வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 7 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 83. கூடா நட்பு

 


சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு. - 821

போலி நண்பர்களை நேரம் பார்த்துக் கைவிடுக

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்

மனம்போல வேறு படும். - 822

வஞ்சகர் நட்பு விலைமகளிரின் மனம்போல வேறுபடும்

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்

ஆகுதல் மாணார்க் கரிது. - 823

பல நல்ல நூல்களைப் படித்தும் மனம் திருந்துதல் அரிது

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும். - 824

சிரித்துப் பேசினாலும் மனதில் ஒட்டாதவரை அஞ்சி நீக்குக            

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்

சொல்லினால் தேறற்பாற்று அன்று. - 825

மனதால் ஒருமைப்பாடில்லாதார் பேச்சைக் கேட்காதே

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும். - 826

நண்பர்போல இனியவை சொன்னாலும், பகைவர் சொல் தீமைதரும்   

சொல்வணக்கம் ஒன்றார்கண் கொள்ளற்க வில்வணக்கம்

தீங்கு குறித்தமை யான். - 827

வில் வளைவது தீங்குசெய்யவே, அதுபோல பணிவையும் ஆராய்ந்தறிக

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து. - 828

எதிரி வணக்கத்தையும், கண்ணீரையும் நம்பாதே தீமை மறைந்திருக்கும்

மிகச்செய்து தம்மௌfளு வாரை நகச்செய்து

நட்பினுள் சாப்புல்லற் பாற்று.- 829

புறத்தே புகழ்ந்து அகத்தே இகழும் அகநட்பில்லாதவர்கள் நட்பை விடுக

பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு

அகநட்பு ஒரீஇ விடல். - 830

எதிரிகளிடம் பழகும் காலம் வந்தால் முகத்தளவே நட்புக் கொள்க     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக