வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 20 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 94. சூது

 


வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. - 931

தூண்டிலில் சிக்கிய மீன்போல சூது என்றும் துன்பமே தரும்

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்

நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.- 932

பொருள் ஒன்றினைப் பெற்று நூறினை இழப்பா் சூதாடிகள்

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்

போஒய்ப் புறமே படும். - 933

தொடர்ந்து சூதாடும் ஒருவனது பொருட்செல்வம் அவனை நீங்கும்

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

வறுமை தருவெதொன்று இல். - 934

சிறுமை பல தந்து, சீரழித்து வறுமை தருவதே சூது

கவறும் கழகமும் கையும் தருக்கி

இவறியார் இல்லாகி யார். - 935

பேராசையுடன் சூதாடி வருமையானவர் பலர்                        

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்

முகடியான் மூடப்பட் டார். - 936

சூதின் வசப்பட்டவர் வறுமையிலும், துன்பத்திலும் வருந்துவர்

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்

கழகத்துக் காலை புகின். - 937

சூதாடிகள் தம் செல்வத்தையும், பண்பையும் இழந்துவிடுவர்

பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளிஇ அருள்கெடுத்து

அல்லல் உழப்பிக்கும் சூது. - 938

பொருள்,உண்மை,அருள், இன்பம் ஆகியன கெடுப்பது சூதே

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்

அடையாவாம் ஆயங் கொளின். - 939

ஆடை, செல்வம்,உடல்,புகழ், கல்வி என ஐந்தும் அழிப்பது சூது     

இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்

உழத்தொறுஉம் காதற்று உயிர்.- 940

துன்பத்தின் பின்பும் உயிர்மேல் கொள்ளும் ஆசைபோன்றது சூது    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக