வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 7 செப்டம்பர், 2013

தமிழை மறந்ததால் இறந்த அம்மா,அப்பா!

இன்றைய சூழலில் அம்மாவும், அப்பாவும் வேலைக்குப் போகிறார்கள், தம் குழந்தைகளை மதிப்புமிக்க கல்விச்சாலையில் சேர்க்கவேண்டும் என்று...
அதனால் வளர்ந்தபிறகு குழந்தைகளும் வேலைக்குப் போகிறார்கள்,தம் பெற்றோரை மதிப்புமிக்க முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டும் என்று...
இந்தக் காலத்தில்,
நம்மைப் பெற்ற தாய்க்குக் கொடுக்கவேண்டிய மதிப்பை
நாம் பெற்ற நம் தாய்மொழிக்கும் கொடுக்கவேண்டும் என்று சொன்னால் உங்களில் பலருக்கும் சிரிப்பு வரலாம்..

ஆனால் கீழ்க்காணும் இரண்டு சிந்தனைகளைப் பார்த்து யாரும் சிரிக்கமாட்டீர்கள்! சிந்திப்பீர்கள் என நம்புகிறேன்.

  1. பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி அன்று வீட்டு பாடங்களை செய்யவில்லை. ஆசிரியை அந்த சிறுமியிடம் ஏன் வீட்டு பாடங்களை செய்யவில்லை என்று கேட்டார் அதற்கு சிறுமி, வீட்டில் யாரும் இல்லை என்று சொன்னாள். 
  • அதற்கு ஆசிரியை உன் அப்பா என்ன செய்கிறார்?என்று கேட்டார்
  • சிறுமி எனக்கு அப்பா இல்லை என்று கூறினாள். 
  • பிறகு அம்மா என்ன செய்கிறார் என்று கேட்டார். 
  • அதற்கும் சிறுமி, எனக்கு அம்மா இல்லை என்று கூறினாள். ஆசிரியை, உன்னை தினமும் பள்ளிக்கு யார் தயார் செய்து அனுப்புவது என்று கேட்டார் அதற்கு சிறுமி கூறிய பதில்  My Daddy and Mummy என்று கூறினாள்.........
இந்தக் சிறுமிக்கு அம்மா, அப்பா இருந்தும் இவள், யாரும் இல்லாதவளாகவே இருக்கிறாள். இந்தப் பெற்றோர் உயிரோடு இருந்தும் இல்லாதவர்களாகவே மதிக்கப்படுகின்றனர். 
இதே கருத்தை கொஞ்சம் கடுமையாகவும் அதேநேரம் நகைச்சுவையாகவும் முகநூல் ஒருவர் இப்படிப் பதிவிட்டிருக்கிறார்.
மொழிகளில் உயர்வு தாழ்வு இல்லை!
ஆனால் ஒவ்வொரு மொழிகளும் உயர்வானவையே!

அந்த மொழிகளின் உயர்வை முழுவதும் உணர்ந்துகொள்வதற்கு நமக்கு தாய்மொழி என்னும் அடித்தளம் முழுமையாக இருக்கவேண்டும். தாய்மொழி என்னும் அடித்தளத்தில் எத்தனை மொழிகளைவேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்பதை நாம் உணர்ந்து நம் குழந்தைகளுக்கு தாய்மொழி அறிவை கல்விச்சாலைகளில் கொடுக்காவிட்டாலும் வீட்டிலாவது சொல்லித்தரலாமே என்பதே இவ்விடுகை வழி நான் சொல்லவிரும்பும் கருத்து..

11 கருத்துகள்:

  1. வணக்கம்

    அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் படங்களும் நன்று.விளக்கிய விதமும் நன்று

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அருமையான பகிர்வு
    இந்த அவலத்தை இதைவிட சுருக்கமாய் அழுத்தமாய்
    சொல்வது சொல்வது கடினமே
    பகிர்வுக்கும்தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. கடுகளவு பதிவில்
    காரமாகச் சொன்னீர்
    தமிழ்மொழியின் நிலையை.....
    நம்மவர்
    எப்ப தான் உணருவாங்க?

    பதிலளிநீக்கு
  4. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  5. எந்த மொழியையும் உருப்படியாக கற்றுக் கொள்ளாத இன்றைய குழந்தைகளின் நிலை பரிதாபமானது. அதற்கு காரணம் பெற்றோரும் சமுதாயமும் தான்.....

    பதிலளிநீக்கு