வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

தளிர்ப்பு


தன்னம்பிக்கை தரும்
கவிஞர் காசியானந்தன் அவர்களின் குறுங்கதை ஒன்று..


லையுதிர் காலம்
மரம் மொட்டையாக நின்றது.
புல்மேய்ந்த மாடுகள் மரத்தை இரக்கத்தோடு நோக்கின.
உன் இலைகள் விழுந்துகொண்டே இருக்கின்றன.

உன்னைப் பார்த்தால்
அழவேண்டும்போல் இருக்கிறது... என்று..
ஒரு மாடு தழுதழுத்த குரலில் கூறியது.

மரம் சொன்னது..

“நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.  புதிய தளிர்களுக்காக அவை விழத்தான் வேண்டும்.”

நிமி்ர்ந்தே நின்றது மரம்.
அதுசொன்னது...

“விழுவதற்கெல்லாம்
அழுவதற்கில்லை”


16 கருத்துகள்:

 1. //“விழுவதற்கெல்லாம்
  அழுவதற்கில்லை”//

  அருமையான வரிகள்.அழகிய கதை.பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. எத்தனை கவித்துவமான வார்த்தைகள்.
  வாழ்வியல் பொருள் கூறும் மாபெரும் தத்துவம்.

  கவிஞர் பிரமிள் அவர்கள், சொல்கையில்
  மரத்தினின்று உதிர்ந்த ஒரு உலர்ந்த சிறகு
  காற்றின் வழியில் வரைந்த காவியம் ....
  என்று ஆரம்பித்து மிக நீண்ட வாழ்வியல் பொருட்களை
  அழகாகச் சொல்வார்.

  கவிஞர் காசியானந்தனின் வாழ்வியல் கவியை
  அழகுறச் சொன்னதற்கு நன்றிகள் பல முனைவரே.

  பதிலளிநீக்கு
 3. அருமையான வரிகளை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி அண்ணா!

  பதிலளிநீக்கு
 4. தன்னம்பிக்கை தரும் கவிஞர் காசியானந்தன் அவர்களின் குறுங்கதையை மீண்டும் ஞாபகமூட்டியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. "If winter comes can spring be far behind?" என்று ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது....தன்னம்பிக்கைக்கு ஒரு முத்தான கவிதை!

  பதிலளிநீக்கு
 6. சோர்கின்ற மனதிற்கு உற்சாகம் தரத் தேர்ந்தெடுத்த வரிகள் அருமை குணா !

  பதிலளிநீக்கு
 7. அருமையான கவிதையை பதிவாக்கித்
  தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 6

  பதிலளிநீக்கு
 8. சிறு விதையினுள் பெரிய விருட்சம் அடங்கியிருக்கிறது. குட்டிக் கதையினுள் பெரிய வாழ்வியல் தத்துவமே அடங்கியிருந்தது மிக அருமை. எம்முடன் இதைப் பகிர்ந்தமைக்கு நன்றி முனைவரையா...

  பதிலளிநீக்கு
 9. //நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. புதிய தளிர்களுக்காக அவை விழத்தான் வேண்டும//


  அருமையான சிந்தனை. அற்புதமான பதிவு முனைவரே!

  பதிலளிநீக்கு
 10. அருமை! முனைவரே!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 11. இலைகள் விழுந்தால் என்ன? வேர் இருக்கிறது.. எப்பொழுதும் வேர்களைதேடி.. கோவி.

  பதிலளிநீக்கு
 12. அருமையான, மிக ஆழமான வரிகள்...

  அருமை... நண்பரே...

  பதிலளிநீக்கு
 13. //“விழுவதற்கெல்லாம்
  அழுவதற்கில்லை”//

  அருமையான கருத்து..

  விழுவதெல்லாம் மீண்டு எழுவதற்கே...

  பதிலளிநீக்கு
 14. கருத்துரையளித்த அன்பு நெஞ்சங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

  பதிலளிநீக்கு