வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 11 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 87. பகை மாட்சி

 


வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா

மெலியார்மேல் மேக பகை. - 861

வலியவரிடம் பகைக்காமல் மெலியவரிடம் பகைக்க

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு.- 862

அன்பும், வலிமையான துணையின்றி பகையை வெல்ல முடியாது

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு.- 863

அச்சம், அறியாமை, ஒன்றுபடாமை, கஞ்சத்தனம் தோற்பார் இயல்புகள்

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்

யாங்கணும் யார்க்கும் எளிது.- 864

சினத்தையும், மனத்தையும் ஆளத்தெரியாதவரை யாவரும்வெல்வர்

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்

பண்பிலன் பற்றார்க்கு இனிது.- 865

செய்யும் வழி, பழி கருதாமல் பண்பின்மை தோற்பார்  தேடும் வழி

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

பேணாமை பேணப் படும்.-866

கடுங்கோபம், பெருங்காமம் கொண்டவரை பகை கொள்ளலாம்         

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து

மாணாத செய்வான் பகை.-867

உடனிருந்தே தீமை செய்பவரை பொருள் கொடுத்தாவது பகைவராக்கு 

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு

இனனிலனாம் ஏமாப் புடைத்து.- 868

நற்பண்பில்லாத, குற்றம் பல செய்தவரை யாவரும் எளிதில் வெல்வர் 

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா

அஞ்சும் பகைவர்ப் பெறின்.- 869

அறிவில்லாத, கோழைகளை எதிர்ப்பவர்கள் என்றும் வெற்றி பெறுவர்

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்

ஒல்லானை ஒல்லா தொளி.- 870

கல்லாதவனைப் பகைக்கும் எளிய செயல் செய்யாதவனை புகழ் சேராது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக