Thursday, December 15, 2011

நான் ஏன் வாழக்கூடாது?

தன்னம்பிக்கையே வாழ்க்கையில் நம்மை அடுத்த உயரத்துக்கு அழைத்துச் செல்வது..


“தற்கொலை செய்துகொள்வதற்கு
வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்? 
வாழ்ந்துதான் பாரேன்..”

என்ற தன்னம்பிக்கை வரிகள் சிந்திக்கத்தக்கன.

ஒரு பையனை ரொம்ப நாளாக் காணோம்..
ஏம்பா என்ன ஆச்சு இவ்வளவு நாளா எங்கே போனாய் என்று கேட்டேன்.

அதை ஏங்கய்யா கேட்கறீங்க..
நான் செய்யாத தப்புக்கு எல்லோரும் என்னைப் பலிசுமத்துனாங்க..

என்னை யாருமே நம்பல..
நான் தற்கொலைக்கு முயற்சித்து. பூச்சி மருந்த குடிச்சிட்டேன்.
மருத்துவமனையில் வைத்துக் காப்பாற்றிவிட்டார்கள்..
அதனாங்கய்யா மருத்துவமையிலேயே ஒருவாரம் இருந்தேன்..

என்றான்

அடப்பாவி..!!
சாகிற வயசாடா இது என்று சில அறிவுரைகள் சொல்லி அனுப்பினேன்.

ஒரு நொடிப்பொழுது எடுக்கக்கூடிய முட்டாள்தனமான முடிவுதான் இது. 
அந்த தற்கொலை என்னும் எல்லை வரை சென்று திரும்பியவனால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கமுடியும் என்று நம்புபவன் நான். 
அவர்களை சரியான வழியில் திசை திருப்பிவிடவேண்டும் அவ்வளவுதான். அது பெற்றவர்களைவிட, உடன்பிறந்தவர்களைவிட நண்பர்களால்தான் முடியும்!!


சரி தற்கொலை தொடர்புடைய இரண்டு சிந்தனைகளை இன்று இடுகையாக தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

சிந்தனை ஒன்று...

ஒரு முயல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாம். ஆம் முயல் என்ன செய்யும் பாவம்!!

ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான்.
இன்னொரு பக்கம் நாய்.
மறுபக்கம் புலி..

என எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிரிகள்.

சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது. எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்த்தது. இறுதியாக..
குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று சென்றது முயல்.

அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின.

முயல் சிந்தித்தது...

அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா??

என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்ந்ததாம்.


சிந்தனை இரண்டு..

ஒருவன் வாழ்க்கை பிடிக்காமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவில் இரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்திருந்தான்.

நம்ம ஊரு தொடர்வண்டி என்று சரியான நேரத்துக்கு வந்தது.?

அப்படி படுத்திருக்கும்போது எங்கோ ஒலிபெருக்கியில் யாரோ பேசுவது இவன் காதில் கேட்டது.

தொடர்வண்டிக்காகக் காத்திருக்கும் நேரத்துக்கு அந்த சொற்பொழிவைக் கேட்டுவரலாம். அப்போது வண்டி வர நேரம் சரியாக இருக்கும் என்ற முடிவெடுத்து அந்தப் பேச்சைக் கேட்கச் சென்றான்.

சொற்பொழிவைக் கேட்டவன். தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டான்.


அவன் மனதில் நினைத்துக்கொண்டான்.


பொருளே இல்லாம இவ்வளவு நேரம் பேசும் இந்தச் சொற்பொழிவாளன் உயிரோடு இருக்கிறான்..

ஒன்றுமே புரியாவிட்டாலும் கைதட்டிப் பாராட்டும் இத்தனை மக்களும் உயிரோடு இருக்கிறார்கள்....!!!


நான் மட்டும் ஏன் வாழக்கூடாது!!

என்று தன்னம்பிக்கையோடு வீடு நோக்கி நடந்து செல்கிறான்.

33 comments:

 1. சிந்திக்க வைக்கும் பதிவு..

  ReplyDelete
 2. அன்புநிறை முனைவரே,
  வாழ்க்கையை வாழ்வதற்காக கொடுக்கப்பட்ட
  அமிர்தம் இந்தப் பதிவு.
  வலைகளை தாங்கிக்கொண்டு ஒருவன் தற்கொலை செய்ய
  தயாராக இருக்கையில் அதே வழிகளை தாங்கிக்கொண்டு அவனால்
  வாழமுடியாதா???? என்ற கேள்வியுடன்

  தன்னம்பிக்கையே வாழ்க்கை, என்னால் முடியும் நான் இதை சாதிக்க முடியும்.
  என்னால் இந்த வழிகளை தாங்க முடியும் என முடிவுக்கு வரும் வகையில்
  இரண்டு கதைகளை கூறி உரைத்து நின்றமை நன்று.

  ReplyDelete
 3. இறுதியாய் சொன்னது நகைச்சுவையாகவும் இருந்தது.. ஒவ்வொரு கதையும் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றி முனைவர் அவர்களே..!!

  ReplyDelete
 4. முயலின் தன்னம்பிக்கயும் ரயில் தண்டவாளத்தில் படுத்தவனின் தன்னபிக்கையும் நல்லா சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 5. சாகத் துணிவிருக்கும்போது ஏன் வாழத் துணிவிருக்காது? நல்ல சிந்தனை. எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் அதை துணிவுடன் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தாலே போதும், பிரச்சனைகளை எளிதில் சமாளித்துவிடலாம். கருத்தை வலியுறுத்தும் கதைகள் அருமை. பகிர்வுக்கு நன்றி முனைவரே.

  ReplyDelete
 6. சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு. நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 7. ஹா... ஹா... ரெண்டாவது கதை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது. முயலின் கதை மனதைத் தொட்டு சிந்திக்க வைத்தது. பிரமாதம் முனைவரையா...

  ReplyDelete
 8. சொல்லிச் செல்லும் இரண்டு கதைகளும் அருமை
  குறிப்பாக முயல் கதை
  மனம் கவரும் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 6

  ReplyDelete
 9. //“தற்கொலை செய்துகொள்வதற்கு
  வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்?
  வாழ்ந்துதான் பாரேன்..”//

  அருமையான பதிவு. நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள் நண்பரே.
  தமிழ்மணம் வாக்கு 8.

  ReplyDelete
 10. மனிதர்களை படித்தால் போதும் அத்தனைபேரும் அவ்வளவு வித்தியாசமானவர்கள்...
  வேடிக்கையான சம்பவங்கள்

  ReplyDelete
 11. குட்டிக் கதைகள் மூலம் அருமையாகச் சொல்லி விட்டீர்கள்!

  ReplyDelete
 12. //ஒன்றுமே புரியாவிட்டாலும் கைதட்டிப் பாராட்டும் இத்தனை மக்களும் உயிரோடு இருக்கிறார்கள்....!!!//

  இரண்டாவது கதையின் இறுதியில் ஒரு சவுக்கடி இந்த சமூகத்திற்கு...

  பெரும்பாலும் நம்பிக்கை தருவது போல் பேசுபவர்கள் அடுத்தவர்களுக்கு ஒரு தாழ்வுமனபான்மையை ஏற்படுத்தி விடுவர்...சிலரின் வீராவேச அறிவுரையே சில தற்கொலைகளுக்கு காரணமாய் போய்விடுகிறது... ஒன்றரை ஆண்டுகட்கு முன் என் உயிர் தோழனின் தற்கொலை அதற்கு ஒரு சான்று...

  இந்த கட்டுரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் அழுத்தம் தரும்.. எனக்கு சற்றே கூடுதலாய் தந்துவிட்டது..
  பகிர்விற்கு நன்றி...

  ReplyDelete
 13. ஒரு வேண்டுகோள்: கருத்து மட்டறுப்பை நீக்கிவிடுங்களேன்...

  ReplyDelete
 14. கடைசியா சொன்னீங்க பாருங்க.. நச்

  ReplyDelete
 15. அருமையான பகிர்வு .மனித மனம் ஒரு குரங்கு அதை
  இந்த நேரத்தில் சரியானமுறையில் திசை திருப்பினால்
  அதன் எண்ணம் மாறிவிடும் .இதை உறவுகள் நன்கு உணர்ந்தால்
  தற்கொலை முயற்சிகள்கூட தவிடு பொடியாகிவிடும் .அருமை!..
  மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .தாயின் பாச உணர்வு என் தளத்தில்
  இன்று காத்திருக்கு .

  ReplyDelete
 16. வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்?

  உண்மையும் கூட.

  ReplyDelete
 17. இங்கே ஒரே பிரச்சனையா இருக்குனு தற்கொலை செஞ்சிக்குறாங்க... அங்க உள்ள பிரச்சனை?????
  போனவங்களுக்கு மட்டும்தானே தெரியும்!!!!!

  பகிர்வு அருமை... நண்பரே

  ReplyDelete
 18. க‌டைசிக் க‌தை புன்ன‌கை த‌ருவித்த‌து. நோக்க‌ம் ந‌ன்று!

  ReplyDelete
 19. நன்றி மதுமதி
  புரிதலுக்கு நன்றி மகேந்திரன்
  நன்றி தங்கம் பழனி
  மகிழ்ச்சி இலட்சுமி அம்மா
  நன்றி கீதா

  ReplyDelete
 20. நன்றி முகமது
  நன்றி கருன்
  மகிழ்ச்சி இராம்வி
  நன்றி கணேஷ் ஐயா
  நன்றி இரமணி ஐயா

  ReplyDelete
 21. நன்றி டேனியல்
  நன்றி சௌந்தர்
  மகிழ்சசி சென்னைப்பித்தன் ஐயா.

  ReplyDelete
 22. நன்றி மயிலன்..

  அன்பு நண்பரே கருத்து மட்டுறுத்தல் நான் வைத்திருப்பதன் நோக்கம்..


  பழைய பதிவுகளுக்கு வரும் மறுமொழிகள் கூட எனக்குத் தெரியாது போய்விடக்கூடாது என்பதுதான்..

  வரும் பழைய கருத்துரைகளும் என் பார்வைக்கு வந்துவிடுவதால் இது எனக்கு மிகவம் வசதியாக இருக்கிறது..

  தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி மயிலன்.

  ReplyDelete
 23. நன்றி சூர்யஜீவா
  நன்றி அம்பாளடியாள்
  நன்றி இராஜா
  மகிழ்ச்சி நிலாமகள்

  ReplyDelete
 24. நம்மை விட எளியவர்கள் இருப்பதை நினைத்து ஆறுதலடைந்த முயல் நிலையைத் தான் பலரும் எடுக்க வேண்டும்!!

  //“தற்கொலை செய்துகொள்வதற்கு
  வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்?
  வாழ்ந்துதான் பாரேன்.//

  அருமையான சிந்திக்கத் தூண்டும் வரிகள்!!

  ReplyDelete
 25. When nothing makes one happy, He obviously chooses to kill himself. Is it his mistake? I would like to hear more from you on this.

  ReplyDelete
 26. \\\“தற்கொலை செய்துகொள்வதற்கு
  வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்?
  வாழ்ந்துதான் பாரேன்..”\\\ நச் வரிகள்!

  ReplyDelete
 27. குட்டிக்கதைகளுடன் கெட்டி கருத்துக்களைச் சொல்லி உணர்த்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது நண்பா. உயிரின் முக்கியத்துவம் உணராத இவர்களையெல்லாம் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

  ReplyDelete
 28. "தற்கொலை செய்துகொள்வதற்கு
  வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்?
  வாழ்ந்துதான் பாரேன்..”

  மிகச் சிறந்த வரிகள்...

  ReplyDelete
 29. நன்றி பாலா
  நன்றி சத்ரியன்
  நன்றி தண்மதி.

  ReplyDelete