வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 27 ஜூலை, 2009

இணைய இணைப்பின்றி எழுத்துருக்களை மாற்ற...

வலைப்பதிவில் தமிழ் எழுதுதல் தொடர்பாக நீண்ட காலமாக இருந்த சிக்கல் யுனிகோடு முறை வாயிலாக நீங்கியது. விண்டோஸ் 2000, மற்றும் எக்ஸ்.பி இயங்குதளங்களில் யுனிகோடு எவ்வித சிக்கலுமின்றி இயங்குகிறது. இவ்வியங்குதளங்களில் சில நேரங்களில் யுனிகோடு சரியாக இயங்காமல் உள்ளது. இச்சூழலில் லதா எழுத்துருவை
நிறுவினால் இச்சிக்கல் தீர்ந்து விடுகிறது.

புதிதாக வலைப்பதிவு எழுதுவோர் எந்த எழுத்துருவைப் பயன்படுத்துவது?
எந்த எழுத்துரு மென்பொருளைப் பயன்படுத்துவது
?

என்ற கேள்விக்கு பெரும்பாலோனவர்களின் பதில் என்.எச்.எம் என்பதாகவே இருக்கும்.

ஆம்...
என்.எச்.எம் என்னும் தளத்துக்குச் சென்று என்.எச்.எம் ரைட்டரை பதிவிறக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும். கணினியை ரீ ஸ்டார்ட் செய்தவுடன். கணினித் திரையில் வலது கீழ் பகுதியில் மணி போன்ற வடிவம் தோன்றும். அதனை அழுத்தினால் ஐந்து எழுத்துரு முறைகள் தோன்றும்.




இதில் முறையான தட்டச்சுமுறை, தமிங்கில முறை, பாமினி ஒருங்குறி முறை ஆகியனவும் அடங்கும்...
இவற்றில் ஒரு முறையைப் பின்பற்றி வலைப்பதிவில் சுலபமாக எழுதலாம்..



அதில் ஒவ்வொரு எழுத்துரு முறையிலும் எவ்வாறு எழுத்துருக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை திரையின் வலது கீழ்ப்பகுதியில் உள்ள மணியை வலது பக்கம் சொடுக்கினால் ஆன்ஸ்கிரின் கீ போர்டு தெரியும் அதனைப் பின்பற்றினால் எளிய முறையில் தட்டச்சிட்டுப் பழகலாம்.


இதன் தனிப்பட்ட சிறப்பு.........
வலைப்பதிவு எழுதுதல், மின்னஞ்சல், தேடுதல் என எல்லா நிலைகளிலும் இம்மென்பொருள் பேருதவியாக உள்ளது.
இணைய இணைப்பின்றி எழுத்துருக்களை மாற்ற...



என்.எச்.எம், அழகி போன்ற யுனிகோடு மென்பொருள்கள் வந்த பின்னர் எழுத்துருச் சிக்கல் ஓரளவுக்குத் தீர்ந்தது.
இதற்கு முன்னர் பலரும் பொங்குதமிழ் போன்ற எழுத்துரு மாற்றிகளையே நம்பி வந்தனர்....


சாதாரணமான எழுத்துருக்களில் நம் வேர்டு கோப்புகளை உருவாக்கிய பின்னர்,
அதனைக் காப்பி செய்து பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியில் இட்டு யுனிகோடு முறைக்கு மாற்றி அதனைக் காப்பி செய்து நம் வலைப்பதிவுகளிலும் மின்னஞ்சல்களிலும் பயன்படுத்தி வந்தோம்..... பயன்படுத்தி வருகிறோம்..

தமிழ்ப் பிடிஎப் கோப்புகளை இணைய இணைப்பின்றி மாற்ற...பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றி சாதாரணமான எழுத்துருக்களை யுனிகோடுக்கு மாற்றவும் – யுனிகோடு எழுத்துருக்களை சாரணமான எழுத்துருக்களாக மாற்றவும் பயன்பட்டு வருவது யாவரும் அறிந்ததே....

எனது நண்பர் ...............
இணைய இணைப்பின்றி பிடிஎப் கோப்புகளை மாற்ற வேண்டும் என்றார் நானும் இந்த மென்பொருளைக் கூறினேன்...
அவர் பொங்குதமிழையே இணைய இணைப்பின்றிபப் பயன்படுத்தலாமா...?

என்று கேட்டார்.....

நானும் அத்தளத்தில் தேடிப்பார்த்தபோது அதற்கு வழி இருந்தது அறிந்து மகிழ்ந்தேன்.....

மிக எளிய வழியில் பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியை நம் கணினியில் சேமித்துக்கொள்வதால் இது சாத்தியமாகிறது...

வழிமுறை....

முதலில்

பொங்குதமிழ் இணையதளத்துக்குச் செல்லவும்..




படத்தில் உள்ளது போல (பைல் – சென்று சேவ் அஸ்) செய்து சேமித்துக் கொள்ளவும்.
அவ்வளவு தான் இனி இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் நீங்கள் யுனிகோடு எழுத்துக்களை உருவாக்க முடியும்...

இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் நீங்கள் பிடிஎப் கோப்புக்களை எழுத்துரு மாற்றிக் கொள்ளமுடியும்.....

17 கருத்துகள்:

  1. nalla pagirvu nadri munaivarey ...

    பதிலளிநீக்கு
  2. நனும் என்.எச்.எம். எழுதியைத்தான் பயன்படுத்துகிறேன். ஆனால் அதிலும் பல புதிய தகவலை தெரிந்து கொண்டேன். பொங்கு தமிழ் பற்றியும் புது தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி தோழரே.

    பதிலளிநீக்கு
  3. nalla pagirvu nadri munaivarey /

    வருகைக்கு நன்றி நண்பரே…...

    பதிலளிநீக்கு
  4. ஃபல புதிய தகவலை தெரிந்து கொண்டேன். பொங்கு தமிழ் பற்றியும் புது தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி தோழரே

    ...

    நன்றி தோழரே.....

    பதிலளிநீக்கு
  5. நன்றி நன்றி கோடி கோடி நன்றி
    சுசீலா

    பதிலளிநீக்கு
  6. நன்றி நண்பரே.
    நல்ல தமிழ்ப்பணி.
    சுசீலா

    பதிலளிநீக்கு
  7. நல்ல பயனுள்ள இடுகை நன்றிகள்,,,

    பதிலளிநீக்கு
  8. /நன்றி நன்றி கோடி கோடி நன்றி
    சுசீலா/

    மிக்க மகிழச்மிக்க மகிழச்சி...........சி...........

    பதிலளிநீக்கு
  9. நல்ல பயனுள்ள இடுகை நன்றிகள்,,,/

    நன்றி நண்பரே,.,,.,.,.,.,.,

    பதிலளிநீக்கு
  10. இவ்விடுகை உட்பட எனது இடுகைகளை தமிழிஷில் ஓட்டளித்துப் பிரபல இடுகைகளாக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்........

    பதிலளிநீக்கு
  11. பொங்கு தமிழில் அப்படி எல்லாம் மாறவில்லை நண்பரே. நீங்கள் சொன்னது போல கொடுத்து பார்த்தேன். அப்படி எல்லாம் பயன்படுத்த முடியவில்லை. எழுத்துரு மாறவில்லை. உநிகோடு ஆகவில்லை.

    குமரன்

    பதிலளிநீக்கு
  12. ஒரு வேளை இணைய தள இணைப்பு தடைபட்டதால் அப்பிழை நேர்ந்திருக்கலாம் நண்பரே. பொங்குதமிழ் மாற்றியை ஆன்லைன் ஆப்லைன் என இருநிலைகளிலும் இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன் . இது வரை தாங்கள் சொல்வது போன்ற சிக்கல் எது வும் எனக்கு நேர்ந்ததில்லை. தங்கள் சிக்கலை இன்னும் விளக்கமாகக் கூறினால் நான் தங்கள் சிக்கல் தீர்க்க உதவியாக இருக்கும் நண்பரே.

    பதிலளிநீக்கு
  13. //அதாவது படத்தில் உள்ளது போல (பைல் – சென்று சேவ் அஸ்) செய்து சேமித்துக் கொள்ளவும்.//

    செய்தேன். பிறகு இணைய இணைப்பை துண்டித்து விட்டு அதாவது ஆப்லைனில் எழுத்துருவை இட்டு தினகரன் என்பதை க்ளிக் செய்தால் கீழுள்ள விண்டோவில் மாறவில்லை. நானும் இதுபற்றி சுரதா இணையத்துக்கு மின்னஞ்சல் கொடுத்தேன். பதில் இல்லை நண்பரே.

    குமரன்

    பதிலளிநீக்கு
  14. நண்பரே தங்கள் கேள்விகளுக்கான பதிலாக அடுத்த பதிவு அமையும்..
    தங்களுக்காகவே இன்னும் விளக்கமாக ஒரு பதிவு எழுதுகிறேன்..

    தாங்கள் தங்கள் வலைப்பதிவு அல்லது மின்னஞ்சல் முகவரியோடு தங்கள் ஐயங்களை வினவலாமே..

    பொதுவாக நான் எனக்கு சுய விவரம் இன்றி வரும் கருத்துரைகளை எனது பதிவில் வெளியிடுவதில்லை.

    தங்கள் இரு கருத்துரையும எனது பதிவு பற்றிய ஐயம் என்பதாலேயே வெளியிடுகிறேன்..
    தங்கள் ஐயம் தீர்ப்பதாக அடுத்த இடுகை அமையும்..
    வருகைக்கும் தங்கள் ஐயம் குறித்த வினவலுக்கும் நன்றி நண்பரே...

    (
    நண்பரே...
    அடுத்த முறை தங்கள் கருத்துரையை
    தங்கள் சுயவிவரத்துடன் எதிர்பார்க்கிறேன்..)

    பதிலளிநீக்கு
  15. yes i got it man. i just changed the file name when i given save as. thats why it didnt work. yesterday i found out myself. i given save as and saved the file without changing the file name. now its working well man. thanks for your reply. i think there is no need to post a [pathivu].

    பதிலளிநீக்கு
  16. மிகவும் அருமையான தமிழ்பணி செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு