வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 23 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 96. குடிமை

 


இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்

செப்பமும் நாணும் ஒருங்கு. - 951

நேர்மையும், நாணமும் நற்குடியில் பிறந்தவரிடம் மட்டுமே இருக்கும்  

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார். - 952

ஒழுக்கம், வாய்மை, நாணம் மூன்றும் நற்குடியில் பிறந்தார்க்கே உரியது

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகையென்ப வாய்மைக் குடிக்கு. - 953

புன்னகை, கொடை, இனியசொல், இகழாமை நற்குடியாளர் இயல்புகள் 

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர். - 954

பணத்துக்காக நற்குடும்பத்தில் பிறந்தவர் இழிவான செயல் செய்யார் 

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பில் தலைப்பிரிதல் இன்று. - 955

வறுமை நிலையிலும் நற்குடும்பத்தில் பிறந்தோர் வழங்குவர் 

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற

குலம்பற்றி வாழ்தும் என் பார். - 956

வறுமையுற்றாலும் நற்குடியில் பிறந்தோர் வஞ்சகம் செய்யார் 

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.- 957

நற்குடும்பத்தினார் குற்றம் நிலவின் களங்கம்போல பெரிதாகத் தெரியும்

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்.- 958

நல்லவானயினும் குற்றம் செய்தால் அவன் குடிப்பிறப்பை ஆய்க 

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். - 959

விளைந்த பயிர் நிலத்தையும், பேசிய வார்த்தை குலத்தையும் காட்டும்

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு. - 960

பணிவும், நாணமுமே குலப்பெருமையைக் காட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக