Thursday, November 3, 2011

700 கோடி கறுப்புப் பணம்!!!குழந்தையைச் செல்வம் என்று சொன்னதாலோ என்னவோ நாம் அளவுக்கு அதிகமாகவே செல்வங்களைச் சேர்த்துவிட்டோம்..

உலகின் மக்கள் தொகை 700 கோடியை(7 பில்லியன்) தாண்டி விட்டது.

அளவான குடும்பம் நலமான வாழ்வு!
நலமான குடும்பம் வளமான சமூகம்!


அளவான செல்வமே கணக்கில் கொள்ளப்படும்
அளவில்லாத செல்வத்துக்கு கணக்குக் காட்டமுடியாது அதனைக் கறுப்புப் பணமாகத் தான் பதுக்கவேண்டும்..


அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒருபக்கம் இயற்கையான மரணத்தைக் குறைத்து வருகின்றன..


இன்னொரு பக்கம் அறிவியல் கண்டுபிடிப்புகள் மரணவிகிதத்தை விபத்துக்களின் வழியே சமநிலைப்படுத்த முயற்சித்து வருகின்றன..

இந்தப் போராட்டத்தில் நம் கடமை என்ன?


அளவுக்கு அதிகமான மக்கள் செல்வத்தை இயற்கையிடமிருந்து நாம் என்ன கணக்கு சொல்லிப் பதுக்குவது...?
மனிதக் காவலர்களிடம் கணக்குக் காட்டுவது எளிது இயற்கையிடமிருந்து நாம் தப்பமுடியாமா?

அதனால் ...குழந்தைச் செல்வம் அளவோடு இருந்தால்...


‘குழல் இனிது, யாழ் இனிது’, என்ப - தம் மக்கள்
மழலைச் சொல் களோதவர்.
(குறள்:66)

என வள்ளுவர் சொல்வதுபோலக் கொஞ்சலாம்..

நம் குழந்தையின் நடை, உடை, அசைவுகள் என ஒவ்வொன்றையும் 
சங்ககால மன்னன் பாண்டியன் அறிவுடைநம்பியைப் போல பார்த்துக்கொண்டே இருக்கலாம்..

     படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
     உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்
     குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
     இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்
     நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
     மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
     பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே
(புறம் : 188)
பலசுவைமிக்க உணவுகளைப் படைத்துப் பலரோடும் அமர்ந்து உண்ணும்
‘உடைமை‘ எனப்படும் பெரும்செல்வம் பெற்றவராயினும் என்ன?
மெல்ல மெல்ல, 
குறு குறு என நடந்து சென்று, 
தம் அழகிய சிறிய கையை நீட்டி, 
உண்கலத்து நெய்யுடைச் சோற்றில் இட்டும்
அக்கையாலேயே, பெற்றோரைக் கட்டிக் கொண்டும், 
வாயால் கவ்வியும், 
கையால் துழாவியும், 
தன் உடல் முழுவதும் சிதறியும்,
அக்குறும்புகளால் பெற்றோரை மயக்கி இன்பம் கொடுக்கும்
புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே
என்பது
இப்பாடல் தரும் செய்தியாகும்.

குழந்தைச் செல்வம் அளவுக்கதிகமாக இருந்தால். 

   நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல'
                                  -பட்டினத்தார் 


இந்தக் குரங்கைப் போலப் பாடுபடவேண்டியதுதான்.. 


என்ன செய்யப் போகிறோம்?? தமிழ்ச்சொல் அறிவோம்.

உடை = உடைமை, 
இடைப்பட = மெல்லமெல, 
இட்டும் 
= கொடுத்தும், 
துழந்து = (கையால்) துழாவி, 
அடிசில் 
= உணவு, 
மெய் = உடல், 
விதிர்த்து = சிதறி, 
மயக்குறு 
= இன்பத்தால் மயக்கி மகிழச் செய்யும்,
பயக்குறை = பயன்+குறை)

தொடர்புடைய இடுகைகள்

சார்வாகன் அவர்களின் மக்கள் தொகை 700 கோடி!!!!!!!!!!!!!:.காணொளி


35 comments:

 1. மழலை பற்றிய தகவல் அருமை ,இப்பொழுதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு என்று தானே பெற்றுக் கொள்கிறார்கள் ,நன்றி நண்பரே பகிர்வுக்கு

  ReplyDelete
 2. இதுக்கெல்லாம் கவலை படாதீர்கள், மக்கள் தொகையை குறைக்க தான் அணு உலை திட்டம் இருக்கிறதே..

  ReplyDelete
 3. நண்பரே நன்றாக உள்ளது. நான் ஒரு செல்வம் (செல்வி)மட்டுமே பெற்றுள்ளேன். புதிதாகத் திருமணமான தம்பதியர் எல்லோரும் இப்பதிவினைப் படிக்க வேண்டும்.

  ReplyDelete
 4. எங்கே போய் முடியுமோ தெரியவில்லை ...

  ReplyDelete
 5. பெருகிவரும் மக்கட் தொகையை
  நல்வழியில் உருவாக்கி
  வரும் நாட்களை வல்லவையாக்கிட
  எத்தனிப்போம்....

  ReplyDelete
 6. தலைப்பை பதிவுடன் இணைத்த விதம அருமை.தக்க நேரத்தில் வந்திருக்கும் பதிவு.வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 7. அளவான குடும்பமே இன்றைய பொருளாதரத்திற்கு உகந்தது.தமிழ்ச்சொற்கள் புதியவை அறிந்துகொண்டேன் !

  ReplyDelete
 8. எதுவுமே அளவோடு இருந்தால்தான் மதிப்பு. அது குழந்தையாயினும் என்பதை நயம்பட உரைத்துள்ளீர்கள். சுட்டுவதற்கு எடுத்துக்கொண்ட இரு பாடல்களுமே அருமை. குழந்தையால் உண்டாகும் குதூகலத்தைப் புறநானூறு புளகாங்கித்ததுடன் உணர்த்தும் அதே வேளையில் பல குழந்தைகளால் உண்டாகும் பரிதவிப்பைப் பட்டினத்தார் பாடல் கண்முன்னே காட்டிக் கலவரப்படுத்துகிறது. பகிர்வுக்கு நன்றி முனைவரே.

  ReplyDelete
 9. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
  இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
  கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
  வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

  ReplyDelete
 10. நலமா முனைவரே!
  நான் சற்று நலம் பெற்றுள்ளேன்! தாங்கள் அன்புக்கு நன்றி!

  அளவான குடும்பம் வளமான வாழ்வு என்பதை
  இலக்கியச் சான்றுடன் எழுதியுள்ளீர் அருமை!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 11. கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
  ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல'/

  அருமையான பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. தெரியாத சொற்கள்.. நன்றி,.

  ReplyDelete
 13. ஜனத்தொகை அதிகரிப்பதோடு அநாதைக்குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதுதான் வருத்தமே...
  அதுவும் ஆதரவற்ற சிறுவர்/சிறுமி சாலைகளின் நாம் அவர்களை கடந்து செல்லும் போது.....

  ReplyDelete
 14. உண்மையில் இந்தியாவின் கருப்புபணம்தான் அவர்கள்....

  ReplyDelete
 15. உண்மையில் இந்தியாவின் கருப்புபணம் தான் அவர்கள்.....

  ReplyDelete
 16. @M.R சிறுதுளி பெரு வெள்ளம் என்பதுபோல ஆகிவிட்டது நண்பா..

  இந்த சிந்தனையே நமக்குக் காலம் கடந்துதான் வந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்..

  ReplyDelete
 17. @suryajeeva அழகாச் சொன்னீங்க..

  உண்மைதான் நண்பா..

  எமனின் புது வாகனமல்லாவ இது..??

  ReplyDelete
 18. @koodal bala காலத்தின் பாதையில் நாமும் சேர்ந்து செல்வோம்..

  ReplyDelete
 19. @மகேந்திரன் அறிவுறுத்தலுக்கு நன்றிகள் நண்பா..

  ReplyDelete
 20. @கோகுல் அதைத் தாங்கள் புரிந்துகொண்டவிதம் அதைவிட அருமை..

  ReplyDelete
 21. @கீதா தங்களைப் போன்ற ஆழ்ந்த மறுமொழிகளே என்னை மேலும் மேலும் கடமையோடு எழுதச் செய்கின்றன கீதா..

  நன்றி.

  ReplyDelete
 22. @புலவர் சா இராமாநுசம் தாங்கள் நலம் பெற்றுப் புதுவேகத்துடன் வந்திருப்பது மகிழ்வளிக்கிறது புலவரே..

  கருத்துரைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 23. @ராஜா MVS உண்மைதான் நண்பரே..

  இதுபோன்ற காடசிகளைப் பார்க்கும்போதெல்லாம் பட்டினத்தார் பாடல் தான் நினைவுக்கு வருகிறது..

  ReplyDelete
 24. நிச்சயம் கவலைக்குரிய சமாச்சாரம்தான்... இத்தனை மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுக்க அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதுதான் இப்போதைய கேள்வி...

  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 25. இந்த காலத்திற்கு
  தேவையான பகிர்வு ..

  ReplyDelete
 26. //குழந்தையைச் செல்வம் என்று சொன்னதாலோ என்னவோ நாம் அளவுக்கு அதிகமாகவே செல்வங்களைச் சேர்த்துவிட்டோம்..//

  ஹா ஹா.

  ReplyDelete
 27. வருகைக்கு நன்றி இரசிகன்

  ReplyDelete
 28. நல்லதொரு காலத்திற்கு உகந்த பதிவு குணா சார். அருமை.
  இதில் ஆண்கள் கொஞ்சம் தங்கள் பொறுப்பை உணர்ந்து
  செயல்படுதலும் , ஆண்குழந்தை வேண்டுமென ரிஸ்க் எடுத்தலும்
  தவிர்க்கப்பட்டால் தீர்வு கிடைக்கும். சொன்னாற்போல் அறிவியல்
  முன்னேற்றத்தால் இறப்பு விகிதம் குறைந்ததும் இதற்குக் காரணம்.
  இன்று நிறைய பேர்கள் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற கொள்கையைத்தான்
  கடைபிடிக்கின்றனர் . இருந்தும் ஏன் என்று தெரியவில்லை ?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி ஸ்ரவாணி

   Delete