வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

ஏழாம்அறிவு உள்ளவரா நீங்கள்?
தாயின் கருவறையைவிட்டு
வெளியே வந்தே
வளர்க்கவேண்டியதாகவுள்ளது
ஏழாம் அறிவு!

தந்தை தேடித்தந்தாலும்
அடிக்கடி
தொலைந்துபோகிறது
ஏழாம் அறிவு!

எப்படிப் பெறுவது என்று
ஆசிரியர் கற்றுத்தந்தாலும்
புரிவதே இல்லை
ஏழாம் அறிவு!

எத்தனை புத்தகங்கள்
எடுத்துச் சொன்னாலும்
மறந்துபோகிறது
ஏழாம் அறிவு!

ஏழாம் அறிவு
இல்லாதவர்களுக்கு
ஆறு அறிவு இருந்தாலும்
மதிப்பே இருப்பதில்லை!

ஏழாம் அறிவு மட்டும்
இருந்துவிட்டால்
அவர்களைச் சுற்றி....

கைகட்ட
வாய் பொத்த
ஆமாம் ஆமாம்
 என்று தலையாட்ட
ஆயிரம்ஆயிரம்
வயிற்று மனிதர்கள்!!

ஆம்
இந்த ஏழாம் அறிவின்
இன்னொரு பெயர்
“பணம்“

இதைப்
புரிந்துகொள்வதிலும்
புரியவைப்பதிலுமே
வாழ்க்கை
தொலைந்துபோகிறது!


தொடர்புடைய இடுகை


மூன்று வகை மனிதர்கள்

36 கருத்துகள்:

 1. //இதைப் புரிந்துகொள்வதிலும்புரியவைப்பதிலுமேவாழ்க்கையைத் தொலைந்துபோகிறது//
  ம்ம்ம்...
  பணம் மட்டுமே வாழ்கையல்ல என்று புரிந்துக் கொண்டால் தொலைந்து போகாமல் காப்பாற்றலாம்

  பதிலளிநீக்கு
 2. மேலே நீங்கள் வைத்திருக்கும் படமே கதை சொல்கிறது. பணத்தைத் தேடுவதிலும் துரத்துவதிலுமே பாதி வாழ்‌க்கை முடிந்து விடுகிறது. சத்தியமான விஷயம்தான். நகைச்சுவையும், வேதனையும் கலந்த உணர்வை எழுப்பியது உங்களின் இப்பதிவு. நன்றி முனைவரையா...

  பதிலளிநீக்கு
 3. ஆறாவது தாண்டுவதர்க்குள்ளே மனிதன் பணம் என்ற பள்ளத்திற்குள் விழுந்து விடுகிறான். சமூகத்தை அவலத்தை அழகாக காட்டியிருக்கிறீர்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 4. அந்த ஏழாம் அறிவு தேவைதானா என்று யோசிக்கவைக்கிறது உங்கள் பதிவு. நாட்டு நடப்பை அப்பட்டமாக விமர்சித்துள்ளீர்கள் உங்கள் பாணியில்! பாராட்டுகள் முனைவரே.

  பதிலளிநீக்கு
 5. சரியாக சொன்னீர்கள்.. எப்போதும் ஆறு அறிவிற்கு மதிப்பே இல்லை...


  இன்றைய மனிதம் பணத்தை வைத்தே அளவிடுகிறது...

  பதிலளிநீக்கு
 6. பணம் மட்டுமே உலகம் உறவு என்கிற சொல்பதம் இருக்கிறவரை நீங்கள் குறிப்பிடுகிற ஏழாம் அறிவு இருக்கத்தான் செய்யும்.ஏன் அப்படி ஆனது சமூகம் என்பதும் கசக்கும் முரணாகவே உள்ளது.
  வாழ்வதற்காய் பணம் என்பது போய் பணம் சம்பாதிப்பதற்க்காக வாழ்கிற மனோநிலை வந்துவிட்டது இன்று அதன் பிரதிபலிப்பே தங்களின் பதிவு நன்றாக இருக்கிறது,வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. பணத்திற்கு மதிப்பே மனிதனால் கொடுக்கப்பட்டது, இன்று அந்த பணம் தான் மனிதனுக்கு மதிப்பை கொடுக்கிறது. பணத்திற்கு முன் மனிதன் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறான்...

  பதிலளிநீக்கு
 8. தங்களின் ஐநூறாவது பதிவு போல.. கண்டுபிடித்து சொன்ன முதல் ஆள் நான்தானே... வழக்கம் போல அழகு...
  இன்று என் வலைப்பூவில்... மயில் அகவும் நேரம் 02 :00

  பதிலளிநீக்கு
 9. உண்மையை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்...

  மனிதனின் ஏழாம் அறிவு மட்டுமல்ல, முருகதாஸின் ஏழாம் அறிவும் பணத்தை அடிப்படியாக கொண்டது!

  பதிலளிநீக்கு
 10. நல்ல அறிமுகம் ஏழாம் அறிவு. வாழ்த்துகள் ஐயா.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 11. சரியாச் சொல்லிட்டீங்க குணா.இப்பல்லாம் பணம்தான் எல்லாத்தையுமே தீர்மானிக்குது !

  பதிலளிநீக்கு
 12. ஏழாம் அறிவு பணம்!
  அருமை! தங்கள் கூற்று முற்றிலும் சரிதான் முனைவரே!


  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 13. நச்சுன்னு இருக்கு குணா...

  பதிலளிநீக்கு
 14. @ராஜா MVSநீங்கள் சொல்லவது முற்றிலும் உண்மை நண்பா..

  பதிலளிநீக்கு
 15. @மயிலன்தங்க்ள ஆழ்ந்த உற்றுநோக்கலுக்கு நன்றிகள் நண்பா..

  நீங்கள் பார்த்த கட்டளைநிரலில் 1 இடுகை கூடுதலாகத்தான் காட்டுகிறது..

  நிலையான வரிசைப்படி இன்றுதான் 500வது இடுகை

  தங்கள் வாழ்த்துக்களுக்க நன்றிகள் நண்பா.

  பதிலளிநீக்கு