திங்கள், 21 ஜனவரி, 2013

எதிர்காலத்தில் கையெழுத்தும் – தலையெழுத்தும்!“கையெழுத்து நல்லாயிருந்தா தலையெழுத்து நல்லாயிருக்காது“ என்று காலகாலமாகவே சொல்லிவருகின்றனர்.
அதிவேகத்தில் செல்லும் பேருந்தில் நின்றுகொண்டே தன் விவரக்குறிப்புகளை அழகான கையெழுத்தில் எழுதும் நடத்துனரையும்..
குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு கோழி கிண்டியதுபோல கையெழுத்தில் எழுதும் மருத்துவரையும் பார்க்கும்போது இவர்கள் சொன்னது உண்மைதான் என்று தோன்கிறது.
ஓலைச் சுவடி, மெய்கீர்த்தி, கல்வெட்டு, செப்புப்பட்டையம் என்று கைவிரல்களால் எழுதிவந்த நாம் கணினி வந்தபிறகு நிறையவே மாறிப்போனோம். கையால் எழுதுவது நிறையவே குறைந்துவிட்டது. தட்டச்சுசெய்ததும் போதும் என்று, குரல் ஒலியை எழுத்தாக்கும் தொழில்நுட்பம் வரை வந்துவிட்டோம்.

இந்தக் காலத்திலும் தான் சொல்கிறார்கள் கையெழுத்து நல்லாயிருந்தா தலையெழுத்து நல்லாயிருக்காது“ என்று..
எதிர்காலத்தில் இப்படியொரு பழமொழிக்குப் பொருள்கூடத் தெரியாது.
கையில் எழுதும் வழக்கம்கூட ஒழிந்துபோகலாம், மறைந்துபோகலாம்...
எங்கும் கணினி! எதிலும் கணினி! என்ற காலமாற்றத்தில் இதுகூட நடக்கலாம்.
·         அன்று படிக்காதவர்கள் மட்டும்தான் கைநாட்டு வைத்தார்கள். இன்று படித்தவர்களும் கூட, பல நிறுவனங்களில் கையெழுத்துப்போடுவதற்குப் பதிலாகத் தன் கைரேகையை வருகைப்பதிவுக் கருவியில் வைத்துச்செல்வதைப் பார்க்கமுடிகிறது..

·         அன்று உணவகங்களுக்குச் சென்றால் பணியாளர் வந்து ஐயா என்ன வேண்டும் என்றுகேட்பார். நாமும் என்ன இருக்கிறது என்று கேட்போம். அவர் உணவுப்பட்டியலை மூச்சிறைக்கச் சொல்வார். பிறகு நாம் சொல்வதைக் குறித்துக்கொள்வார். இன்று மதிப்புமிக்க உணவகங்களில் ஒவ்வொரு மேசையிலும் டேப்ளட் பிசி இருக்கிறதாம் அதில் படங்களுடன் தங்கள் உணவுகளையும் விலைப்படியலையும் பார்த்து அதிலேயே நாம் நம் தேவைகளை பதிவுசெய்யலாமாம். பணியாளர் உணவுகளைக் கொண்டுவருகிறாராம்.

·         தமிழக அரசும் மாணவர்களுக்கு மடிகணினி கொடுத்த கையோடு.மின்னூல் (இபுக்) தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறது. எதிர்கால மாணவர்கள் தாளில்லாக் கல்வி பெறவும் வாய்ப்பிருக்கிது.
இப்படி எதிர்காலத்தில் கையெழுத்து என்றால் என்ன? என்றுகேட்கும் நிலைகூட வரலாம்.
கையெழுத்து எல்லோருக்கும் தெரியும் தலையெழுத்து யாருக்குத் தெரியும். சோதிடரா? அவருக்கு அவர் தலையெழுத்தே தெரியாமல் தான் உங்களிடம் கையேந்தி நிற்கிறார்.
இதுவரை சொல்லப்பட்ட தலையெழுத்து என்பது ஏதோ விதி என்று புரிந்துகொண்டோம்.
எதிர்காலத்தில் தலையெழுத்து என்பது, பெற்றோம் தம் குழந்தை எப்படியிருக்கவேண்டும் என்ன திறமைகள் இருக்கவேண்டும் என்பது குறித்து நம் மூளையில் கணினியின் உதவியோடு எழுதிய நிரல் குறியீடுகளாக இருக்கலாம்.

தொடர்புடைய இடுகைகள்

எதிர்காலத் தொழில்நுட்பம்
இப்படியொரு இணையம் இருந்தால்..

12 கருத்துகள்:

 1. நல்ல பகிர்வு.

  பெரும்பாலும் கையால் எழுதுவது மறைந்துதான் போய்விட்டது.

  படமும் சிரிக்க வைக்கின்றது.

  பதிலளிநீக்கு
 2. எழுதும் பழக்கமே இல்லாது போய்விடுமோ என்ற பயம்.... எனக்கும் இருக்கிறது முனைவரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

   நீக்கு
 3. புத்தம் புது குறிப்பேட்டில் பிடித்தமான எழுதுகோலால் எழுத ஆரம்பித்தால் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும். இதையெல்லாம் இப்பொழுது இழந்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் உமா.. அதன் அருமை இன்றைய தலைமுறையினருக்குச் சொன்னாலும் புரியாது..

   நீக்கு