செவ்வாய், 1 ஜூலை, 2014

தமிழ் இலக்கிய விளையாட்டு - 2

அன்பான தமிழ் உறவுகளே,

தமிழ் இலக்கிய விளையாட்டு -1 என்ற தொடருக்கு மறுமொழி வழியாகத் தாங்கள் தெரிவித்த பதில்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இத்தொடரில் வாரந்தோறும் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு சுவையான பகுதிகளைக் காட்சிப்படுத்தவிருக்கிறேன். இந்த வாரத்துக்கான கேள்விகளை கீழே படங்களாகத் தந்துள்ளேன்.

இதற்கான சரியான பதில்களை நாளை மாலை வெளியிடுவேன். தங்கள் தமிழறிவைப் மதிப்பீடு சொல்வதாக இத்தொடர் அமையும் என நம்புகிறேன். நண்பர்களே தங்கள் மறுமொழிகள் வழியே கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதிலளியுங்கள் பார்க்கலாம்..

07

---
08

---
 09
--- 
10

---
 11
---
 12
--- 
13

---
 14
---
 15

--- 
16


அன்பான தமிழ் உறவுகளே..
தங்கள் மதிப்புமிக்க மறுமொழிகளுக்கு முதலில் நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். பலர் சரியான பதிலளித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
கீழே படங்களுக்கான சரியான பதில்களை அளித்துள்ளேன். தங்கள் பதில்களை சரிபார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.

7. மனுநீதிச் சோழன்.

8. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
   உழந்தும் உழவே தலை – திருக்குறள் -1031

9. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
   அச்சாணி அன்னார் உடைத்து - திருக்குறள் -667

10. கான முயலெய்த அம்பினில் யானை
   பிழைத்தவேல் ஏந்தல் இனிது. - திருக்குறள் -772

11. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

12. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
    நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
(ஒரு வீட்டுக்கு இரவு நேரத்தில் திருடச் சென்ற திருடன் அங்கு இருந்த நாய் சிலையைக் கண்டு உண்மையான நாய்தான் என அஞ்சி ஓடும்போது கம்பிவேலிகளில் சிக்கிக்கொண்டான் காலையில் அவனை அதிலிருந்து மீட்ட ஊரார் அவனை அந்த வீட்டில் அந்த நாய் சிலைக்குக் கீழே கட்டிப்போட்டார்கள். அப்போதுதான் அந்தத் திருடன் அது நாய் அல்ல நாயினது சிலை என்பதை உணர்ந்தான். அவன் இரவு நாயாகப் பார்க்கும்போது அங்கு சிலை இல்லை. கல்லாகப் பார்க்கும்போது அங்கு நாய் இல்லை. இதைத்தான் இந்தப் பழமொழி கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என உணர்த்துகிறது.)

13. ஆயிரம் போய் சொல்லி கல்யாணம் செய்.
(ஆயிரம் பேருக்குப் போய் சொல்லிக் கல்யாணம் செய் என்பதில் போய் என்பதை பொய் என்று ஆக்கிவிட்டோம்)

14. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.

15. கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த சொல்லும் காலமெல்லாம் கூட வராது.

16. அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள்.

(அடி என்பது திருவடி என்றும் இரண்டடி(குறள்) நாலடி (நாலடியார்) என்றும் பொருள் கொள்வதுண்டு.)

16 கருத்துகள்:

 1. 7. மனுநீதிச் சோழன்
  8.சுழன்று மேர்ப்பின்னது உலக மதனால்
  உழந்தும் உழவே தலை
  11.காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்
  12.நாய் வால நிமிர்த்த முடியாது
  13.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தப் பண்ணு
  16.அடி உதவுறமாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 12 தவிர எல்லா படங்களுக்கும் சரியான பதிலளித்திருக்கிறீர்கள் கிரேஸ் மகிழ்ச்சி.
   முயற்சிக்குப் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

   நீக்கு
 2. அருமையான முயற்சி
  அனைத்தும் மிக எளிமையாகவும்
  சுவாரஸ்யமாகவும்....
  இதில்தான் அனைத்திற்கும் பதில் தெரிந்தது
  பகிர்வுக்கும் தொடராவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மகிழ்ச்சி நண்பரே.தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றிகள்.

   நீக்கு
 3. சிறந்த பகிர்வு
  சிந்திக்க வைக்கிறது

  பதிலளிநீக்கு
 4. இலக்கியத்தில் ஆர்வமுண்டாக்கும் அற்புதமான முயற்சிக்குப் பாராட்டுகள்.

  ஓரளவு முயன்றிருக்கிறேன். விடைகளை அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  7. மனுநீதிச் சோழன்
  8. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை.
  9. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
  அச்சாணி அன்னார் உடைத்து.
  10. கான முயலெய்த அம்பினில் யானை
  பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
  11. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
  12. நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
  13. ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்து.
  14. விருந்தும் மருந்தும் மூன்றே நாள்.
  15. கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த பாடமும் எத்தனை நாளைக்கு வரும்?
  16. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 12 வது படம் தவிர தாங்கள் அளித்த பதில்கள் யாவும் மிகவும் சரியானவை. மிக்க மகிழச்சி. தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

   நன்றி.

   நீக்கு
 5. 07 - மனுநீதிச்சோழர்

  08 -"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை."

  09 .உருவுகண்டு எள்ளாமை வேண்டும்- உருள்பெருந்தேர்க்கு
  அச்சாணி அன்னார் உடைத்து

  10 குறள் 772:
  கான முயலெய்த அம்பினில் யானை
  பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

  11. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்

  12 ..குரைக்கிற நாய் கடிக்காது.
  சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல
  நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
  நடுக்கடலுக்குப் போனாலும்
  நாய் நக்கித்தான் குடிக்கும்

  நாய் பெற்ற தெங்கம் பழம்

  நாய் விற்ற காசு குரைக்குமோ

  நாயைக்குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாற் போல்..

  13 - திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்

  14 - விருந்தும் மருந்தும் மூன்றுநாள்..

  15 -கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த
  சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.!
  தொட்டில் பழ்க்கம் சுடுகாடு மட்டும்...

  16 அடிக்கிற கைதான் அணைக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் ஆர்வமான மறுமொழிகளுக்கு நன்றிகள். 12, 16 தவிர அனைத்தும் சரியான பதில்களாக அளித்திருக்கிறீர்கள்.

   பாராட்டுக்கள்.

   நன்றி.

   நீக்கு
 6. தாமதமா நான் கவனிச்சதால விடைகளையும் சேர்த்து படிக்க வேண்டியதாயிடுச்சு. படிக்கும் போதே மனசுக்குள்ள விடைகளை பட்டியலிட்டபடி வந்ததுல நான் தமிழறிவில மோசமில்லன்னு ஆறுதலும் வந்துருச்சு. நன்றிங்க முனைவரையா. அடுத்த முறை முதல் ஆளா ஓடிவந்து கலந்துக்கறதுன்னு உறுதியெடுத்துக்கிட்டேன். நீங்கள் செய்வது மூளைக்கு வேலை தந்து அறிவை மேம்படுத்தும் அற்புத விளையாட்டு. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். (h)

  பதிலளிநீக்கு