வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 26 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 99. சான்றாண்மைகடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. - 981

நற்குணமுடையோர் கடமை இதுவென அறிந்து ஆற்றுவர்    

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்

எந்நலத்தும் உள்ளதூஉம் அன்று. - 982

பிற நலன்களைவிட குணநலமே சான்றோரின் அடையாமாகும் 

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு        

ஐந்துசால் பூன்றிய தூண். - 983

அன்பு, நாணம், ஒற்றுமை, தனிநோக்கு, உண்மை சான்றோரியல்புகள்

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு.- 984

கொல்லாமை, பிறர் குற்றங்களைக் கூறாமை சான்றோர் இயல்வு

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை.- 985

பணிவால் மாறுபட்டவர்களையும் வெல்லும் இயல்பினரே சான்றோர் 

சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல். - 986

சிறியோரிடமும் தோல்வியை ஒப்புக்கொள்வதே மேன்மையின் உரைகல்

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு. - 987

தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்வதே சான்றாண்மை எனப்படும்

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்

திண்மை உண் டாகப் பெறின். - 988

சால்பு என்ற மனம் பக்குவப்பட்டவருக்கு வறுமை இழிவானதல்ல 

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார். - 989

உலகு மாறினாலும் மாறாத இயல்புடையோர் சான்றாண்மைக் கடலாவர்

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்றோ பொறை. - 990

சான்றோர் தன் நிலை மாறினால் இந்த நிலம் தாங்காது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக