வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

தீண்டாய் மெய் தீண்டாய்..


கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீ்ம்பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே
 


என்ன நண்பர்களே இந்தப் பாட்டை எங்கோ கேட்டது போல இருக்கா...?

ஆம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் என்சுவாசக் காற்றே என்று ஒரு படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அதில் தீண்டாய் மெய் தீண்டாய் என்று ஒரு பாடல் இடம் பெற்றது. அந்தப்பாடலின் தொடக்கத்தில்…இந்த சங்கப்பாடல் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதன் ஆங்கில வடிவம்... (மொழிபெயர்ப்பு ஏ.கே.இராமனுசம் அவர்களுக்கு நன்றி)

Like milk
not drunk by the calf
not held in a pail,

a good cow’s sweet milk
spilled on the ground,

it’s of no use to me
unused by my man

my mound of love
my beauty
dark as mango leaf

just waiting
to be devoured
by pallor

குறுந்தொகை -27
கொல்லன் அழிசியார்

பசுவின் பாலைவிட சுவையான இப்பாடலின் பொருளை அறிய...

தீண்டாய் மெய் தீண்டாய் என்னும் இடுகையைக் காணத்

 தங்களை அன்புடன் அழைக்கிறேன்.


10 கருத்துகள்:

 1. நான் இந்த பாடலைப் பதிவிறக்கம் செய்து ரொம்ப மெனக்கட்டு அந்த வரிகளை மனப்பாடம் செய்த நாட்கள் உண்டு...அழகிய பதிவு முனைவரே...:)

  பதிலளிநீக்கு
 2. இதுவரை அறியாத அருமையான அரிய பாடல்
  பதிவாக்கி அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
  த.ம 2

  பதிலளிநீக்கு
 3. விழுதுகள் எல்லாம் வேர்களின் பலத்தில் தான்
  இருக்கின்றன என தெளிவாக புலனாகிறது முனைவரே...

  பதிலளிநீக்கு
 4. தீண்டாய் மெய் தீண்டாய் -இன் வேரினைச் சுட்டியமைக்கு நன்றி முனைவரே.

  பதிலளிநீக்கு
 5. இருப்பதையேதான் அழகுபடுத்தி திரும்பவும் தருகிறார்கள் !

  பதிலளிநீக்கு
 6. Tamil paadalai Aangilam translation udan compare padithaal evvalavu elithaga purikirathu. Azhagu .,Azhagu..

  TM 9.

  பதிலளிநீக்கு
 7. தகவல் பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

  பதிலளிநீக்கு
 8. மகிழ்ச்சி மயிலன்
  மிக்க நன்றி இரமணி ஐயா
  புரிதலுக்க நன்றி மகேந்திரன்
  வேர்களைத்தேடி வந்தமைக்க நன்றிகள் சத்ரியன்
  உண்மை ஹேமா
  மகிழ்ச்சி டேனியல்
  நன்றி இராஜா

  பதிலளிநீக்கு
 9. ஆகா... என்னே அருமையான பாடல்!!

  பசுவின் பாலைத் தன் அழகுடன் ஒப்பிடுவதே அழகு தான்.

  புத்தகங்களைப் படித்து இலக்கியத்தைச் சுவைக்க இயலாத என்னைப் போன்றோருக்கு இலக்கியத்தின் சுவையை உணர்த்தும் அருமையான பணியைச் செய்கிறீர்கள் ஐயா..
  இணையத்தில் நீங்கள் பரப்பும் சங்கப்பாடல்களின் தேனிசை எங்கள் மனதை வருடுகிறது.

  ஏகலைவனுக்கு ஒரு துரோணாச்சாரியார் போல, இணையப்பதிவர்கள் பலருக்கு தாங்கள்!!
  நன்றி ஐயா!

  பி.கு: பாடலை எழுதியவர் பற்றிய சிறு குறிப்பினையும் தாங்கள் தரலாமே!!

  பதிலளிநீக்கு
 10. தங்களைப் போன்ற தமிழார்வலர்கள் இருக்கும் வரை இணைத்திலும் தமிழ் சங்கம் அமைக்கும் அன்பரே..

  நன்றிகள்.

  பதிலளிநீக்கு