Monday, November 14, 2011

திருமண அழைப்பிதழ் மாதிரி

அன்பான தமிழ் உறவுகளே.. 
எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் சென்றும் கூகுளின் படங்கள் பகுதியில் பார்த்து சில நண்பர்கள் அழைப்பிதழ் நன்றாகவுள்ளது. இதனை எனக்கு பயன்படுத்திக்கொள்ளலாமா என்று கேட்டனர்... சிலர் இதுபோல எனக்கும் வடிவமைத்துத்தாங்களேன் என்றும் அன்பாகக் கேட்டுக்கொண்டனர். சரி கூகுளின் படங்கள் பகுதியில் சென்று மாதிரித் திருமணத் அழைப்பிதழ்கள் தமிழில் எவ்வாறு உள்ளன என்று பார்வையிட்டேன்..

இப்பகுதியில் இனி வரும் காலங்களில் என் கண்ணில்படும் சிறந்த தமிழால் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்களைத் தொகுக்கத் திட்டமிட்டுள்ளேன்.

திருமண அழைப்பிதழ்
மங்கள நாண் விழா
இருகரம் சேரும் விழா
இருமணம் சேரும் விழா
திலகமிடும் திருவிழா
வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா
மன்றல் விழா
என்று தலைப்பே இப்போதெல்லாம் தமிழ் நயத்துடன் வைக்கின்றனர்.

மாதிரிக்காக..

இருமணம் இணையும் திருமணம்

விழிகளில் மலர்ந்தது 
காதல் மலர்
ஐப்பசி - அறிவன் புதன்
விடியலில் துவங்கும்
என் வாழ்க்கைப் பயணம்
வேதங்கள் ஓத மத்தளங்கள் முழங்க
சுற்றம் புடைசூழ
நம்பி (மணமகன் பெயர்)நான்
நங்கை (மணப் பெண் பெயர்)யின் கரம் பற்ற
நண்பர்காள் வாரீர்
உம் உள்ளம் குளிர வாழத்துவீர்
எம் மனம் மகிழ

நாள்
இடம்
நேரம்
வழி

அன்புடன் அழைக்கும்
மணமக்கள்

தொடர்புடைய இடுகைகள்

52 comments:

 1. நல்ல முயற்ச்சிதான்...


  திருமண அழைப்பிதழ்கள் வெளிநாடுவாழ் தமிழ்களுக்கு மாதிரிக்காக கண்டிப்பாக பயன்படும்

  தங்களுடைய வடிவமைப்பையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் சகோ...

  வாழ்க்கை துணைநல ஏற்புவிழா அழைப்பிதழ் அசத்தலாக இருக்கிறது..

  முயற்சிக்கும், பகிர்வுக்கும் நன்றி ...

  ReplyDelete
 3. அழைப்பிதழ் மாதிரிகள் மிகச் சிறப்பாக உள்ளன
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  த.ம 4

  ReplyDelete
 4. உங்கள் திருமண அழைப்பிதழ் நல்லா இருக்கு முனைவரே ..........

  ReplyDelete
 5. பயன் மிக்க பகிர்வு.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. புதுவாழ்வை கொஞ்சும் தமிழோடு தொடங்குவது அருமை...

  தங்களின் படைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... நண்பரே...

  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 7. இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 8. முற்போக்கு,சுயமரியாதை உள்ளவர்கள்தான் மட்டும்தான் இப்படியாக அடிக்கிறார்கள்.பெரும்பாலனவர்கள்.நாள்.நட்சத்திரம் மற்றும் பத்து ஊரு
  மக்களின் பெயர்கள் நிறைந்த அழைப்பிதழே அச்சடித்து இருக்கிறார்கள்
  தவறுதலாக பெயர்மாறி அச்சடித்து விட்டதற்கு எகிறி குதித்தவர்களை
  கண்டதே என் தொழில் அனுபவமாக உள்ளது.

  ReplyDelete
 9. த.ம.7
  வித்தியாசமான,அழகிய அழைப்பிதழ்கள்.
  முதல் ஆண்டு நிறைவு வாழ்த்துகள்.
  இன்று என் தொடர்பதிவில் உங்களை இணைத்துள்ளேன்.

  ReplyDelete
 10. முனைவரே தங்களுத் திருமணமான செய்தியைச்
  சொல்லாமல் சொல்லி விட்டீர்
  மணமக்களுக்கு என் இனிய நல் வாழ்த்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 11. நல்ல முயற்சி முனைவரே.....

  ReplyDelete
 12. வணக்கம் முனைவரே..

  அழைப்பிதழ்கள் அருமை..

  //இப்பகுதியில் இனி வரும் காலங்களில் என் கண்ணில்படும் சிறந்த தமிழால் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்களைத் தொகுக்கத் திட்டமிட்டுள்ளேன்.//

  தொடரட்டும் தங்கள் நற்பணி..

  தொடர்ந்து வருகிறேன்..

  ReplyDelete
 13. அதற்கு அதற்கு ஏற்றமாதிரி வடிவமைச்சிருக்கீங்க.நல்ல அழகாயிருக்கு குணா !

  ReplyDelete
 14. நல்ல தொகுப்பு. ரசித்தேன்.

  ReplyDelete
 15. உங்களுடைய அழைப்பிதழ் ஏற்க்கனவே பார்த்து இருக்கிறேன்.... மற்றதும் நன்றாக உள்ளது....

  ReplyDelete
 16. மிகச்சிறந்த சிந்தனை . தமிழை எவ்விடங்களிலும் பயன்படுத்துவோம் என்ற தங்களின் முனைப்பு பாராட்டுதலுக்குரியது.நந்நாளில் என்பது நன்னாளில் என வரவேண்டும் என எண்ணுகிறேன். சரிபார்த்துச் சொல்லுங்கள்.

  ReplyDelete
 17. மனம் மகிழ்ந்தேன் முனைவரே,
  எவ்வளவு அழகாக தங்களின் திருமணச் செய்தியை
  தெரிவித்துவிட்டீர்கள்...
  விண்போற்றும் அழகும் குணமும் பொருந்திய
  மாதரசியை கைப்பற்றி இல்வாழ்வின் சுகங்கள்
  அனைத்தையும் ஒருங்கே பெற்றிட
  வாழ்த்துகிறேன்.
  வாழ்வீர் பெருவுடையீர்...

  அதிலும் திருமண அழைப்பிதழ்
  என்பது நாம் பெருங்காலம் பார்த்து பார்த்து
  ரசிக்கும் ஒரு அற்புதமான மடல்..

  பார்த்தீர்களா..
  மதுரைக்காரர்களின்
  மொழி ஆளுமையை
  எவ்வளவு அழகு அந்த
  அழைப்பிதழ்கள்..
  கண்களை எடுக்காது
  கண்டுகொண்டே இருந்தேன்...

  ReplyDelete
 18. அருமையான முயற்சி .புதுவிதமான இந்த முயற்சிக்கு
  வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 19. @!* வேடந்தாங்கல் - கருன் *! மகிழ்ச்சி நண்பா வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 20. @Ramani வருகை தந்தமைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 21. @Ramani வருகை தந்தமைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 22. @ராஜா MVSஇனி வரும் காலங்களில் தங்கள் நம்பிக்கையை நிறைவேற்றுகிறேன் நண்பா.

  ReplyDelete
 23. @வலிபோக்கன் அழகாகச் சொன்னீர்கள் நண்பா..

  உண்மை தாங்கள் சொல்வது தான்..

  அது ஒரு சிறந்த நகைச்சுவை.

  ReplyDelete
 24. @எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்நன்னாளில் என்பது தான் சரியான பதம்

  அறிவுறுத்தலுக்கு நன்றிகள் நண்பா.

  ReplyDelete
 25. @மகேந்திரன் தங்கள் வாழ்த்துதலுக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 26. அனைத்து அழைப்பிதழ்களும் அருமையாக இருக்கிறது.எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா?க்ரேட்.

  ReplyDelete
 27. தங்களின் எண்ணங்கள் வண்ணமானது!

  ReplyDelete
 28. நன்றி முனைவரே

  ReplyDelete
 29. http://www.boddunan.com/component/community/register.html?referrer=BN-SAGAYAMARY


  Join and earn from above site

  ReplyDelete
 30. திருமண அழைப்பிதழ்களின் வடிவமைப்பு அருமையாக இருக்கின்றது. இதிலே ஒன்றில் புத்தராண்டு (பட வரிசையில் ஐந்தாவது) என்று தெய்வப் புலவர் வழி பற்றும் ஆண்டை விட புத்தரின் மேன்மையினை சிறப்பாகக் காட்டியிருப்பது ஈண்டு நோக்கத் தக்கது.

  மகிழ்ச்சி

  ReplyDelete
 31. தங்களின் தொகுப்பு மிகவும் அருமையாக உள்ளது
  இதிலிருந்து எனது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ஒரு தொகுப்பினை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன் தங்களின் அனுமதியுடன்

  ReplyDelete
 32. நன்றி முத்துக்குமார். மிக்க மகிழ்ச்சி நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்..

  ReplyDelete
 33. எனக்கு ஸ்ரீஹரி தேவிப்ரியா அவர்களின் திருமண பத்திரிக்கை மிகவும் பிடித்திருக்கிறது. 17 வருஷத்துக்கும் முன் பார்த்திருந்தால், இப்படி பத்திரிக்கை வேண்டும் என்று ஒருகால் வீட்டில் சொல்லி இருக்கலாம்.

  ReplyDelete
 34. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அரங்கநாயகி அரசன்

  ReplyDelete
 35. Appreciation to my father who shared with me concerning this weblog, this webpage is in fact
  remarkable.

  ReplyDelete