வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு - நினைவுத்துளிகள்
 • சிந்திக்கவைக்கும் தமிழின் பெருமையோடு குழந்தைகள் தமிழ்வாழ்த்துப் பாட சரியாக இன்று 10.30 மணிக்கு தொடங்கியது ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு.
 • குழும உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வருகை தந்த பதிவர்களை இனிதே வரவேற்றனர்.
 • குழுமத்தின் தலைவர் தாமோதர் சந்ரு வருகை தந்த அனைவரையும் முகமலர்ச்சியுடன் வரவேற்று அமர்ந்தார்.
 • சிறப்பு விருந்தினரான “ஸ்டாலின் குணசேகரன்” அவர்களின் பெருமைகளைக் கூறி மனம் நிறைய வரவேற்றார் அன்பர் ஆருரன் அவர்கள்.
 • நண்பர் ஈரோடு கதிர் அவர்கள் குழுமத்தின் வரலாறை அழகுபட தொகுத்து உரைத்தார்.
 • விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 15 சிறந்த தமிழ்ப் பதிவர்களைத் தேர்வு செய்து அவர்களின் சமூகப் பணியைப் பாராட்டி நினைவுப் பரிசளித்து மகிழ்ந்தார்கள். அப்போது அந்தப் பதிவர்களின் சாதனைகள் காணொளிகளாகத் திரையில் தோன்றச் செய்தமை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
 • பாராட்டப் பட்ட பதிவர்கள்..
 1. உண்மைத்தமிழன் சரவணன்
 2. ஜாக்கிசேகர்
 3. ஐயப்பன் ஜீப்ஸ்
 4. அதிஷா
 5. தேனம்மை இலட்சுமணன்
 6. வெயிலான் இரமேஷ்
 7. வலைச்சரம் சீனா ஐயா
 8. கே.ஆர்.பி செந்தில்
 9. சுரேஷ்பாபு
 10. லக்கிலுக் யுவகிருஷ்ணா
 11. இரவிக்குமார்
 12. யெஸ்.பாலபாரதி
 13. இளங்கோவன்
 14. மகேந்திரன்
 15. ஓவியர் ஜீவா
 • ஈரோடு கதிர், மகேசுவரன், அருள்மொழி ஆகியோர் அழகுத் தமிழில் செம்மையாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது பெருமிதம் கொள்வதாக அமைந்தது.
 • ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தொழில்நுட்பத்தின் தற்கால வளர்ச்சியையும், வலைப்பதிவர்களின் தனிச்சிறப்பையும், பதிவின் தேவையையும் அழகாக சிந்திக்கும் விதமாக எடுத்துரைத்தார். “ வலைப்பதிவர்கள் சமூக மாற்றத்தில் பெரும்பங்காற்றுகிறார்கள்” என்பதை மிகவும் பெருமிதத்துடன் முன்மொழிந்து சென்றார்.
 • பரிசு பெற்ற 15 பதிவர்களும் விருது பெற்றமைக்கு ஏற்புரை தெரிவித்தனர்.
 • செல்வக்குமார் அவர்களின் குறும்படத்தை சிறப்பு விருந்தினர் வெளியிட்டார்.
 • ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்து பாராட்டினார்கள்.
 • ஈரோட்டில் முதல் முறை நடந்த கூட்டத்துக்கு 70 பேர்களும், இரண்டாவது ஆண்டு நடந்த கூட்டத்துக்கு 150 பேர்களும் இப்போது நடந்த கூட்டத்துக்கு 200 பேருக்குக் குறையாமல் பதிவர்கள் வந்தார்கள் என்பதை ஈரோடு கதிர் அவர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். மேலும் இக்குழுமத்தை அறக்கட்டளையாக மாற்றும் வாய்ப்பு உள்ளது என்பதையும் மகிழ்சிசயுடன் அவர் தெரிவித்தார்.
 • நிறைவாக நண்பர் பாலாசி அவர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
 • அடுத்து வருகை தந்த ஒவ்வொரு பதிவர்ளும் மேடைக்கு வந்து தம்மை அறிமுகம் செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
 • பதிவர்கள் ஒவ்வாருவரும் பெருமகிழ்ச்சியுடன் சென்று மேடையில் தம்மை அறிமுகம் செய்துகொண்டனர்.
 • சைவ, அசைவ உணவுக்கு ஏற்பாடு செய்திருந்த குழுவினர் பதிவர்களை அன்புன் மதிய உணவுக்கு அழைத்தனர்.
 • அவர்கள் அளித்த உணவைவிட அவர்கள் அருகே வந்து என்ன சாப்பிடுறீங், வேறு என்ன வேண்டும் என்று அன்போடு கேட்டது உணவின் சுவையை அதிகப்படுத்துவதாக அமைந்தது.
 • விழா முடிந்தும் பதிவின் உறவுகள் நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் பார்த்து உறவாடி மகிழ்ந்தனர்.

அன்பு நண்பர்கள் தாமோதர் ஐயா,ஈரோடுகதிர், ஆருரன்,சங்கவி, வால்ப்பையன், பாலாசி, இராஜா, கார்த்திக் ஆகிய குழும உறுப்பினர்களின் அன்பான வரவேற்பு என் குடும்த்தில் நடக்கும் திருமண விழாவுக்குச் சென்றுவந்ததுபோல மனநிறைவைத் தந்தது.

சீனா ஐயா
தமிழ்பேரன்ஸ் சம்பத்
தமிழ்வாசி பிரகாஷ்
வீடு.சுரேஷ்
எழுத்தோசை தமிழரசி
வானம்பாடிகள் ஐயா 
பொன்னியின் செல்வன் கார்த்திகேயன்
ஸ்ரீ

என வலையுலக சொந்தங்கள் பலரையும் நேரில் கண்டு மனம் விட்டுப் பேசியது மறக்கமுடியாத அனுபவமாகும்.


வலைப்பதிவர் சந்திப்பு தந்த நம்பிக்கைகள்.

 • வலைப்பதிவர்கள் நினைத்தால் சமூகத்தில் நல்ல பல மாற்றங்களை உருவாக்க முடியும்.
 • ஒவ்வொரு பதிவர்களும் ஏதோ ஒரு தனித்திறன்களுடனும், ஆயிரம் ஆயிரம் கனவுகளுடனும் சமூக மாற்றங்களுக்காகத் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கூட்டத்தின் அதிர்வாக இருந்தது.
 • பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த பதிவர்களின் முகங்களில் சொந்த வீட்டுக்கு வந்ததுபோன்ற அன்பு பிரதிபலித்தது.
 • இயல், இசை, நாடகத்தோடு தமிழ் என்றோ தற்கொலை செய்துகொண்டது என்ற சிலரின் பொருளற்ற வாதங்களைப் பொய்யாக்கும்விதமாக, தமிழ் தன்னை “இணையத்தமிழ்” என்று பெயர்மாற்றிக் கொண்டு வலைப்பதிவு, முகநூல், டுவைட்டர் என தன்னம்பிக்கையோடு உலா வருகிறது என்பதை எடுத்தியம்புவதாகவும் இவ்விழா அமைந்தது.

48 கருத்துகள்:

 1. தங்களின் நேரடி ரிப்போர்ட் அருமை,

  முத்து ரத்தினம், சவுதி அரேபியா.

  பதிலளிநீக்கு
 2. தங்களின் பதிவு, என்னை ஆறுதல் படுத்தியது. நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் என்னையும் அழைத்தார். என்னால் வர முடியாத சூழ்நிலை. நேற்று முழுக்க ஈரோட்டில் தான் இருந்தேன். (தொழில் விசயமாக) அப்போது நாளை இங்கு இருந்தால் பதிவர் சங்கத்தில் கலந்து கொண்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். உங்களின் இந்த பதிவைப் பார்த்ததும் சந்தோசம். நன்றி சார்! மேலும் முன்பை விட உங்கள் வலை இப்போது அழகு சார்! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான நினைவுப் பகிர்வு நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் முனைவரே..

  சங்கமத்தில் நானும் வந்து உங்களையெல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

  உண்மைதான் நீங்கள் எடுத்துரைத்த நம்பிக்கைகள் அனைத்தும் வருங்கால தமிழ்பதிவுலகம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்த்துக்கிறது

  பதிலளிநீக்கு
 5. தங்கள் மகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே

  த.ம 3

  பதிலளிநீக்கு
 6. ஆஹா சூப்பரான பதிவர் சந்திப்பு வாழ்த்துக்கள்...!!!

  பதிலளிநீக்கு
 7. ஈரோடு பதிவர்கள் சந்திப்பை பற்றி அழகான பதிவு.நன்றி பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 8. சங்கமத்தில் நானும் கலந்துகொண்டது போல
  ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் முனைவரே.
  நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 9. Soodaana Pathivu. Negilchiyaga irunthathu. Next Year Kandippaa Naan varuven Nanbare!

  TM 5.

  பதிலளிநீக்கு
 10. Munbu En Mobile moolam vote poda mudiyathu. Ippo mudikirathu Sago. Ippadiye irukkattum. Settings matra vendaam anbare.

  பதிலளிநீக்கு
 11. நண்பா உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
 12. நானும் இதில் கலந்து கொண்டிருந்தேன் என்பது மகிழ்ச்சி !
  அறிமுக உரைக்கு வரவில்லை...
  என் facebook ID : Geneva Yuva

  பதிலளிநீக்கு
 13. சுவையாய், சுறுசுறுப்பாய் இருந்தது தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 14. பதிவர் சங்கமம் நிகழ்வுகள் அருமை....

  பதிலளிநீக்கு
 15. சுவையாய், சுறுசுறுப்பாய் இருந்தது தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 16. சுவையாய், சுறுசுறுப்பாய் இருந்தது தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 17. சுவையாய், சுறுசுறுப்பாய் இருந்தது தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 18. சுவையாய், சுறுசுறுப்பாய் இருந்தது தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 19. நானும் வந்திரிதேன் அருமையான நிகழ்வு

  பதிலளிநீக்கு
 20. குணா,

  இணைய நண்பர்கள் சந்திப்பு விழா-வைச் சிறப்பாக தொகுத்தளித்தமைக்கு நன்றிகள்.

  எனக்குதான், எல்லோரையும் ஓரிடத்தில் சந்திக்கும் வாய்ப்பு வாய்க்காமல் போனது.

  பதிலளிநீக்கு
 21. அழகான அருமையான அவசியமான பதிவுக்கு நன்றி.
  நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சி+ஆறுதல் அளிக்கும் பதிவு. பாராட்டுக்கள்.vgk

  பதிலளிநீக்கு
 22. முனைவருக்கு நன்றிகள் பல...

  பதிலளிநீக்கு
 23. அடுத்த வருடம் நானும் வருவேன்....எனக்கும் மந்திரி பதவி வேண்டும்...

  பதிலளிநீக்கு
 24. மிக்க நன்றியும், பாராட்டும், அன்பும்...

  பதிலளிநீக்கு
 25. கலந்துகொள்ள முடியாதவற்களுக்கு ஒரு நிறைவை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது தங்களின் இப்பதிவு...

  நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 26. நேரில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்தியது.. நிறைவான பகிர்வுக்கு நன்றி..!!

  பதிலளிநீக்கு
 27. உங்களை எப்படி சந்திக்க தவறினேன் என தெரியலை குணசேகர் !

  பதிலளிநீக்கு
 28. தங்களது பதிவில் என்னை பாராட்டியமைக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 29. விழாவில் கலந்துகொண்டு மகிழ்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது, உங்கள் பதிவு. விவரங்களை மிகச் சுவையாகவும் அழகாகவும் தொகுத்தளித்துள்ளீர்கள். நன்றி முனைவரே.

  பதிலளிநீக்கு
 30. பதிவர் சந்திப்பை மிக அழகாக விவரித்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி பாஸ்.

  பதிலளிநீக்கு
 31. நன்றி குரு
  நன்றி முத்து
  நன்றி விக்கி
  நன்றி ரஹீம்
  நன்றி பிரேம்

  பதிலளிநீக்கு
 32. நன்றி சிபி
  நன்றி காசியபன்
  தங்கள் ஆர்வத்திற்கு நன்றி தனபாலன்
  நன்றி மதிசுதா.

  உங்களைச் சந்தித்ததில் எனக்கும் பெருமகிழ்ச்சி சம்பத்.

  பதிலளிநீக்கு
 33. நன்றி எம்ஆர
  நன்றி நாஞ்சில் மனோ
  நன்றி இராம்வி
  மகிழ்ச்சி மகேந்திரன்
  நன்றி டேனியல்.

  பதிலளிநீக்கு
 34. உங்களைச் சந்தித்து உறவாடியதில் பெருமகிழ்ச்சி பிரகாஷ்

  தங்களை முகநூலில் தொடர்கிறேன் ஆகாயமனிதன்.

  நன்றி நிசாமுதீன்

  நன்றி கோவைநேரம்

  மகிழ்ச்சி எவரெஸ்டு துரை

  பதிலளிநீக்கு
 35. அடுத்தமுறை கலந்துகொள்வீர்கள் என நம்புகிறேன் சத்ரியன்

  மகிழ்ச்சி கோபாலகிருஷ்ணன் ஐயா.
  நன்றி வீடு சுரேஷ்
  நன்றி அமைதிஅப்பா
  மகிழ்ச்சி சேகர்
  நன்றி கே.ஆர்.பி.செந்தில்
  மகிழ்ச்சி இராஜா

  பதிலளிநீக்கு
 36. நன்றி தங்கம்பழனி
  கூட்டத்தில் தங்களைக்காண நானும்தான் தவறிவிட்டேன் மோகன்..
  மகிழ்ச்சி பைங்கிளி
  நன்றி கீதா
  மகிழ்ச்சிங்க கதிர்.
  நன்றி பிரசாத்

  பதிலளிநீக்கு
 37. பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. ரொம்ப சந்தோஷமா இருக்கு

  பதிலளிநீக்கு
 38. சங்கமத்தில் சங்கமிக்க முடியாதவர்களுள் ஒருவனாய் வேதனைப்படுகிறேன்..

  அடுத்த சந்திப்பு நடந்தால் வர முயற்சி செய்கிறேன்

  பதிலளிநீக்கு
 39. அன்பின் குணா - சங்கமத்தில் சந்தித்து ஐயம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. சங்கமத்தின் நிகழ்ச்சிகளை விவரிக்கும் பதிவு அருமை. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு