வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Friday, July 20, 2012

நீச்சல் பழகலாம் வாங்க..  நீச்சல் சிறந்த தற்காப்புக்கலை ஆகும். நீச்சல் தெரிந்த ஒருவர் தம் உயிரைத் தற்காத்துக்கொள்வதோடு, தக்கநேரத்தில் நீச்சல் தெரியாதவர்களுடைய உயிரையும் காப்பாற்றமுடியும்.

  இன்றெல்லாம் நீச்சல்  என்பது கல்வியாகப் போய்விட்டது. நீச்சல் பள்ளிகளெல்லாம் பணம் பெற்றுக்கொண்டு நீச்சலடிப்பது எப்படி என்று சொல்லித்தருகின்றன.

  அன்றெல்லாம் ஆற்றிலும், குளங்களிலும் தண்ணீரைக் குடித்துக் கற்றுக்கொண்டவர்களின் பிள்ளைகள் இன்று நீச்சல்ப்பள்ளிகளில் நீச்சல் கற்றுக்கொண்டிருக்கின்றனர்.

  நீச்சல் சிறந்த உடற்பயிற்சியாகும். நீச்சலடித்தவர்கள் உடலும், உள்ளமும் சுறுசுறுப்பாக இருப்பதை உணரலாம்.

                பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
                இறைவன் அடிசேரா தவர்

  திருக்குறள் 10

  இறைவனுடைய திருவடிகளை நாடியவர்கள் மட்டுமே பிறவிப் பெருங்கடலை நீந்தமுடியும். மற்றவர்கள் கடக்கமுடியாது என்பர் வள்ளுவர்.

  நாமெல்லாம் பிறவி என்னும் பெரிய கடலில் தான் நாள்தோறும் நீந்திக்கொண்டிருக்கிறோம். ம்மில் சிலருக்கு மட்டுமே நீச்சல் தெரிகிறது. பலர் உயிருக்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.


  நீச்சல் என்ன அவ்வளவு கடினமா?


  இறந்த மீன்கள் மட்டுமே ஓடும் நீரில் அடித்துச் செல்லப்படுகின்றன என்றொரு பொன்மொழி உண்டு.

  எவ்வளவு ஆழமான வாழ்வியல்நுட்பத்தை இப்பொன்மொழி உணர்த்துகிறது..?
  உயிருள்ள எந்த மீனாக இருந்தாலும் நீரை எதிர்த்து நீந்தும். முடியாத சூழலில் தான் நீரோடு அடித்துச் செல்லப்படும்.

  காலவெள்ளத்தில் நாம் இறந்த மீன்போல அடித்துவரப்பட்டிருக்கிறோமா?
  உயிருள்ள மீன்போல எதிர்நீச்சல் போட்டிருக்கிறோமா?

  என்ற மீள்பார்வை நாம் யார்? என்பதை நமக்கு உணர்த்தும்.

  நீச்சல் கலையின் நுட்பங்கள்.


 1. கருவறையிலேயே நாமெல்லாம் தண்ணீர்க்குடத்தில் நீச்சல் கற்றவர்கள் தானே! அதைப் பலர் மறந்துவிட்டோம் என்பதுதான் நாம் மறந்துபோன உண்மை.
 2. நம் உடல் காற்றடைத்த பை என்பது நம் நினைவில் இல்லை அவ்வளவுதான்.
 3. நிலத்தில் சுவாசிப்பதுபோலவே நம்மால் நீரிலும் சுவாசிக்கமுடியும் என்பதுதான் நாம் உணரவேண்டிய நுட்பம்.
 4. கைகளையும், கால்களையும் உதைத்துத் தண்ணீரோடு சண்டையிடுவதல்ல நீச்சல். மனதோடு பேசி, சுவாசக் காற்றைக் கட்டுப்படுத்தும் கலையே நீச்சல் என்பதை நாம் உணரவேண்டும்.
 5. தண்ணீரின் ஒரு கூறுதானே நாம். தண்ணீருக்கும் நமக்கும் இடையே நடக்கும் விளையாட்டுதானே நீச்சல். தண்ணீரை நாம் வென்றாலும் மிதப்போம், தோற்றாலு்ம் மிதப்போம்.. இதிலென்ன வேறுபாடு என்றால்,

 6. தண்ணீரை நாம் வென்றால் உயிரோடு மிதப்போம்
  தண்ணீர் நம்மை வென்றால் உயிறின்றி மிதப்போம் அவ்வளவுதான்.

  நம் உடல் இப்படித் தண்ணீரில் மிதப்பதற்கு எந்தச் சூழலிலும் தயாராகவே இருந்தாலும் நம் மனம் தான் உடலோடு சிலநேரங்களில் எதிர்வாதம் செய்துகொண்டிருக்கிறது. நம் மனதிடம் நாம் பக்குவாகப் பேசி அதற்குப் புரியவைத்துவிட்டால் போதும் நீச்சல் எளிதில் வந்துவிடும்.

  நீச்சல் தெரிந்தவனுக்குக் கடலின் ஆழமும் காலளவுதான்
  நீச்சல் தெரியாதவனுக்கோ காலளவு நீர்கூடக் கடலின் ஆழம்தான்.

  கடலின் ஆழத்தைவிடவா? நமக்கு வாழ்வில் துன்பங்கள் வந்துவிடப்போகிறது..?

  நீரில் மட்டுமல்ல நிலத்தில் வரும் துன்பங்கள் கூடப் பெரிதல்ல என்னும் நுட்பத்தையும் நீச்சல் நமக்கு உணர்த்துகிறது.  முடிந்தவரை நாமும் நீச்சல் கற்றுக்கொண்டு, இளம் தலைமுறையினருக்கு நீச்சல் கற்றுக்கொடுப்போம்.

   தொடர்புடைய இடுகைகள்

37 comments:

 1. குறள், பொன்மொழிகள் என அனைத்தும் அருமையான கருத்துக்கள்... பகிர்வுக்கு நன்றி முனைவரே ! (த.ம. 3)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி அன்பரே

   Delete
 2. //அன்றெல்லாம் ஆற்றிலும், குளங்களிலும் தண்ணீரைக் குடித்துக் கற்றுக்கொண்டவர்களின் பிள்ளைகள் இன்று நீச்சல்ப்பள்ளிகளில் நீச்சல் கற்றுக்கொண்டிருக்கின்றனர்.// உண்மைதான் அண்ணா.

  நானெல்லாம் எப்படி நீச்சல் கற்றுக்கொண்டேன் என்றே நினைவில்லை. எந்த வயதில் கற்றுக்கொண்டேன் என்பதும் நினைவில்லை. (அதுகூட நினைவில்லாத, விவரம் தெரியாத பிஞ்சு வயதிலேயே கற்றுக்கொண்டிருக்ககூடும்.)

  காலத்தை நினைத்தாலே கவலைப்படும்படி ஆகிறது.
  படைப்பின் ஒவ்வொரு வரிகளும் அருமை. நிதர்சனமான உண்மையும்கூட. பகிர்வுக்கு நன்றி அண்ணா!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றி சுப்ரமணியன்.

   Delete
 3. நீச்சல் அற்புதமான உடற்பயிற்சியிம் கூட...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் நீச்சல் கலை என்னும் இடுகையைக் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே.

   Delete
 4. முனைவர் ஐயா...

  பதிவு அருமைங்க.
  எந்த வரியைக் காட்டி உங்களை பாராட்டுவது என்று எனக்குத் தெரியவில்லைங்க.
  வணங்குகிறேன் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர்வருகைக்கும் வாழ்துத்துக்களுக்கும் நன்றி அரோமா

   Delete
 5. ஒரு கல்லில் இரண்டு மாங்காயா!!!.....தலைப்பு ஒன்று இருவகையான பயிற்சி அடங்கிய இன்றைய பகிர்வு அருமை!.....இரண்டு கடலிலும் நீந்தக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை என்றுமே சிறப்பாக அமையும் என்பதில் ஐயம் இல்லையே தொடர வாழ்த்துக்கள் .மிக்க நன்றி இப் பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. ஆழமான புரிதலுக்கு நன்றி அம்பாளடியாள்.

   Delete
 6. தண்ணீரை நாம் வென்றால் உயிரோடு மிதப்போம்
  தண்ணீர் நம்மை வென்றால் உயிறின்றி மிதப்போம் அவ்வளவுதான்.
  சிறப்பான பொன்மொழி! சிறப்பான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 7. நீச்சல் போல அருமையான உடற்ப்பயிர்ச்சி உடலுக்கு வேறேதும இல்லை! வயிற்று சதைகளை காணாமல் போகச் செய்யும்! நல்ல பதிவு முனைவர் ஐயா (TM 5)

  ReplyDelete
 8. அட நீச்சலில் இவ்வளவு தத்துவமா?

  ReplyDelete
  Replies
  1. தத்துவத்தைப் புரிந்துகொண்டமைக்கு நன்றி நண்பா

   Delete
 9. அற்புதமான கருத்துக் கோவை...
  அருமையான , நிறைவான பதிவு.. வாழ்த்துகள்

  ReplyDelete
 10. azhakaa sonneenga munaivar ayya!

  ReplyDelete
 11. Replies
  1. நீரில் பனிக்கட்டியைப் போட்டால் மிதக்கும், அதைப்போல்
   ஓர் இரும்புத்துண்டைப் போட்டாலும் மிதக்கும், எங்கு தெரியுமா?
   காய்ச்சிய இரும்புக்குழம்பில், போட்டுப்பாரும்!
   குரங்குக்கும் யானைக்கும் யார் நீச்சல் கற்றுக்கொடுத்தார்?

   நீரின் ஆழத்தில் நட்டகுத்தலாய் உடம்பை வைத்துக்கொண்டால்
   நீச்சல்வீரனும் மூழ்கிச்சாவான். விலங்குகளைப்போல் குறுக்கில்
   உடம்பை வைத்துக்கொண்டால்மட்டுமே தப்பிக்கமுடியும்.

   இரண்டடிக்கு நான்கடி பலகைமேல் ஏறிநின்றால் உங்கள்
   எடையைத்தாங்காமல் நீருக்குள் அமிழ்ந்துவிடும், ஓரடிக்கு
   ஈரடிபலைகைமேல் படுத்துக்கொள்ளுங்கள், உங்களை அப்
   பலகை தாங்கும்.

   Delete
  2. தங்கள் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி முரளி,அருண்முல்லை

   Delete
 12. அருமையான பதிவு நண்பனுக்கு நன்றி

  ReplyDelete
 13. தமிழகம் முழுவதும் நேரடியாக எங்களுடன் இணைந்து பகுதி நேர பதிவர்களாக பணியாற்ற அழைக்கின்றோம்.
  சொடுக்கு

  ReplyDelete
 14. நானும் இப்பதிவில் நீந்தினேன்...நல்ல பதிவு அய்யா..

  ReplyDelete
  Replies
  1. ஆழமான வாழ்வியல்நுட்பத்தை அழகாகப் பகிர்ந்த சிறப்பான கருத்துகளுக்குப் பாராட்டுக்கள்..

   Delete
  2. மகிழ்ச்சி சேகர்
   நன்றி இராஜராஜேஸ்வரி

   Delete
 15. http://www.boddunan.com/component/community/register.html?referrer=BN-SAGAYAMARY

  join in the above site they are giving money for writing articles.

  100Rs for each post.

  ReplyDelete
 16. நீங்கள் நல்ல எழுத்தாளர்.நீங்கள் பொத்துனனில் இணைந்தால் நிறைய சம்பாதிக்கலாம். முயற்சி செய்யுங்களேன். உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சங்க கால கதைகளை விளக்கும் விதம் அருமை.

  என் கருத்துக்களை வெளியிட்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 17. நீச்சலையும் வாழ்வையும் இணைத்து அழகாக எழுதியிருக்கிறீர்கள்!

  ReplyDelete
 18. வணக்கம் ஐயா, இப்போதெல்லாம் நான் முன்பு போல இணையத்தில் உலவ முடிவதில்லை வலைப்பதிவில் தொடர்ந்து எழுதவும் முடிவதில்லை தாங்கள் பலமுறை எனக்கு அறிவுறுத்தி இருக்கிறீர்கள் இனி நான் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். தங்களின் இந்த இடுகையை பார்த்தவுடன் எனக்கு பல எண்ணங்கள் தோன்றின. " இறந்த மீன்கள் மட்டுமே நீரில் அடித்துச்செல்லப்படுகின்றன......." இந்த வரி என்னை மிகவும் பாதித்து விட்டது.
  நம்மில் பலர் இப்படி இறந்த மீன்கள் போலத்தானே இந்த உலகில் வாழ்கிறோம் என்ற பெயரில் நாட்களை கடத்திக்கோடு இருக்கிறோம் என்று எனக்கு தோன்றுகிறது. நாம் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறுவது இருக்கட்டும், நம்மில் எத்தனை பேர் நாம் உயிரோடு இருக்கிறோம் என்று நிரூபிக்கவாவது எதிர் நீச்சல் போட நினைக்கிறோம்? பிறவிப் பெருங்கடலில் நாமெல்லாம் கட்டாயமாக நீந்த விடப்பட்ட மீன்கள் போல தானே இருக்கிறோம். எப்படியாவது நீந்தி முடிந்தால் போதும் என்ற எண்ணத்தில் நீரோட்டத்தின் திசையிலேயே சென்றுவிட நினைக்கிறோம். நாம் அடைய வேண்டியது இது இல்லை என்று தெரிந்தாலும் கிடைத்ததை தக்கவைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதே அறிவுடைமை என்று ஆகிவிட்ட இன்றைய சூழலில், அலையின் திசையில் பயணம் செய்ய அனைவரும் முடிவுசெய்து விட்டு சென்று கொண்டு இருக்கையில், கொள்கையை பிடித்துக்கொண்டு எதிர் நீச்சல் போடுபவர்கள் காட்சிப்போருளாகிவிட்ட காலம் இது என்பது என் தாழ்மையான எண்ணம்.

  இங்கே பலர் இறந்த மீன்கள் அல்ல, அனாலும் எதிர் நீச்சல் போட நினைப்பது இல்லை. கூட்டத்தோடு கூட்டமாக செல்கிறவர்கள். அதனை நினைத்து பெருமை கொள்பவர்கள். இதில் "உயிருள்ள" என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை.........

  ReplyDelete
 19. இந்த பதிவை-
  வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

  வருகை தாருங்கள்!
  தலைப்பு ; படித்தவர்கள்.....

  ReplyDelete