வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 12 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 88. பகைத்திறம் தெரிதல்


 

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று. - 871

பகைமையை விளையாட்டாகக் கூட விரும்பாதே

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை.- 872

வில்வீரரைப் பகைத்தாலும் சொல்வீரரைப் பகைக்காதே

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்   

பல்லார் பகைகொள் பவன். -873

தனித்திருந்து பலர் பகையைத் தேடிக்கொள்வது பெரும் மூடத்தனம்

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்

தகைமைக் கண் தங்கிற்று உலகு.-874

பகைவரையும் நட்பாக்கிக் கொள்ளுபவனிடம் இவ்வுலகம் அடங்கும் 

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்

இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. - 875

துணையில்லா அரசன், தன் இரு எதிரிகளுள் ஒருவரை நண்பராக்குக

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்

தேறான் பகாஅன் விடல். - 876

துன்ப காலத்தில் யாரையும் நம்பாதே, பகைக்காதே

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க

மென்மை பகைவர் அகத்து. -877

அன்பிலாதாரிடம் துன்பத்தையும், எதிரியிடம் பலவீனத்தையும் கூறாதே

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்

பகைவர்கண் பட்ட செருக்கு.- 878

வலிமையாலும் தற்காப்பாலும் மட்டுமே பகைவரின் செருக்கு நீங்கும்

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து.- 879

முள்மரத்தை சிறிதாகவும், பகையை ஆரம்பத்திலும் நீக்கவேண்டும்  

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்

செம்மல் சிதைக்கலா தார்.- 880

எதிரிகளை குறைவாக எண்ணி அழிக்காமல் விடுபவர், அழிவு உறுதி  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக