வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 5 டிசம்பர், 2011

அட! என்னடா இது! (500வது இடுகை)



அட!
என்னடா இது!
கருவில் உள்ள குழந்தை
என்ன நிறத்தில் வேண்டும்
என்ன உயரத்தில் வேண்டும்
பல்வரிசை எப்படியிருக்கவேண்டும்

என்றெல்லாம் பெற்றோரின் ஆசைகளைக் கேட்டு
இந்த மருத்துவர் கணினியில்
கட்டளை நிரல் எழுதிக்கொண்டிருக்கிறார்??

அட!
என்னடா இது!
எந்த வயலிலும் மனிதக்காலடிகளே பதிவது இல்லையா!

நிலத்தை உழவுசெய்ய
விதை விதைக்க
நாற்று நட
களை பறிக்க
உரமிட
அறுவடை செய்ய
என எல்லாமே ஒரே இயந்திரம் செய்துவிடுகிறது??

அட!
என்னடா இது!

இவ்வளவு பெரிய துணிக்கடையில்
கடைக்காரர் ஒருவர் தானா?
அதுவும் கடை வாசலுக்கு வெளியே நிற்கிறார்.
சரி அவரிடமே கேட்போம்..

ஐயா!
ஏன் வெளியில் நிற்கிறீர்கள்?
உங்களுக்கு என்ன வேலை?
கடையில் வேறு யாரும் உரிமையாளரையே காணோம்?

காவலாளி ஐயா இங்கு எல்லாமே கணினிதான். இங்கு நடக்கும் ஒவ்வொரு அசைவுகளும் காணொளிகளாக உரிமையாளர்களால் கண்காணிக்கப்படுகிறது..

நீங்க உள்ளே போங்க..

உள்ளே சென்றதும்
கணினியின் குரல் வரவேற்கிறது!
உங்களுக்கு எந்தவித ஆடை வேண்டும் எனக் கேட்கிறது!
என் உருவம் அந்த பெரிய திரையில் தெரிகிறது!
எந்த ஆடை அணிந்தால் எப்படியிருக்கும்
என்று காட்சி தெரிகிறது!


அட!
என்னடா இது!
சாலையில் செல்லும்
வாகனங்கள் கூட தானியங்கியாக செயல்படுகின்றன!
 எங்கு செல்லவேண்டுமென்று சொன்னால் போதுமா?

இதெல்லாம்...
உண்மைதானா???

அதே மேடு பள்ளமான சாலைகள்!
அதே அதே சாலை விதிமுறை மீறல்!
அதே கைநீட்டும் காவலர்
அதே அரசியல்வாதிகளின் குடும்ப வாரிசுகள்!

எல்லாம் உண்மைதான்..!!

அறிவியல் வளர்ந்திருக்கிறது!
தனிமனித வருமானம் வளர்ந்திருக்கிறது!
ஆனால் 
அரசியல் மட்டும்
இன்னும் அப்படியேதான் இருக்கிறது!


இதற்குப் பெயரா வளர்ச்சி??


தொப்பை வேறு!
கர்ப்பம் வேறு!
என்பது மக்களுக்கு எப்போது புரியப்போகிறது??


தொடர்புடைய இடுகை

(500வது இடுகையை வெளியிடும் இந்த பெருமிதமிக்க நாளில்..
வலைப்பதிவுத் திரட்டிகளை நன்றியுடன் எண்ணிக்கொள்கிறேன்.
வலைநுட்பங்களைக் கற்றுத்தந்த இணையதளங்களையும், தொழில்நுட்ப வலைப்பதிவர்களையும் பெருமையோடு நினைத்துப்பார்க்கிறேன்..

நான் இந்த அளவுக்கு உயர..
பாராட்டி, சுட்டிக்காட்டி, அறிவுறுத்தி, தட்டிக்கொடுத்து வளரச்செய்த..
வலையுலக உறவுகளே..
உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..)

நன்றி! நன்றி! நன்றி!

80 கருத்துகள்:

  1. ஐநூறு கோடி வாழ்த்துக்கள் உங்க ஐநூறாவது பதிவுக்கு......

    பதிலளிநீக்கு
  2. எதிர்கால தொழில்நுட்பம் அருமை....

    பதிலளிநீக்கு
  3. 500 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் நண்பரே....

    பதிலளிநீக்கு
  4. அரசியலை நல்லாவே வாரிவிட்டீர்கள்!
    1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வாழ்த்துக்கள்
    -உங்கள் 500ஆவது பதிவிற்கு.

    பதிலளிநீக்கு
  5. //தொப்பை வேறு!
    கர்ப்பம் வேறு!
    என்பது மக்களுக்கு எப்போது புரியப்போகிறது??//


    :) நெத்தியடி..

    பதிலளிநீக்கு
  6. //
    தொப்பை வேறு!
    கர்ப்பம் வேறு!
    என்பது மக்களுக்கு எப்போது புரியப்போகிறது??


    //

    அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  7. முனைவரையா... ஐநூறு பல ஆயிரங்களாக பல்கிப் பெருக வாழ்த்துக்கள்... பிற்காலத்தின் நிலையை அழகாகச் சிந்தித்த நீங்கள், அப்போது நம் அமுதத் தமிழ் மொழி என்ன நிலையில் இருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கலாமே...

    பதிலளிநீக்கு
  8. தொப்பை வேறு!
    கர்ப்பம் வேறு!
    என்பது மக்களுக்கு எப்போது புரியப்போகிறது??

    பதிலளிநீக்கு
  9. 500 வாழ்த்துக்கள்.கற்பனை செய்து இருப்பது அபாரம்.இன்னும் பல வருடங்கள் கழித்து இதுவும் உண்மையாகலாம்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல குத்தல்... அது எப்படி உங்களால மட்டும் யோசிக்க முடிகிறது? தொப்பை வேறு, கர்ப்பம் வேறு!

    பதிலளிநீக்கு
  11. குணா,

    வாழ்த்துக்கள்.

    சரியான கேள்வி தான். ஒருத்தருக்கும் ஒறைக்கிறதில்ல. அதான் பிரச்சினையே!

    பதிலளிநீக்கு
  12. //தொப்பை வேறு!
    கர்ப்பம் வேறு!
    என்பது மக்களுக்கு எப்போது புரியப்போகிறது??//

    முதற்கண் தங்கள் 500வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!

    கவிதை வடிவில் நல்ல கருத்துக்கள்!
    அதிலும்(மேலே உள்ள வரிகள்) இவை மிகவும் சிறப்பானவை!


    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கள் முனைவரே
    “””தொப்பை வேறு!
    கர்ப்பம் வேறு!
    என்பது மக்களுக்கு எப்போது புரியப்போகிறது??”””

    அமர்க்களமான செய்தி இது
    நெத்தியடி.

    பதிலளிநீக்கு
  14. மனம் நிறைந்த வாழ்த்துகள் குணா.வண்ணத்தமிழில் உங்கள் ஆக்கங்கள் இன்னும் தொடரட்டும்.உங்கள் ஆதங்கம் அநேகமாக எல்லோருக்குமே !

    பதிலளிநீக்கு
  15. என்னடா இது அருமை..

    தொப்பை வேறு!
    கர்ப்பம் வேறு!
    என்பது மக்களுக்கு எப்போது புரியப்போகிறது?

    சரியாய் சொன்னீர்கள்..

    பதிலளிநீக்கு
  16. 1000 வது இடுகையை விரைவில் இட வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  17. 500 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா


    தொப்பை வேறு!
    கர்ப்பம் வேறு!
    என்பது மக்களுக்கு எப்போது புரியப்போகிறது??


    புரிந்து கொள்ள முயற்சி செய்தால் தானே

    பதிவிற்கு நன்றி நண்பா

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துகள் .உங்கள் சீரிய பணி தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  19. 500-வது பதிவிற்கு வாழ்த்துகள் நண்பரே... மேலும் மேலும் பல சிறப்பான பதிவுகள் எழுதி எங்களை மகிழ்வுறச் செய்ய வாழ்த்துகள் பல.....

    பதிலளிநீக்கு
  20. வாவ் வாழ்த்துக்கள்..


    //அறிவியல் வளர்ந்திருக்கிறது!
    தனிமனித வருமானம் வளர்ந்திருக்கிறது!
    ஆனால்
    அரசியல் மட்டும்
    இன்னும் அப்படியேதான் இருக்கிறது!//

    அதுதான் அரசியல்

    பதிலளிநீக்கு
  21. 500ஆம் இடுகைக்கு என் அன்பான வாழ்த்துக்கள் திரு குணா...

    பதிலளிநீக்கு
  22. 500வது பதிவிற்கு வாழ்த்துகள் நண்பரே...உங்கள் சீரிய பணி தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  23. 500வது இடுக்கை விரைவில் 5000 தாண்ட வாழ்த்துக்கள்.

    அட என்னடா இது!! அறிவியல் வளர்ச்சியில் நீங்கள் சொன்ன மாதிரியெல்லாம் நடந்திடுமோன்னு கொஞ்சம் பயமாய்த்தான் இருக்கு. மானுடம் மரித்திடும் நாள் வெகு தொலைவில் இல்லைதான்..

    பதிலளிநீக்கு
  24. வாழ்த்துக்கள் குணா! அடடா 500 பதிவுகளையும் அழகாய் பதிவு செய்துவிட்டு என்ன அடக்க ஒடுக்கமா நிற்கிறீர்கள் மர நிழலில்!
    தமிழ் பணி 5000 பதிவுகளை தொடட்டும் இதே அழகோடு...வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  25. 500-வது பதிவுக்கு வாழ்த்துக்கள். நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  26. வாழ்த்துகள்... நண்பரே...

    அருமை...

    பதிலளிநீக்கு
  27. அன்புநிறை முனைவரே,
    இலக்கியங்களை இன்னும் தேனுற
    இனிமையாக அள்ளியள்ளி தாருங்கள்...
    பல்லாயிரம் படைப்புகள் கொடுக்க இறைவன்
    அருள்புரியட்டும்...
    ஐநூறாவது பதிவுக்கு
    என் மனம்கனிந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  28. 500 vathu பதிவுக்கு vaalththukkal சகோ. நேற்று ungal தளத்தை அணுக முடியவில்லை. தாமதத்திற்கு mannikkavum. en converter velai seyyavillai. Athanalthan ippadi oru kolai Tamil. Sorry.
    Tamilmanam vote 15.

    பதிலளிநீக்கு
  29. மேன்மேலும் உங்கள் தமிழ் தொண்டு சிறப்படைய வாழ்த்துகள் முனைவர் அவர்களே...நன்றி

    பதிலளிநீக்கு
  30. அருமையான பதிவு.அரசியல் எப்போது மாறுமோ தெரியவில்லை.

    500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள், முனைவர் ஐயா.

    பதிலளிநீக்கு
  31. 500 வது இடுகைவரை தாங்கள் மேற்கொண்ட உழைப்பை பார்க்கும்போது, எங்களைப்போன்ற புதியவர்களுக்கு அது முன்னுதாரணமாக இருக்கிறது. 5000மாவது இடுகை மிகப்பெரிய அளவில் சாதனை படைக்க வாழ்த்துக்கள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  32. ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே! படத்தில் உள்ள கவிதை சொல்லும் செய்தி நச்சென்று உள்ளது. மேலும் பல பதிவுகளை எழுத வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  33. @"என் ராஜபாட்டை"- ராஜாதங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  34. @கணேஷ்அடுத்த இடுகையில் எழுதுகிறேன் அன்பரே..

    அறிவுறுத்தலுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  35. @M.Rவருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  36. @வெங்கட் நாகராஜ்தங்களைப் போன்ற ஆர்வலர்கள் இருக்கும் வரை தமிழ் இலக்கியங்கள் அழியாது அன்பரே..

    பதிலளிநீக்கு
  37. @கடம்பவன குயில்அறிவியல் விண்ணுக்குச் செல்ல செல்ல

    மனிதம் மண்ணுக்குள் செல்கிறது..

    மறுமொழிக்கு நன்றிகள் அன்பரே

    பதிலளிநீக்கு
  38. @மகேந்திரன்தங்களைப் போன்று ஆழ்ந்து வாசித்து மறுமொழியிடுவோரால் என் ஆர்வம் இன்னும் அதிகமாகிறது அன்பரே..

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  39. @RAMVIதங்கள் வருகைக்கும் சிந்தனைக்கும் நன்றிகள் இராம்வி.

    பதிலளிநீக்கு
  40. 500 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  41. முதலில் 500 பதிவுகளை எட்டியமைக்கு என் வாழ்த்துகள்!!!

    அறிவியல் வளர்ச்சியையும், அரசியல் வளர்ச்சியையும் அருமையாக ஒப்பிட்டு இருக்கிறீர்கள்!!
    ஆனால், அரசியலும் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்!!

    பின்னே, சிறிது காலத்திற்கு முன் 10% தான் கொள்ளை அடித்தார்கள்.. இன்று பலர் 90% அல்லவா கொள்ளை அடிக்கிறார்கள்!!

    பதிலளிநீக்கு