வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 3 டிசம்பர், 2011

கனவு வியாபாரிகள்!

கடவுள் நம்பிக்கைகளை
உண்டியலில் 
சேர்க்கத் தெரிந்த
மதவாதிகள்!

தனிமனித ஆசைகளை
நடித்துக்காட்டி
நடந்ததாக நம்பச் செய்யும்
திரைத்துறையினர்!

சிவப்புதான் அழகின் நிறம்
என்று
மூளைச் சலவை செய்யும்
விளம்பரக்காரர்கள்!

எல்லாம் மக்களுக்காக
என்று சொல்லி ஆட்சிக்குவந்து
தன் மக்களுக்காகவே சேமிக்கும்
அரசியல்வாதிகள்!

பிள்ளைகளைப் பற்றிய
பெற்றோரின் கனவுகளைக் 
காசாக்கத் தெரிந்த
தனியார் கல்வி நிறுவனங்கள்!

கட்டிப்போட்டு 
சோம்பேறியாக்கி
விளையாட்டுக்காட்டியே காசுபறிக்கும்
தொலைக்காட்சிகள்!

ஆளும்கட்சிக்கு
ஆமாம் சாமி போட்டு
பக்கம்பக்கமாக பொய்யை விற்கும்
நாளிதழ்கள்!

பலவீனத்தை வைத்தே 
பலன் சொல்லிப்
பணம் பார்க்கும் 
சோதிடக்காரர்கள்!

என 
நம்மைச் சுற்றிலும்
கனவு வியாபாரிகள்!!

நாமும்கூட
சிலநேரங்களில் 
கனவுவியாபாரிகளாகவே
வாழ்ந்துதொலைக்கிறோம்!

தனிமனிதக் கனவுகளை
வியாபாரம் செய்வதும்
கற்பை வியாபாரம்
செய்வதும் வெவ்வேறா??

என்பது மட்டும் எனக்குப் புரியவில்லை!!

37 கருத்துகள்:

 1. அட.. அருமையான உவமைகள், அனைத்தும் சொல்லிவிட்டு கடைசியில் கேட்டீர்கலே ஒரு கேள்வி சம்மட்டியால் அடிப்பதுபோல் தோன்றுகிறது.. வேரென்னத்த சொல்ல..

  பதிலளிநீக்கு
 2. நாட்டு நடப்பை நல்ல சொன்னிங்க

  பதிலளிநீக்கு
 3. //தனிமனிதக் கனவுகளை
  வியாபாரம் செய்வதும்
  கற்பை வியாபாரம்
  செய்வதும் வெவ்வேறா??//

  முதலாவது நவீன யுகத்தின் தந்திரம்
  இரண்டாவது பழசு தானே குணா?

  பதிலளிநீக்கு
 4. //கடவுள் நம்பிக்கைகளை
  உண்டியலில்
  சேர்க்கத் தெரிந்த
  மதவாதிகள்!// இது செம..போட்டு கொல்லனும்

  பதிலளிநீக்கு
 5. வார்த்தை பஞ்சத்தில் நான் எழுத நினைத்தும் முடியாத கருத்துக்களை ஆங்கங்கே கண்டேன்...மிகவும் பிடித்திருந்தது...

  இன்று என் வலையில் ...
  மனவாசம்

  பதிலளிநீக்கு
 6. நாட்டு நடப்பை வரிசைப்படுத்திவிட்டு கடைசியாகக் கேட்ட கேள்வி....இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.ஒன்று வாழ்வில் உயர இலாபத்துக்கு மேல் இலாபம் சேர்ப்பது.மற்றதுக்கான காரணங்கள் ஆயிரம்.இதில் இலாபம் என்பது மிக மிகக் குறைவே !

  பதிலளிநீக்கு
 7. சரியாகச் சொன்னீர்கள்."நம்மைச்சுற்றியும் கனவு வியாபாரிகள்".

  பதிலளிநீக்கு
 8. நல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம்
  பார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி
  சகோ பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .

  பதிலளிநீக்கு
 9. நல்ல கருத்து முனைவரையா... சிவப்புதான் அழகின் நிறம் என மூளைச் சலவை செய்யப்படுவதில் எனக்கும் வருத்தம் உண்டு. அந்த விளம்பரங்களைப் பார்க்கும் போதெல்லாம் எரிச்சலும் வரும். உங்கள் உணர்வுகளுக்கு ஒரு சல்யூட்!

  பதிலளிநீக்கு
 10. நாம் கனவு வியாபாரிகள்தான் ஆனால்
  கனவுகளை விற்க தேர்ந்தெடுத்த சந்தைதான் தவறானது.

  கற்பும் கனவும் ஒன்றாகவே ஆகாது கற்பை அழிக்க இயலும் கனவை உருவாக்கவோ சேமித்துவைக்கவோ முடியும் ஒரு போதும் அழிக்க முடியாது..

  மேலே உள்ள அத்தனை கவிதைகளும் சமூக நியதி பேசுகின்றன.. நியாயம் கிடைக்குமா?

  பதிலளிநீக்கு
 11. அனைத்தும் சவுக்கடிகள் தோழரே..

  பதிலளிநீக்கு
 12. அருமையான பதிவு முனைவரே, ஒரு முனைவருக்கே உரிய உயரிய எண்ணத்துடன் அமைந்த பதிவு, மனம் லயித்து போனேன்

  பதிலளிநீக்கு
 13. உணர்வுப்பூர்வமான உணர்ச்சிப்பூர்வம்.

  பதிலளிநீக்கு
 14. @மதுமதிமதிப்பீட்டிற்கு மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன் கவிஞரே.

  பதிலளிநீக்கு