வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 1 நவம்பர், 2011

சங்ககாலக் கல்வி நிலை - UPSC EXAM TAMIL - புறநானூறு -183ன்றைய சூழலில் கல்வியின் பரப்பு எந்த அளவுக்குஅதிகரித்துள்ளதோ..
அந்த அளவுக்கு அறியாமையின் பரப்பும் விரிவடைந்துள்ளது!

கடவுள் – பேய் – ஆவி – பிசாசு – மூடநம்பிக்கைகள் ஆகியன இன்னும் தானே நம்மிடம் உள்ளன..

சிந்தித்தபோது...
கல்வி மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது!
ணம் குறித்து சிந்தித்தபோது..
கல்வி மனிதனை விலங்காக்கியது!

குடும்பச் சூழல், வறுமை, அறியாமை எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும்..
கல்வி கற்போர் விழுக்காடு இன்னும் ஏற்றத்தாழ்வுடனேயே இருந்துவருகிறது.

கல்வி வணிகமாகிவிட்ட இந்தச் சூழலில் கல்வி கற்று அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் கல்விச்சாலைகளில் சேர்வதில்லை..

கல்வி பணம் ஈட்டும் ஒரு தொழில் என்ற எண்ணத்திலேயே பலரும் முதலீடு செய்கின்றனர்..

கல்வி குறித்த இதுபோன்ற பல சிந்தனைகள் நமக்கிருந்தாலும்..
சங்ககாலத்தில் கல்வி குறித்த சிந்தனை எவ்வாறு இருந்தது என்று காண்பதாக இவ்விடுகை அமைகிறது..

இச்சூழலிலும்..
“கல்விச் சிறப்புடையவனையே குடும்பம், அரசு, சமூகம் மதிக்கும்“ என்பதை வலியுறுத்தும் பாடல் ஒன்று..


ம் ஆசிரியருக்கு ஒரு துன்பம் வந்தபோது உடன் சென்று அதனைத் தீர்ப்பதற்குத் துணைநிற்க வேண்டும்.

மிகுதியான பொருளை அவருக்குக் கொடுத்தாவது கல்வி கற்றல் வேண்டும்.

வரை வழிபடுவதற்கு வெறுப்படையக் கூடாது..
இவ்வாறெல்லாம் செய்து ஒருவன் எப்படியாவது கல்வி கற்கவேண்டும்.

ல்வி கற்றல் அவ்வளவு நன்மை தரக்கூடியதாகும்.மேலும்..
ரு தாய் வயிற்றில் பிறந்த இருவருள்ளும் அந்தத் தாய்
மூத்தவனை விட கல்வி கற்றிருந்தால் இளையவன் மீது பற்றுடையவளாக இருப்பாள்.அதுமட்டுமின்றி.. 
ரு குடியில் பிறந்த பலருள்ளும் மூத்தவனை வருக என்று அழைக்காமல் அவருள்ளே அறிவுடையோனையே வருக வருக என்று அழைத்து அரசனும் அவன் காட்டும் வழியில் நடப்பான்.

வேற்றுமை தெரிந்த கீழ்க்குல மக்களுள் ஒருவன் கற்று வல்லவனாயின் மேற்குலத்துள் ஒருவனும்  இவன் கீழ்க்குலத்தான் என்று எண்ணாமல் கல்வியின் பொருட்டு அவனிடம் சென்று வழிபட்டு வேண்டி நிற்பான். அதனால் எவ்வகையில் பார்த்தாலும் கல்வி சிறப்புடையதாகும்.

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
முத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே" 
(புறநானூறு-183)

திணை – பொதுவியல்
துறை – பொருண்மொழிக்காஞ்சி
பாடியவர் – பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.
உயிருக்கு உறுதி தரும் பொருளான கல்வியால் வரும் சிறப்புக்களை உரைப்பதால் இப்பாடல் பொருண்மொழிக் காஞ்சியானது.


பாடல் வழியே..

1. போருக்கு முன்னுரிமை தந்த சங்ககாலத்திலேயே கல்விக்கும் அவர்கள் முன்னுரிமை தந்தார்கள் என்பது புலனாகிறது.

2. மன்னன் எவ்வழியோ குடிகள் அவ்வழி என்பர். அதுபோல இப்பாடல் பாடிய மன்னனின் சிந்தனை சங்ககாலக் கல்வி நிலையைப் படம்பிடித்துக்காட்டுவதாக உள்ளது.

3. குடும்பம், அரசு, சமூகம் என மூன்று நிலைகளிலும் மதிப்புப் பெற வேண்டுமானால் கல்வி கற்கவேண்டும் என்ற சங்ககால சிந்தனை இன்றைக்கும் தேவையானதாக இருக்கிறது.

4. கற்றுத் தரும் குருவுக்குத் தரவேண்டிய மதிப்பை இப்பாடல் அழகாகப் பதிவு செய்துள்ளது.

ஒப்புநோக்கத்தக்க திருக்குறள்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் 
கடையரே கல்லா தவர்

(அதிகாரம்:கல்வி குறள் எண்:395)

சொற்பொருள் 

உறுபொருள் - மிகுதியான பொருள்
முனியாது - வெறுக்காது
பிற்றை நிலை - வழிபாட்டு நிலை
ஆறு - நெறி
வேற்றுமை - வேறுபாடு
நாற்பால் - நான்கு வருணம்

தொடர்புடைய இடுகைகள்..

28 கருத்துகள்:

 1. //////
  கல்வி பணம் ஈட்டும் ஒரு தொழில் என்ற எண்ணத்திலேயே பலரும் முதலீடு செய்கின்றனர்.//////////


  இந்த எண்ணம் மாறும்போதுதான் தற்போதைய கல்வி மேண்மையடையும்...

  பகிர்வுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 2. பணம் குறித்து சிந்தித்தபோது..
  கல்வி மனிதனை விலங்காக்கியது!
  ///

  ரொம்ப சரியாக சொல்லி இருக்கின்றீர்கள்!

  பதிலளிநீக்கு
 3. கல்வியைக் குறித்த ஒரு கல்வியாக இப்பதிவு உள்ளது. வாழ்த்துகள்.
  - முனைவர் ப. சரவணன்

  பதிலளிநீக்கு
 4. குருவுக்கு மதிப்பளித்தல் என்பது சங்க காலத்தில் மிக உயர்வானதாக இருந்து வந்திருக்கிறது. இப்போது குரு வணக்கம் என்பதுகூட கடமையாகி விட்டதை நினைத்தால் பெருமூச்சு!

  பதிலளிநீக்கு
 5. அக்காலத்தில் ஒருவன் தான் கற்றக் கல்வி மூலம் தன் சமூகத்தையே உயர்த்துவான்... இன்று கல்வியின் நிலை வேறு திசையில் சென்றுவிட்டது...

  சிந்திக்கத்தூண்டும் பதிவுக்கு நன்றி... நண்பரே...

  பதிலளிநீக்கு
 6. சிந்தனை செய்வதே சிறந்த கல்வி. ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வி சிந்தனைகள் நம் அறிவை கூர் தீட்ட உதவும்... நெருப்பு என்று சாதாரணமாய் படித்து விடுகிறோம்... ஆகையால் நெருப்பு என்றால் என்ன? என்று கேள்வி அடங்கி விடுவதால் பகுத்தறிவு மழுங்கி... மூலையில் முடங்கி விடுகிறது மூளை... கற்றால் மட்டும் போதாது, தெளிவாக கற்க வேண்டும்... இந்து மனப்பாட கல்வி அதிகமாக இருக்கிறது, மாறாக புரிந்து கற்றால் உலகத்தில் விடியல் தான் அனைவர் வாழ்விலும்

  பதிலளிநீக்கு
 7. சங்ககால கல்விமுறை பாடல் வழி சொன்னவிதம் நன்றாகவுள்ளது.. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. கல்வியின் சிறப்பை அருமையாய் சொல்லியிருகீங்க முனைவரே.
  சங்ககால கல்வி வழியையும் முறையையும் அறியத் தந்தமைக்கு
  நன்றிகள் பல....

  பதிலளிநீக்கு
 9. தாயும் மனம் திரியக் காரணமானது கல்வியே என்னும்போது வியப்பாயுள்ளது. கல்வியின் பெருமையைப் பறைசாற்றிய வரிகளைப் பொருளுடன் பகிர்ந்து, கல்வியைக் கற்று அறிவுடன் வாழ்க்கையை வழிநடத்தக் கூறிய அறிவுரை மிகவும் பயனுள்ள ஒன்று. பகிர்வுக்கு நன்றி முனைவரே.

  பதிலளிநீக்கு
 10. @ராஜா MVS வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பரே..

  பதிலளிநீக்கு
 11. @suryajeeva அழகான சிந்தனையைத் தூண்டும் விளக்கம் அருமை நண்பா.

  பதிலளிநீக்கு
 12. பிச்சை புகினும் கற்கை நன்றே!

  பதிலளிநீக்கு
 13. என்னங்க...என்னமோ கிருஸ்தவன் வந்துதான் பாரதநாட்டுல உள்ள மக்களுக்கு படிக்ககத்துக் கொடுத்தான்னு சொல்லுறானுங்க...நீங்க என்னடான்னா சங்ககாலத்துலேயே எல்லாரும் படிச்சிருந்தானுங்கன்னு சொல்றீய...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் கட்டுரையின் ஆழ்ந்த உட்பொருளை மிகச்சரியாக உள்வாங்கிக் கேட்கப்பட்ட தங்கள் வினா என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது.

   நன்றி அன்பரே.

   உண்மைதான் தமிழ்மொழி இவ்வளவு தொன்மையானதுதான்..

   நீக்கு
  2. கல்வியின் இன்றைய அவல நிலையை நன்றாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.
   அறிவார்ந்த ஆக்கம். சிந்திப்போம்!

   நீக்கு
 14. அன்றைய கல்வியின் மூலம் விலங்கினங்களில் இருந்து வேறுபட்டு மனிதனாக காணப்பட்டனர். ஆனால் இன்றைய கல்வி மூலம் மீண்டும் மனிதன் விலங்குகளாக மாறிய நிலையில் காணப்படுகின்றனர்.

  அருமை ஐயா.

  பதிலளிநீக்கு
 15. குருவிற்கு நிகரில்லை குருவின்றி நிறைவில்லை..

  சூழலுக்கேற்ற பதிவு அப்பா.நன்றி..

  பதிலளிநீக்கு