வெள்ளி, 18 ஜூலை, 2014

தமிழ் இலக்கிய விளையாட்டு -3

அன்பான தமிழ் உறவுகளே...
என்ற தொடரில் இந்த வாரம் உங்களோடு தமிழறிஞர்கள் குறித்த 

வினாக்களை முன்வைக்கிறேன்.

தாங்கள் நன்கறிந்த தமிழறிஞர்கள் இவர்கள்...

கீழ்க்காணும் பெயர்களில் தான் தமிழுலகம் அன்புடன் இவர்களை 

அழைத்துவருகிறது...

இவர்களின் இயற்பெயர் என்ன? என்பதுதான் இந்த வார இலக்கிய 

விளையாட்டுக்கான வினா..

உங்கள் தமிழறிவை தன்மதிப்பீடு செய்துகொள்ளுங்கள் நண்பர்களே..

இக்கேள்விகளுக்கான சரியான பதிலை நாளை மாலை வெளியிடுகிறேன்.

வினாக்கள் இதோ..


17. பொய்யா மொழிப் புலவர்? 
18. தமிழ் மூதாட்டி?
19 மொழி ஞாயிறு?
20. தமிழ் மாணவர்? 
21. தமிழ்த் தாத்தா? 
22. தமிழ்த் தென்றல் 
23. தமிழ் நாடகத் தந்தை? 
24. தமிழ் வால்டர் ஸ்காட் 
25. தமிழா் தந்தை? 
26. தென்னாட்டு பெர்னாட்சா? 
27. தமிழ் மாப்பசான்? 
28. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை? 
29. முத்தமிழ்க் காவலர்? 
30. தமிழறிஞர் ?
31. மகா கவி? 
32. புரட்சிக் கவிஞர்? 
33. உவமைக் கவிஞர்? 
34. மு.வ? 
35. தமிழண்ணல்? 

தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் நண்பர்களே...

இதோ சரியான பதில்கள்..
17. பொய்யா மொழிப் புலவர் – திருவள்ளுவர்
18. தமிழ் மூதாட்டி – ஔவையார்
19 மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்
20. தமிழ் மாணவர் – வீரமாமுனிவர்
21. தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாதய்யர்
22. தமிழ்த் தென்றல் – திரு.வி.க
23. தமிழ் நாடகத் தந்தை – பம்மல் சம்பந்த முதலியார்.
24. தமிழ் வால்டர் ஸ்காட் – கல்கி
25. தமிழா் தந்தை – சி.பா.ஆதித்தனார்
26. தென்னாட்டு பெர்னாட்சா – அறிஞர் அண்ணா
27. தமிழ் மாப்பசான் – ஜெயகாந்தன்
28. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை – மறைமலையடிகள்
29. முத்தமிழ்க் காவலர் – கி.ஆ.பெ.விசுவநாதம்
30. தமிழறிஞர் – கி.வ. ஜகநாதன்
31. மகா கவி - பாரதியார்
32. புரட்சிக் கவிஞர் – பாரதிதாசன்
33. உவமைக் கவிஞர் - சுரதா
34. மு.வ – மு.வரதராசன்
35. தமிழண்ணல் – இராம பெரியகருப்பன்


13 கருத்துகள்:

 1. தங்களின் விளையாட்டில் தமிழ் மகிழ்கிறது நண்பரே

  பதிலளிநீக்கு

 2. தங்களது தமிழ்பற்றினை வெளிப்படுத்திய சிறந்த பதிவு. பெரும்பாலான பதில்களை கூகிளாண்டவர் உதவியுடன் மட்டுமே எடுக்க முடிந்தது. இருந்தாலும் அனைத்தும் சரியா என்று தெரியவில்லை. நன்றி

  17. திருவள்ளுவர்
  18. ஔவையார்.
  19. ஞா. தேவநேயப் பாவாணர்
  20. ஜி.யூ.போப்
  21. உ.வே. சாமிநாதையர்
  22. திரு. வி. கலியாணசுந்தரனார் (திரு. வி. க)
  23. பம்மல் சம்பந்த முதலியார்
  24. கல்கி
  25. சி. பா. ஆதித்தனார்
  26. சி.என்.அண்ணாதுரை
  27. புதுமைப்பித்தன்
  28. மறைமலைஅடிகள்
  29. கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை
  30. ராபர்ட் கால்டுவெல்
  31. சுப்ரமணிய பாரதி
  32. சுப்புரத்தினம் / பாரதிதாசன்
  33. இராசகோபாலன் / சுரதா (சுப்பு ரத்தின தாசன்)
  34. மு.வரதராசனார்
  35. இராம.பெரியகருப்பன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் மேலான முயற்சிக்குப் பாராட்டுக்கள் நண்பரே.
   27,30 தவிர யாவும் மிகச்சரியான பதில்கள் நன்றி நண்பரே.

   நீக்கு
 3. 17.திருவள்ளுவர்,18.ஔவையார்,21.உ.வே. சாமிநாதஐயர்,22.திருவிக,23.பம்மல் சம்பந்தம், 26.அறிஞர் அண்ணா,29.கி.ஆ.பெ.விசுவநாதம் ஐயா,31.பாரதியார்,32.பாரதி தாசன்,33.சுரதா.34.மு.வரதராசனார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் மேலான முயற்சிக்குப் பாராட்டுக்கள் நண்பரே. சரியான பதில்களை மேலே இட்டுள்ளேன். நன்றி.

   நீக்கு
 4. 17.திரு வள்ளுவர் 18 அவ்வையார். 19 தேவ நேயப்பாவானர் 20 .- 21 உ.வே.சாமிநாதையர் 22. திரு.வி.க 23 அவ்வை சண்முகம் 24.- 25.- 26. அறிஞர் அண்ணா 27.- 28 மறைமலை அடிகள் 29. கி.ஆ.பெ. விசுவநாதம் 30- 31 பாரதியார் 32 பாரதி தாசன் 33 சுரதா 34. மு.வரதராசனார் 35 . -

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் மேலான முயற்சிக்குப் பாராட்டுக்கள் நண்பரே. சரியான பதில்களை மேலே இட்டுள்ளேன். நன்றி.

   நீக்கு
 5. 17 - பொய்யா மொழிப் புலவர்? - திருவள்ளுவர்
  -
  18. தமிழ் மூதாட்டி? -- ஔவையார்

  19 மொழி ஞாயிறு? -தேவநேயப் பாவாணர் ..

  20. தமிழ் மாணவர்? ஜி.யூ.போப்

  21. தமிழ்த் தாத்தா? - உ.வே.சாமிநாதய்யர்

  22. தமிழ்த் தென்றல் திரு வி. கல்யாணசுந்தர முதலியார்

  23. தமிழ் நாடகத் தந்தை? பம்மல் சம்பந்த முதலியார்

  24. தமிழ் வால்டர் ஸ்காட் - கல்கி

  25. தமிழா் தந்தை? வீரமாமுனிவர்

  26. தென்னாட்டு பெர்னாட்சா? அண்ணாதுரை

  27. தமிழ் மாப்பசான்? ஜெயகாந்தன்

  28. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை? மறைமலைஅடிகள்

  29. முத்தமிழ்க் காவலர்?கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை

  30. தமிழறிஞர் ? பேராயர் ராபர்ட் கால்டுவெல்  31. மகா கவி? சுப்பிரமணிய பாரதியார்
  32. புரட்சிக் கவிஞர்? பாரதிதாசன்

  33. உவமைக் கவிஞர்? சுரதா
  34. மு.வ? மு.வரதராசனார்
  35. தமிழண்ணல்? இராம.பெரியகருப்பன் அவர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 30 தவிர யாவும் மிகச் சரியான பதில்கள் பாராட்டுக்கள் நண்பரே. தங்கள் ஆர்வத்துக்கு நன்றிகளையும் உரித்தாக்கிக்கொள்கிறேன்.

   நன்றி.

   நீக்கு
 6. ஐயா இரண்டு நாட்களாக சில கேள்விகளுக்கு விடைகளுடன் பின்னூட்டம் இட முயன்று முயன்று அந்தப் பின்னூட்டம் செல்லாமல், தளமும் கணினியில் உள்ள பல பிரச்சினைகளால், வராமல்.....கஷ்டப்பட்டு இன்று காலையில் விடைகளைத் தெரிவிக்கலாம் என்று வந்த போது, தாங்கள் விடைகள் தந்து இருக்கின்றீர்கள்....தெரியாத கேள்விகளுக்கான விடைகளும் தெரிந்து கொண்டோம்! விடை சொல்ல முடியாமல் போனோமே என்ற சிறு வருத்தம்.

  நல்ல பதிவு ஐயா தொடரவும். நாங்களும் தொடருகின்றோம்.....

  பதிலளிநீக்கு
 7. அருமையான பயனுள்ள விளையாட்டு ஐயா. விளையாட்டு வினையாகும் என்பார்கள். தங்கள் விளையாட்டு பல்வேறு மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்களைத் தரும் விளையாட்டாகவும், சிந்திக்க வைப்பதுடன் அப்படிப்பட்ட அறிஞர்களின் புகைப்படங்களையும் அறிமுகப்படுத்தும் இப்பதிவை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தொடர்க நும் தமிழ்த்தொண்டு. மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும்.

  பதிலளிநீக்கு