வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 16 ஏப்ரல், 2009

சங்க இலக்கிய ஒப்பீடு



தமிழ் மொழி பழமையானது,தனித்தன்மையுடையது.ஞால முதன்மொழி என்று சொல்லிக்கொண்டிருப்போர் நடுவே தமிழின் பெருமைகளை கிரேக்கம் உள்ளிட்ட பிற மொழிகளோடு ஒப்பிட்டு நோக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது.

தமிழிலக்கிய வகைமை அடிப்படையில் ஆய்வு செய்பவர்களும், ஒப்பீட்டு முறை ஆய்வு செய்ய விரும்புபவர்களும் படிக்கவேண்டிய அரிய நூல் சங்க இலக்கியத்தில் ஒப்பீடு ஆகும்
.
சங்க இலக்கிய ஒப்பீடு
இலக்கிய வகைமைகள்
தமிழண்ணல்


நூல் கிடைக்குமிடம்
மீனாட்சி புத்தக நிலையம்
48, தானப்ப முதலி தெரு
மதுரை625001
தொலைபேசி – 045-2345971
நூலின் விலைரூபாய்-75.00

உள்ளடக்கம்


முதற்பகுதி- தமிழும் இலக்கிய வகைமைகளும்
1. இலக்கிய வகைமைக் கோட்பாடுகள்
2. இலக்கிய வகைச் சிந்தனைகள்
3. அடிப்படை இலக்கிய வகைகள்
4. தமிழில் இலக்கிய வகை வளர்ச்சி

இரண்டாம் பகுதி – இலக்கிய வகை ஒப்பீடு

5.வீரயுகப் பாடல்கள்
6.தன்னுணர்ச்சிப பாடல்கள்
7.காப்பியப் பாடல்கள்
8.நாடகப் பாடல்கள்
9.பத்திமைப் பாடல்கள்
10.தத்துவப் பாடல்கள்
11.நீதிப் பாடல்கள்
12.அங்கதப் பாடல்கள்
13.இயற்கைப் புனைவுப் பாடல்கள்
14.முல்லைப் பாடல்கள்
15.கையறுநிலைப் பாடல்கள்


சில நாடுகளில் வீரநிலைப்பாட்டுத் தோன்றி, முழு வளர்ச்சி பெறாமல்ப் போனதுண்டு. பாட்டினை உருவாக்கும் திறன்களினால் இவ்வாறு அது உருமாறும் என்பர். கிரேக்கத்தில் பாடாண்,கையறுநிலை,வீரநிலை மூன்றும் ஒருங்கிணைந்தே வளர்ந்தன. ஆனால் பாடாணும், கையறு நிலையும் குறிப்பிட்ட சமயங்களில் குறிப்பிட்டவர்களைப் பற்றி எழுந்தன.வீரநிலைப் பாட்டோ பொது அவையங்களுக்கு எனப் பாடப்பட்டது அது விழாக்காலங்களில் மக்களுக்குக் கலைநிகழ்ச்சியாகப் பாடிக் காட்டப்பட்டது.
தமிழில் சங்கப் பாடல்களைப் பொது நிகழ்ச்சிக்காகப் பாடிக்காட்டப்பட்டவை என்றோ, நடித்துக் காட்டப் பட்டவை என்றோ நாம் கூறுதல் இயலுமா? ஒருக்கால் அகப்பாடல்கள் அங்ஙனம் நடித்துக்காட்ட, மெய்ப்பாட்டோடு படித்துக் காட்டப்பட்டிருக்கலாம். புறப்பாடல்களில் தனிப்பட்ட வள்ளல்களைப் புகழக் குறிப்பிட்ட சில சமயங்களில் பாடப்பட்டவையாகும்.பக்-74.

'வீரநிலைக் காலப்பாடல்கள் எளிய நரம்புக் கருவியுடனேயே பாடப்பட்டன என்பர்.கிரேக்கர் யாழுடன் (Lyre)செர்பியர் கசிலுடனும் (gusle) ருசியர் பலாலைகாவுடனும் (Balalaika)தாதாரியர் கோபோசுடனும் (Koboz) பாடினராம்.அலபேனியர் லகுதாவுடனும் (Lahuta) பாடினராம் இவையெல்லாம் நரம்புக் கருவிகள், ஹோமர் யாழுடன் பிறந்தார் என்றே கூறுவதுண்டு.சங்கப் பாணர்கள் யாழ்ப்பாணர் என்றே அழைக்கப் பட்டனர்.சங்க காலப் பாடல்கள் யாழிசைக்கேற்பவே பாடப்பட்டன.'
பக்-76


என்பன இந்நூலின் திறனை எடுத்தியம்பத்தக்க கூறுகளாகும்.

2 கருத்துகள்:

  1. தாதாரியர் கோபோசுடனும் (Koboz) பாடினராம்.அலபேனியர் லகுதாவுடனும் (Lahuta) பாடினராம் இவையெல்லாம் நரம்புக் கருவிகள், ஹோமர் யாழுடன் பிறந்தார் என்றே கூறுவதுண்டு.///

    நல்ல நான் அறியாத தகவல்கள்!!!
    தாத்தாரியர்கள்,கஸாக்குகள் ஆகியோர் சம்பந்தமான நவீனங்கள் படித்து இருக்கிறேன்!!

    பதிலளிநீக்கு
  2. இதுபற்றி படிக்கும் நண்பரெருவரக்கு உங்கள் பதிவுபற்றியும் இந்நூல் பற்றியும் பரிந்துரை செய்திருக்கிறேன்.
    நன்றிகள்

    பதிலளிநீக்கு