. கடவுள் பார்வதி தேவியின் இன்னொரு பெயர் தான் சுகன்யா என்பதாகும்.

      Delete
    2. துயவள்

      Delete
    3. தூயவள்

      Delete
  71. வைஜெயந்தி என்பதன் அர்த்தம்

    ReplyDelete
  72. Replies
    1. திருமாலின் மலர் மாலை என்பது வைஜெயந்தி என்பதன் பொருள்.

      Delete
  73. ஹர்ஷினி என்பதன் அர்த்தம்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியனாவள் என்பது பொருள் நண்பரே.

      Delete
  74. குகப்பிரியன் - தமிழ்பெயரா?

    ReplyDelete
  75. இராமன் வனவாசம் செல்லத் தொடங்கும் பொழுது முதன் முதல் அறிமுகமானவனும் துணை செய்தவனும் குகன் ஆவான். அவனது பண்பு நலன்களைக் கண்ட இராமன், அவனைத் தன் தம்பியருள் ஒருவனாக ஆக்கிக் கொண்டவன்.

    ப்ரியம் என்றசொல் வடசொல் பரிவு அன்பு என இச்சொல்லைத் தமிழில் அழைக்கலாம்.

    ReplyDelete
  76. ஐயா.உங்கள் தமிழ் அறிவு மற்றும் புலமைக்கு எனது வணக்கங்கள்.
    தங்கள் புனை பெயராக உள்ள தென்னன் மெய்மன் என்பதன் பொருள் குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்/
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பரே.. இத்தளத்தில் இடம்பெரும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் என்பவர் எனது மாமா. அவரது ஆக்கங்களைத்தான் அவரது பெயரில் வெளியிட்டுவருகிறேன். அவரது இயற்பெயர் சு.இராதாகிருஷ்ணன் அதை அவா் தென்னன் மெய்ம்மன் என்று மாற்றிக்கொண்டார். தென்னன் என்றால் தென்னவன் என்றும் மெய்ம்மன் என்றால் மெய்யானவன் என்றும் பொருள் நண்பரே.

      Delete
  77. "அகிலவேல்" தமிழ்பெயரா? விளக்கம் சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. கில லோக பந்தோ = எல்லா உலகத்துக்கும் உறவுக்காரனே

      வடசொல் தான் நண்பரே.

      Delete
  78. என் பெயர் திருப்பதி ராஜன் - பொருளறிய ஆசை..

    ReplyDelete
    Replies
    1. திருப்பதியில் குடியிருக்கும் வெங்கடாசலபதி என்ற கடவுளின் பெயர்தான் நண்பரே.

      Delete
  79. நேத்திரன் பெயர் பொருள் ??

    ReplyDelete
    Replies
    1. கண் உடையவன் என்று பொருள் நண்பரே..

      Delete
  80. மகிழினி Meaning please

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வானவள், இனிமையானவள் என்று பொருள் கதிர்.

      Delete
  81. மேலணி tamil meaning

    ReplyDelete
  82. மதிவாழி tamil meaning

    ReplyDelete
    Replies
    1. மதி என்றால் அறிவு ஆழி என்றால் கடல்

      கடல் போன்ற அறிவுடையவா் என்று பொருள் கதிர்.

      Delete
  83. இன்பா இளமாறன்
    இப்பெயரின் பொருள் என்ன
    தமிழ் பெயரா
    இதனை ஆங்கிலத்தில் எப்படி எழுத Inbaa ilamaran or inba ilamaaran

    ReplyDelete
    Replies
    1. மாரன் எனும் சொல் மன்மதனைக் குறிக்கும்.
      மாறன் எனும் சொல் பாண்டியனைக் குறிக்கும்.
      முன்னது வடசொல். பின்னது தமிழ்ச்சொல்

      இள - இளமை
      மாறன் - பாண்டியன்

      அழகிய தமிழ்ப்பெயர்தான் நண்பரே.

      Delete
  84. 'வித்யா ஸ்ரீ' மற்றும் 'பத்ம பிரியா' என்பதன் அர்த்தங்கள் என்னவோ?

    ReplyDelete
  85. 'வித்யா ஸ்ரீ' மற்றும் 'பத்ம பிரியா' என்பதன் அர்த்தங்கள் என்னவோ?

    ReplyDelete
  86. வித்யா - சரியான அறிவு
    ஸ்ரீ - திரு
    பத்மம் - தாமரை
    பிரியா - விரும்பி உறைபவள்

    ReplyDelete
  87. Means "able, efficient" in Sanskrit. This was the name of a son of Gautama Buddha.
    புத்தாின் மகன் பெயா் ராகுலன். அப்பெயரை ராகுல், ரகுல் என்றும் அழைப்பதுண்டு நண்பரே

    ReplyDelete
    Replies
    1. ரகுல் என்பதற்கு மதிவாளி என்று பொருள் உண்டா?

      Delete
    2. Praveen kumar wts this meaning this name

      Delete
  88. தினேஷ் பாபு பெயர் அர்த்தம் என்ன ?

    ReplyDelete
    Replies
    1. 'தினேஷ்' "தினம் இறைவன்" (சூரியன்)என்று பொருள்.
      சமஸ்கிருதத்தில் "டினா" (நாள்) மற்றும் "ஈஷா" (இறைவன்) என்ற பொருளாகும்.

      Delete
    2. மிகவும் நன்றி

      Delete
  89. மிகவும் நன்றி

    ReplyDelete
  90. "பிரவீன்" என்பதன் அர்த்தம் என்ன?

    ReplyDelete
  91. வைஷ்னவ பிரவீன்

    ReplyDelete
  92. பவித்ரா பெயர் அர்த்தம் என்ன?

    ReplyDelete
    Replies
    1. புனிதமானவள் என்பது பொருள் நண்பரே.

      Delete
  93. ஸ்ரீஷாலி பெயர் அர்த்தம்

    ReplyDelete
  94. ஸ்ரீஷாலி பெயர் அர்த்தம் என்ன

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ என்றால் திரு என்பது பொருள்
      சாலி என்றால் திறன் - திறமையானவள் என்று பொருள்

      Delete
  95. ஸ்ரீஷாலி பெயர் அர்த்தம்

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ என்றால் திரு என்பது பொருள்
      சாலி என்றால் திறன் - திறமையானவள் என்று பொருள்

      Delete
  96. விக்கி என்பதன் பொருள் ?
    சரவணன் என்பதன் பொருள் ?

    ReplyDelete
    Replies
    1. விக்கி (Wiki) என்னும் சொல், ஹவாய் மொழியில் வழங்கப்படும் ''விரைவு" என்னும் பொருளைத் தரும் சொல்லாகும்.
      சரவணன் என்பது கடவுள் முருகனின் பெயா்களுள் ஒன்று நண்பரே.

      Delete
  97. போற்றிமாறன் என்று என் மகனுக்கு பெயர் வைக்க விரும்புகிறேன், பொருள் கூ. முடியுமா? ?

    ReplyDelete
    Replies
    1. மாரன் எனும் சொல் மன்மதனைக் குறிக்கும். மாறன் எனும் சொல் பாண்டியனைக் குறிக்கும். முன்னது வடசொல். பின்னது தமிழ்ச்சொல்.

      இளையான்குடி மாறன், மணிமாறன், பராந்தக மாறன், சீவல மாறன்,பூந்தார் மாற (புறநா. 55)
      சடகோபன்மாறன் (திவ். திருவாய். 2, 6, 11)
      வல்வினைக்கோர் மாறன் (திருவரங்கத்தந். காப். 5) என பல பெயா்கள் உண்டு. போற்றி மாறன். நன்றாகவுள்ளது நண்பரே.

      Delete
  98. சிறோஜன் என்னும் பெயரின் அர்த்தம் என்னவோ?

    ReplyDelete
    Replies
    1. அரிதானவன் என்று பொருள் நண்பரே

      Delete
  99. தேவ மித்ரன் பெயரின் பொருள்

    ReplyDelete
    Replies
    1. மித்ரன் என்றால் நண்பன் என்று பொருள்.
      தேவ என்றால் வான் உலகில் வாழ்வோா் என்று பெருள் நண்பரே.

      Delete
    2. எனது குழந்தைக்கு மித்ரன்/மித்ரா என்று பெயர் வைக்கலாம் என்று யோசித்திருக்கிறேன், மித்ரன் என்பது சுத்தமான தமிழ் பெயர் தானே??? வேறு சில நல்ல தமிழ் பெயர்கள் கூறுங்கள்...

      Delete
  100. கபிலன் பெயர்கான குணாதிசியம் என்ன தெரியபடுத்துங்கள் முனிவரே

    ReplyDelete
    Replies
    1. சங்கஇலக்கியத்தில் அதிகமாகப் பாடல் பாடிய பெருமைக்குரியவா் நண்பரே குறிஞ்சிப் பாடல்கள் பாடியதால் பெயர் பெற்றவா்

      Delete
  101. கோமதி மற்றும் கோபி எனும் பெயரில் உள்ள குணாதிசயம் கூறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நதிகளுள் கோமதி என்றொரு நதி உள்ளது.
      கோமதி, ஆவினங்களின் நாயகி ஆவார். பண்டை காலத்தில் ஒருவரது செல்வம் அவரிடமுள்ள பசுக்களின் எண்ணிக்கையை வைத்தே அறியப்பட்டு வந்தது. கோ என்றால் பசு என்றும் பொருள் உள்ளது.
      கோபி என்பது கடவுள் கிருஷ்ணனின் பெயர்களுள் ஒன்று

      Delete
  102. கோமதி மற்றும் கோபி எனும் பெயரில் உள்ள குணாதிசயம் கூறுங்கள்

    ReplyDelete
  103. Siddharth peyar vilakkam vendum thozhane

    ReplyDelete
    Replies
    1. சித்தார்த்த கௌதம புத்தர் என்ற அடிப்படையில் வைக்கப்பட்ட பெயா் தோழரே. இலக்கை வெற்றிகரமாக அடைபவா் என்று இணையத்தில் பொருள் கிடைக்கிறது.

      Delete
  104. தன்வந்த் பெயர் விளக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. தன்வந்திரி என்று ஒரு சித்தர் இருந்தாா். கடவுள் சிவனின் பெயர்களுள் ஒன்று தன்வந்த்.

      Delete
  105. சிதம்பரம் பெயரின் பொருள் அறிய ஆவல் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. அதாவது சிவனின் வீடு என்று பொருள்.

      Delete
  106. தன்யா என்ற பெயரின் விளக்கம் என்ன நண்பரே?

    ReplyDelete
    Replies
    1. அதிஷ்டமானவள், வளமானமவள், நன்றியுடையவள் என்று பொருள் நண்பரே.

      Delete
  107. asvathika apdina enna artham sollungalen

    ReplyDelete
  108. அஸ்வதிகா என்ற பெயரின் அர்த்தம்

    ReplyDelete
    Replies
    1. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D

      இந்த இணைப்பில் காண்க. அசுவத்தாமன் என்ற சொல்லின் பெண் பெயராக புதிதாக இருக்கும் எனக் கருதுகிறேன் நண்பரே.

      Delete
  109. ஐயா,
    நவின் தமிழ் பெயர்தானே? அதன் அர்த்தம் என்ன? சிலர் new என்கிறார் ,
    சிலர் To desire என்கிறார்.Plz விளக்குக.

    ReplyDelete
    Replies
    1. நவீன் என்ற பெயா் தமிழ்ப் பெயர்தான் நண்பரே. புதுமை என்பதே பொருள்.

      Delete
  110. Replies
    1. புத்தரின் மகன் என்பது பொருள் நண்பரே.

      Delete
  111. வணக்கம் ஐயா எனது மகனுக்கு கீழே
    ஹரிபரன். ..

    ஹர்ஜித். .... HARJEETH

    ஹர்ஷவர்தன்..
    .
    ஹர்ஷித் ...HARSHIT
    Joyous
    ஹபிலன். ..

    ஹபிதன். ...

    ஹரித்
    ஹரித்ரா ...

    ஹரிகாலன். ..

    ஹரிகேஷ். .

    ஹரிக்ஷன். ..

    ஹர்ஷன். .இந்த பெயர்களில் ஒன்றை வைக்க போகிறேன். அர்த்தம் தெரிந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
    எனது email id ...gurukdirector@gmail.come
    உதவி செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹரி என்ற பெயர்கள் எல்லாம் திருமாலைக் குறிப்பனவாக அமைகின்றன. ஹர்ஷவர்தனர் என்று ஒரு மன்னர் இருந்தார் அவரது பெயரின் தழுவலாகக் கூட இருக்கலாம் நண்பரே.

      Delete
  112. அமிர்தவர்ஷினி. ஆராதனா அர்த்தம்

    ReplyDelete
  113. நடராஜன் என்ற பெயரின் பொருள்

    ReplyDelete
    Replies
    1. நடராசன் என்ற பெயர் கடவுள் சிவனைக் குறிக்கும் நண்பரே. தில்லை நடராசன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

      Delete
  114. can anyone tell me the meaning of the name - yogamithran, yugan?

    ReplyDelete
    Replies
    1. யோகம் - தவம்
      மித்ரன் - சூரியன் என்று பொருள்
      யுகன் என்றசொல்லுக்கு இளமை மற்றும் முருகன் என்றும் பொருள் உண்டு

      Delete
  115. ஸ்ரீசரண் என்ற பெயரின் அர்த்தம்

    ReplyDelete
  116. ஸ்ரீ என்றால் திரு என்று பொருள்

    சரண் என்றால் அடைக்கலம், பணிவு என்று பொருள் நண்பரே.

    ReplyDelete
  117. தருவி - என்ற பெயருக்கு பொருள் கூறுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தருவி என்றால் தா, கொடு என்று பொருள்.

      Delete
  118. பிரணவன்- என்ற பெயர் அர்த்தம் என்ன?

    ReplyDelete
  119. ஓம் என்பதை பிரணவ மந்திரம் என்று இந்துகள் சொல்லுகிறார்கள். பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும். அ என்பது முதல்வனான சிவனையும், உ என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள்

    ReplyDelete
  120. தமிழரசன் என்பதன் விளக்கம் பற்றி கூற முடியுமா நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. தமிழ் எவ்வளவு தொன்மையான, தொடர்ச்சியான இலக்கிய மரபுடைய மொழி!

      தமிழ் மொழிக்கு அரசன் போன்றவர் என்று பொருள் நண்பரே.

      Delete
  121. ஐயா கபிலன் மற்றும் விபுலன் என்ற பெயர்களின் அர்த்தம் என்னவென்று கூரவும்

    ReplyDelete
  122. குறிஞ்சி பாடுவதில் வல்லவர் கபிலர். இவர் சங்ககாலத்தில் புகழ்பெற்ற கவிஞர்
    விபுலானந்தர் யாழ் நூல் என்னும் சிறந்த நூல் எழுதிய ஈழத் தமிழர்.

    ReplyDelete
  123. ஜஸ்வதி , தனுஜா ஸ்ரீ என்ற பெயரின் பொருள் என்ன ?

    ReplyDelete
  124. சந்தீப் ரோஷன் பெயர் அர்த்தம் கூறவும்

    ReplyDelete
    Replies
    1. சந்தீப் என்றால் ஒளிதரும் விளக்கு என்று பொருள்
      ரோசன் என்றால் Illumination, ஒளி வெள்ளம் என்று பொருள்

      Delete
  125. ஐயா வகிர்தன் என்பதுதமிழ்சொல்லா இதன்பொருள் என்ன

    ReplyDelete
  126. ஐயா விகிர்தன் என்பதன் பொருள் என்ன இது தமிழ்சொல்லா

    ReplyDelete
    Replies
    1. சிவனின் பெயர்களில் ஒன்று விகிர்தன்..

      http://shaivam.org/daily-prayers-thirumurai-series/wikirtha-adiyaynaiyum-wayntuthiyay

      Delete
  127. சசிகுமார் தமிழ் பெயரா அதன் அர்தம் என்ன
    அதேபோல் பவித்திரா என்ற பெயரின் அர்தம் என்ன

    ReplyDelete
  128. தாமரை செல்வி பெயரின் அர்த்தம் சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. தாமரையில் தோன்றும் கடவுள் சரஸ்வதி என்பது தாமரைச் செல்வி என்பதன் பொருள் சேகர் என்றால் விஷ்ணுவின் பெயர்களுள் ஒன்று.

      Delete