வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 22 நவம்பர், 2011

இங்கு சிரிப்பும், அழுகையும் கற்றுத்தரப்படும்!

இப்ப சிரி!! இப்ப அழு..
னிதர்கள் எல்லாம் யந்திரங்களாக மாறிவருகிறார்கள். எதிர்காலத்தில் மனிதர்களுக்குச் சிரிப்பும், அழுகையும் கற்றுக் கொடுக்கும் நிலை வந்தாலும் வியப்பதற்கில்லை...
அவ்வேளையில் உணர்வு என்றால் என்ன? என்று எடுத்தியம்ப சங்கப் பாடல்கள் துணைநிற்கும்..


இதோ ஒரு சங்கப்பாடல்..


போருக்குச் சென்ற தன் கணவன் வீடு திரும்பவில்லை அவன் வீரமரணம் அடைந்துவிட்டான். அதனை அவன் மனைவி அறியவில்லை பாவம் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போனவள் அவனுக்கு ஏதும் நேர்ந்திருக்கும் என அஞ்சியவளாகப் போர் நடைபெற்ற இடத்தைச் சென்றடைந்தாள். அவன் வீழ்ந்து கிடந்த இடமோ புலி போன்ற கொடிய விலங்குகள் வாழும் காடு. தன் கணவன் இறந்தமை கண்டு உள்ளம் வெதும்பி அழுது புலம்புவதாகவும். தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய எமனுக்கே சாபம் கொடுப்பதாகவும் இப்பாடல் அமைகிறது.


கணவன் இறந்துவிட்டான் என்று புத்தி சொல்கிறது...
இல்லை அவன் எழுந்து தன்னுடன் நடந்து வந்துவிடுவான் என்று உணர்வு சொல்கிறது...



ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;
அணைத்தனன்’ கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!
என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
நிரைவளை முன்கை பற்றி-
வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!

புறநானூறு-255

இப்பாடலின் ஆங்கில வடிவம்

I Cannot cry out,
I'm afraid of tigers.
I cannot hold you
your chest is too wide
for my lifting

Death
has  no codes
and has dealt you wrong
may he 
shiver as I do!

Hold my wrist
of bangles,
let's get to the shade
of that hill.
just try and walk a little

எல்லா உணர்வுகளையும் எல்லோராலும் உணர முடியும். ஆனால் 
வெளிப்படுத்த முடியாது. 
சங்கப் பாடல்களை நோக்கும் போது பெரு வியப்புத் தோன்றுகிறது!
எத்தகைய சூழலாக இருந்தாலும் அதனை அழகாக எளிமையாக விளக்கிச் செல்லும் பாங்கு தமிழ் மொழியின் செம்மைப் பண்பிற்குத் தக்க எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.


பாடலின் பொருளை மேலும் சுவைக்க..

 

30 கருத்துகள்:

  1. குணா...சிரிப்பும் அழுகையும் கற்றுக்கொடுக்க என்று நீங்கள் சொல்வதுபோல உணர்வுகள் விற்பனைக்கு என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு !

    பதிலளிநீக்கு
  2. உணர்வுகளை மட்டும் மனிதன் இழந்துவிட்டால்.. மனிதன் படைத்த இயந்திரங்களை விட, மிக மோசமான இயந்திரங்களாக மனிதன் மாறிவிடுவான். என்பதை உணர வைத்ததற்கு நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  3. நிச்சயம் முனைவர் அவர்களே.. நீங்கள் எடுத்தியம்பிய விதம் அருமை..!!



    எனது வலையில் இன்று

    டுவிட்டர் (Twitter) உருவான கதை..!!!

    மேலும் பல பயனுள்ள தகவல்கள்.. !!!


    நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன்.பிடித்திருந்தால் பிரபல திரட்டிகளில் ஓட்டும் போடலாமே.. நன்றி..!

    பதிலளிநீக்கு
  4. கணவனைப் பறிகொடுத்து, கானகத்தில் தனித்து வாடும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை இதைவிடவும் ஆழமாய்ச் சொல்ல முடியாது. இறந்துவிட்டான் என்று அறிந்து எமனுக்கு சாபம் கொடுத்தாலும், எழுந்து நடப்பானென்றே எண்ணி இறந்தவனிடம் இறைஞ்சும்போது மனம் கலங்கிவிடுகிறது. இந்த இடத்தில் அறிவுக்கு இடமில்லாமல்தான் போகிறது. ஆர்வத்தின் காரணமாய் இப்பாடலை எனக்குப் புரிந்தவரை எளிமையான வடிவத்தில் தர முயன்றுள்ளேன். தவறிருந்தால் மன்னித்துத் திருத்தவும்.

    அய்யோவென்று அரற்றவும் துணியேன்,
    பாழும்புலியை எண்ணி பயமாகுதே எனக்கு!
    அணைத்துன்னை அள்ளவும் முடியவில்லை,
    அகன்றமார்பைப் பற்றவும் இயலவில்லை!

    எந்துயர் போல் பெருந்துயர் கொண்டு
    இடர்ப்படட்டும் அந்த எமனும்,
    அறனில்லாது உன்னையழித்தக் காரணத்தால்!

    மலையின் நிழலை அடைவோம்,
    மெல்லிய என் வளைக்கரம் பற்றி
    மெல்ல நடந்துவருவாய் சிறுதூரம்!

    பதிலளிநீக்கு
  5. மனமும் புத்தியும் சேர்ந்துதான் மனிதனை குழப்புகிறது.

    பதிலளிநீக்கு
  6. அருமையான பாடல்
    நீங்கள் குறிப்பிட்டுச் சொல்வது போல
    இத்தனை அழகாக சுருக்கமாக
    இத்தகைய அதீத உணர்வுகளை வெளிப்படுத்துதல் என்பது
    ஆச்சரியப்படத்தக்க விஷயமே
    அருமையான பதிவு வாழ்த்துக்கள்
    த.ம 9

    பதிலளிநீக்கு
  7. மனிதன் தன்நிலை இழந்து கொண்டிருப்பதை சங்கப் பாடலின் வழி அருமையாக விளக்கியுள்ளீர்கள்....

    பதிலளிநீக்கு
  8. சிரிப்பு,அழுகை போன்ற உணர்வுகளை நாம் இழந்துவிட்டால் இயந்திரம் ஆகிவிடுவோமே!கவலையாகத்தான் இருக்கு.

    நீங்க விளக்கியுள்ள பாடல் அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  9. அடிக்கடி உணர்வு என்றால் என்னவென்று நமக்கு யாராவது
    சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்..
    இல்லையென்றால் இன்று இருக்கும் சூழ்நிலையில்
    உணர்வற்ற ஜடமாகிவிடுவோம்...
    உணர்வுகளையும், எந்த நிலையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை
    நம் இலக்கியங்கள் நமக்கு அருமையாக சொல்லிகொடுத்துள்ளன...

    முனைவரே...
    பாடலுடன் விளக்கமும் கொடுத்து அருமையான பதிவொன்றை
    உரைக்கும் படி ஏற்றியிருக்கிறீர்கள்..
    நன்றிகள் பல..

    பதிலளிநீக்கு
  10. @ஹேமா அருமை...

    உண்மைதான் ஹேமா..

    வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. @கீதா

    அருமை
    அருமை

    ஆழமான புரிதல்..
    அசத்தலான வெளிப்பாடு...

    யார் சொன்னது சங்க இலக்கியம் பழைய இலக்கியம்..

    யாருக்கும் புரியாதது என்று...

    இதோ...
    இதைவிடவா சங்க இலக்கியத்தைப் புரிந்துகொள்ளமுடியும்..??

    நன்றி கீதா..

    பதிலளிநீக்கு
  12. @Ramani தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  13. @மகேந்திரன் தங்கள் ஆழ்ந்த வாசி்ப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே..

    பதிலளிநீக்கு
  14. தமிழ் பாடல் என்றாலும் இந்த மாதிரி பாடல்களுக்கு விளக்கம் இல்லையெனில் என்னை போன்றோருக்கு புரியாதுங்க.எப்போதும் பொருளை படித்துவிட்டு பாடலை படிக்கும்போது தமிழிலே எப்படி எழுதிருக்காங்க.இதுக்கு இப்படி பொருளா?னு யோசிக்க வைக்கும்.நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  15. ஆஹா அருமையான சொல்லாடல்! என்னே நம் முன்னோர்களின் கவித்திறம். சங்க காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது இப்பாடலைப் படித்தவுடன். அற்புதமான செய்யுள். பொங்கிப் பிரவாகிக்கும் தமிழ் நதியில் மூழ்கி இளைப்பாறினேன். மன அழுத்தம் நீங்கப்பெற்றேன். இப்பபாடலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு வியப்பூட்டுகிறது. அழகான நடை. தமிழ்ப்பாடலை ஆங்கில நாவால் சுவைக்கும்போது மேலும் மேலும் ருசிக்கிறது. அருமையான இப்படைப்பை அளித்த உங்களுக்கு நன்றி முனைவரே!

    பதிலளிநீக்கு
  16. உங்கள் தளம் இப்போது அணுக எளிதாக இருக்கிறது. நன்றி!

    பதிலளிநீக்கு