வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 8 செப்டம்பர், 2010

கர்வம் அழிந்தது.



நான் மறையைக் கற்றவனல்ல ஞானி!
நான் மறையக் கற்றவனே ஞானி!

என்பது முதுமொழி.

நான் என்னும் அகந்தையையின்றி வாழ்வது எல்லோராலும் இயலாதவொன்றாகும். இருந்தாலும் அவ்வாறு இருக்க முயல்பவர்கள் தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளக் கூடத்தேவையில்லை. எல்லோரும் அவர்களை ஞானி என்றுதான் உணர்வார்கள்.கதை ஒன்று…………



அறிஞன் ஒருவன் இருந்தான் அவனுக்கு தான் மிகவும் அறிவாளி என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. யாராக இருந்தாலும் அவர்களை கேள்வி கேட்டே மடக்கிவிடமுடியும் என்று தன்மீது மிகுந்த கர்வம் கொண்டிருந்தான்.

இவன் கர்வத்தை அழிப்பதற்காகவே காலம் ஒரு சூழலை உருவாக்கித்தந்தது.

ஒருநாள் கிராமத்தின் வழியே சென்றுகொண்டிருந்த அறிஞன், அவ்வழியில் மாடுமேய்த்துக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தான். நல்ல அறிவாளிகளே நான் கேள்வி கேட்கிறேன் என்றால் பேரச்சம் கொள்வார்கள். இவன் படிப்பறிவில்லாதவன் இவன் தன்கேள்விகளுக்கு அஞ்சுவதைப் பார்த்து இரசிக்கவேண்டும் என்று விரும்பினான்.

அறிஞன் : உன்னிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன்.

மாடு மேய்க்கும் இளைஞன் : (தயக்கமே இன்றி) கேளுங்கள்……..


அறிஞன் : (என்னடா இது அறிஞர்களே அஞ்சும் தன்னிடம் இவன் எந்த அச்சமுமின்றி கேள்வி கேளுங்கள் என்கிறானே! என்ற கேள்வியுடன்…)

1. “உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?

மாடு மேய்க்கும் இளைஞன் : சூரிய ஒளி! அதற்கு மேற்பட்ட ஒளியே இல்லையே!

அறிஞன் : 2.உலகின் சிறந்த நீர் எது?

மாடு மேய்க்கும் இளைஞன் : கங்கை நீர்! சிவன் தலையிலிருந்தும். விட்ணுவின் பாதத்திலிருந்தும் வந்து அதில் மூழ்கியவர்களுக்கு வீடுபேறளிக்கும கங்கை நீரைவிட சிறந்த நீர் வேறென்ன இருக்கமுடியும்?

அறிஞன் : 3. உலகின் சிறந்த மலர் எது?

மாடு மேய்க்கும் இளைஞன் : தாமரை மலர்! தேவதேவியரும் வீற்றிருக்கும் மலரை விட சிறந்த மலர் வேறேது? என்றான்..


அறிஞன் : ( இவனை படிப்பறிவில்லாதவன் வெறுங்குடம் என்றல்லவா எண்ணினேன். இவன் நிறைகுடம் என்று தெளிந்தான் அறிஞன்… ) உன் அறிவை மெச்சுகிறேன் இந்தா என்னுடைய விலையுயர்ந்த முத்துமாலை என்று பரிசளித்தான்…..

மாடு மேய்க்கும் இளைஞன் : (அறிஞனின் மிச்சம் மீதியிருக்கும் கர்வத்தையும் சம்மட்டியால் அடித்து நீக்க எண்ணி…) ஐயா நான் இந்தப் பரிசுக்குத் தகுதியல்லாதவன் அதனால் வேண்டாம். ……….

ஏனென்றால் நான் சொன்ன பதில்கள் மூன்றும் தவறானது..

அறிஞன் : (திகைத்து நின்ற அறிஞன் பேச்சின்றி விழித்தான்) என்னப்பா சொல்கிறாய் இதற்கு மேலும் இந்தக் கேள்விக்கு வேறு பதிலே இல்லையே!

மாடு மேய்க்கும் இளைஞன் : ஐயா…

2. சூரிய ஒளி சிறந்தது தான் இருந்தாலும் அந்த ஒளியைப் பார்ப்பதற்குக்கூட நம் கண்ணில் ஒளி வேண்டும்.. அதனால் கண்ணொளி சூரிய ஒளியைவிட உயர்வானது.
3. கங்கை நீர் புனிதமானது தான்.. இருந்தாலும் அதனை எல்லா நாட்டினரும், சமயத்தாரும் ஏற்பார்களா? அதனால்…..
தாகத்தோடு இருக்கும் ஒருவனுக்கு…..

கிடைக்காத கங்கை நீர் - கிடைத்த சிறிதளவு நீர்

என ஒப்பிட்டு நோக்கினால் கங்கை நீரை உயர்வானது எனக் கருதமுடியாது.

4. தாமரை மலருக்குப் பல சிறப்புகள் இருந்தாலும். நீரைவிட்டு வெளியே எடுத்தால் தாமரை வாடிவிடும்.. உண்மையில் மலர்களில் சிறந்தது பருத்திமலர்தான். அதிலிருந்து கிடைக்கும் நூலில் நெய்யப்படும் ஆடைகள் மக்களின் மானத்தையல்லவா நாள்தோறும் காக்கிறது. பருத்திமலரை விடத் தாமரை எந்த விதத்தில் மக்களுக்குப் பயன்டும் சிறந்த மலராகமுடியும்?


அறிஞன் : (தன் கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில் தலை தாழ்த்தி உண்மையை ஏற்றுக்கொண்டு விடைபெற்றான்)


இந்தக் கதையில் கேட்ட கேள்விக்கான பதில்கள் சரி - தவறு என்று நாம் சிநத்திப்பதைவிட….

அந்த அறிஞனின் கர்வத்தை அழிக்கும் ஆயுதமாக இந்த பதில்கள் அமைந்தன என்று சிந்திப்பது மிகவும் சரியான புரிதாலாக இருக்கும்.

13 கருத்துகள்:

  1. அருமையான இடுகை..... உண்மைதான், "நான்" மறைய கற்றவனே ஞானி!

    பதிலளிநீக்கு
  2. ஞானி குறித்த கருத்துகள் மனதில் அழுத்தமாக பதிந்துவிட்டது..

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. ஆளைப் பார்த்து எடை போடாதேன்னு சொல்லுவாங்க சரியாத் தான் இருக்கு குணா...

    பதிலளிநீக்கு
  4. சிந்திக்க வைக்கும் பதிவு.
    அருமை குணா.

    பதிலளிநீக்கு
  5. படம் சூப்பர் எங்கிருந்து பிடிதீங்க

    பதிலளிநீக்கு
  6. மார்க்கெட்டிங்கில் சொல்வார்கள் கஸ்டமர் யார் என்று கண்டுபிடிக்க முடியாது.அது போல் தான் இதுவும். அறிவு எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது. அது வெகு சாதாரணமான எளிமையிலும் கூட இருக்கலாம்!

    பதிலளிநீக்கு
  7. @Chitra தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் இணையத்தளத்துக்கு எளிதான முறையில் டிராபிக் பெறுவது எப்படி ?


    Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை




    மேலும் விபரங்களுக்கு



    http://www.tamilpanel.com/







    நன்றி

    பதிலளிநீக்கு