வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 10 நவம்பர், 2011

மூன்று வகை மனிதர்கள்

நான் என் வாழ்வில் கண்ட மனிதர்களை மூன்று வகையாகப் பாகுபடுத்தி உணர்ந்திருக்கிறேன்..

இவ்வகைப்பாடுகளுள் நான் என்றும் மூன்றாம் வகை மனிதனாகவே இருந்திருக்கிறேன்..
இருக்க முயற்சித்து வருகிறேன்..
இதோ என் வகைப்பாடு..







சிந்திப்போர் 
செயல்படுவோர்
சிந்தித்துச் செயல்படுவோர்!

அறிவுடையோர்
ஆற்றலுடையோர்
அறிவை ஆற்றலுடன் வெளிப்படுத்துவோர்!

சிரிக்காதவர்
சிரிப்பவர்
சிரிக்கவைப்பவர்!

பேசாதவர்
பேசுபவர்
பேசவைப்பவர்!

மாறாதவர்
மாறுபவர்
மாற்றுபவர்!

கருவிகளை நம்புவோர்
கடவுளை நம்புவோர்
தன்னை நம்புவோர்!

வாழ்க்கையைத் தொலைத்தவர்
வாழ்க்கையைத் தேடுபவர்
வாழப் பிறந்தவர்!

காலத்தின் பின்னால் ஓடுபவர்
காலத்தின் முன்னல் ஓடுபவர்
காலத்துடன் செல்பவர்!

வாய்ப்பில்லை என வாடுவோர்
வாய்ப்புகளைத் தேடுவோர்
வாய்ப்புகளை உருவாக்குவோர்!


வரலாறு பேசுவோர்
வரலாறு படிப்போர்
வரலாறு படைப்போர்!

துடிப்போர்
எடுப்போர்
கொடுப்போர்!

பிறரைப் பற்றியே பேசுவோர்
தன்னைப் பற்றியே பேசுவோர்
தன்னைப் பற்றிப் பேச வைப்பவர்!

தவறு செய்வோர்
தண்டனை தருவோர்
தவறுகளையும் தவறின்றிச் செய்வோர்!

அறிவுரை கேட்போர்
அறிவுரை சொல்வோர்
அதன் படி வாழ்வோர்!

என்ன நண்பர்களே என் வகைப்பாடு பிடித்திருக்கிறதா..

இதில் நீங்க எந்த வகை மனிதராக இருக்கிறீர்கள் என்று தன்மதிப்பீடு செய்துகொள்ளுங்கள்..

தொடர்புடைய இடுகைகள்

55 கருத்துகள்:

  1. முனைவருக்கு வணக்கம் அன்பு அறம் அறிவு
    மூன்றுமே வாழ்விற்க்கு தேவைதானே உங்கள்
    வகைப்பாடு அதை தெரிவு செய்கின்றது நன்றி


    சம்மதம் தருவாயா சகியே...

    பதிலளிநீக்கு
  2. மூன்று மனநிலைகளை அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள் ,நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  3. நல்ல வகைகள்.... அழகாய்ப் பிரித்துள்ளீர்கள்.... மூன்றாவதாக இருப்பதே அழகு... :)

    பதிலளிநீக்கு
  4. Remba Manitharkalai nanku analize seithu Ezhuthi Irukirrerkal.Nice write-up.Nantraka irukirathu.Nantri.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் நண்பரே!
    தெளிவாக வகைப்படுத்திள்ளீர்கள்.
    மூன்றாவதாக இருப்பது சிறப்பு என நினைக்கிறேன்.
    நான் இருக்கிறேனா தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
  6. மனநிலைகளை நன்றாக வகைப் படுத்தி இருக்கிறீர்கள்..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  7. மிகச்சரியான வகைப்படு. நல்ல ஒரு மனிதன் பெற்றிருக்க வேண்டிய குணாதிசயங்களை அழகாக காட்டியிருக்கிறீர்கள். தற்போது சுய மதிப்பீட்டில் நான்..

    பதிலளிநீக்கு
  8. எல்லா மூன்றும் அருமையாக் பிரித்து சொல்லி இருக்கிறீர்கள். ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒவ்வொன்றும் வரும்.


    நம்ம தளத்தில்:
    வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  9. சிந்தனையைத் தூண்டும் பதிவு...

    மனிதனின் மூன்று வித வெளிப்பாட்டை தொகுத்த விதம் அருமை...

    பகிர்வுக்கும், சிந்தனை தூண்டுதலுக்கும் நன்றி... நண்பரே...

    பதிலளிநீக்கு
  10. ஆகா!
    அருமையாக வகைப்படுத்தியள்ளீர்
    நன்றி முனைவரே!

    புலவர் சாஇராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. மனிதனின் குணங்களை வைத்து
    அழகாக மூன்று வகைப்படுத்திவிட்டீர்கள்
    முனைவரே,
    என்னைப்பொருத்த வரையில் மூன்றாம் வகை
    மனிதர்கள் மிகவும் அரிதே,
    முதல் இரண்டு வகையில் நிறைய பேர் அடங்குவார்கள்.
    பின்னர் அதிலிருந்து பல விடையங்களை உணர்ந்து
    மூன்றாம் நிலைக்கு மாறிவிடுகிறார்கள்.

    அருமையான வகைப்படுத்தல் முனைவரே.

    பதிலளிநீக்கு
  12. வாழ்வின் ஒவ்வொரு நேரத்திலும்.. மூன்றில் ஏதாவது ஒன்றாக இருக்கிறோம்... மூன்றாவதாக இருக்க முயற்சி செய்து.. வாழ்வில் முதலாவதாக வருவோம்.. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  13. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  14. எமது வலைத்தளத்தில் மனிதன் எனும் தலைப்பில் இப்பதிவிற்கு லின்க் கொடுத்துள்ளேன். நன்றி! தோழமையுடன் அட்சயா!
    http://atchaya-krishnalaya.blogspot.com

    பதிலளிநீக்கு
  15. அருமையாக வகுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் மிக்க நன்றி
    பகிர்வுக்கு .மன்னிக்க வேண்டும் நீண்டநாள் இடைவெளியின்
    பின் இப்போதுதான் சற்று நேரம் கிடைத்து வந்தேன் .சிறப்பான
    உங்கள் ஆக்கங்கள் மேன்மேலும் நற்கருத்துக்களால் நிறைவது
    கண்டு பெருமைகொள்கின்றேன் தொடரட்டும் செவ்வனே தங்கள் பணி...

    பதிலளிநீக்கு
  16. சிறப்பான வகைப்பாடு.

    ”சுயம் அறிதல்” தான் நம் இனத்திற்கு பிடிக்காத ஒன்றாச்சே குணா!

    பதிலளிநீக்கு
  17. குணா....மனித மனங்களைப் நன்கு படித்துப் பிரித்து வைத்திருக்கிறீர்கள்.உங்களுக்கே தெரியும் உங்களுடன் பழகும்
    நாங்கள் எந்தவகையென்று !

    பதிலளிநீக்கு
  18. மூன்று மனநிலைகளை அழகாக பிரித்து தொகுத்து தந்துள்ளீர்கள் ...நன்றி முனைவரே...

    பதிலளிநீக்கு
  19. ஹ ஹா... தீர்ப்பை நீங்க சொல்லுங்க முனைவரே...

    பதிலளிநீக்கு
  20. மூன்றாம் வகை மனிதர்கள் இருக்கிறார்கள் . நான் அப்படி வாழவே ஆசைப்படுகிறேன் முயற்சிக்கலாம். மிக நல்ல தெரிவான பதிவு. வாழ்த்துகள் சகோதரரே.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www. kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  21. //பிறரைப் பற்றியே பேசுவோர்
    தன்னைப் பற்றியே பேசுவோர்
    தன்னைப் பற்றிப் பேச வைப்பவர்!//பிடித்தது அன்பரே இவ்வரிகள்

    பதிலளிநீக்கு
  22. @மகேந்திரன் தங்கள் மதிப்பீட்டிற்கும் பாகுபடுத்தலுக்கும்ந நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  23. @மகேந்திரன் தங்கள் மதிப்பீட்டிற்கும் பாகுபடுத்தலுக்கும்ந நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  24. @atchaya மகிழ்ச்சி அட்சயா..

    இணைப்பளித்தமைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  25. @அம்பாளடியாள் தங்களைப் போன்ற பார்வையாளர்கள் இருக்கும் வரை என்னைப் போன்ற இலக்கியப் பதிவர்கள் எழுதுவார்கள் அம்பாள்.

    பதிலளிநீக்கு
  26. @சத்ரியன் நம் எழுதுக்களால் விரும்பச் செய்வோம் நண்பா.

    பதிலளிநீக்கு
  27. @suryajeeva மூன்றாம் வகை மனிதத்தோடு வாழவேண்டும் என்பதே என் விருப்பம் நண்பா..

    பதிலளிநீக்கு
  28. மிகச்சிறந்த வகைப்பாடு. தங்களின் சிந்தனையின் வீச்சு என்னை வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  29. @எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்தங்கள் தொடர் வருகை என்னை ஊக்கமுடன் தொடர்ந்து எழுது வைக்கிறது.

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  30. இவ்வகைப்பாடுகளுள் நான் என்றும் மூன்றாம் வகை மனிதனாகவே இருந்திருக்கிறேன்..
    இருக்க முயற்சித்து வருகிறேன்..

    வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  31. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இராஜேஸ்வரி

    பதிலளிநீக்கு