வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 19 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 93. கள்ளுண்ணாமை


 உட்கப் படாஅர் ஒளியிழப்பார் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகுவார். - 921

குடிகாரர்கள் எப்போதும், புகழையும், வலிமையையும் இழப்பார்கள்   

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார். - 922

கள் குடிக்காதே! மதிப்பும், மரியாதையும் வேண்டாமென்றால் குடி

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி. - 923

மது அருந்தியவனை தாயே விரும்பாள், சான்றோர் எவ்வாறு ஏற்பர்

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. - 924

நாணம் என்னும் நல்லாள் கள்ளருந்தியோர் முன் நிற்கமாட்டாள்     

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

மெய்யறி யாமை கொளல். - 925

மயக்கத்தை விலைகொடுத்து வாங்குவோர் அறியாமையுடையவர்களே

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர். -926

உறக்கம் இறப்பு போன்றதே! எப்போதும் கள்ளும் நஞ்சுபோன்றதே!    

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ளொற்றிக் கண்சாய் பவர். - 927

கள்ளருந்தி கண்மயக்கம் கொள்பவரைக் கண்டு என்றும் ஊர் சிரிக்கும்

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து

ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.- 928

கள்ளருந்தியவன் மறைக்க நினைத்ததையும் போதையில் பேசிவிடுவான்

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று. - 929

நீரில் வீழ்ந்தாரை தீப்பந்தத்தால் தேடுவது போல குடித்தவனிடம் பேசுவது

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. - 930

குடிக்காத போதாவது, குடித்தவனின் நிலைகண்டும் திருந்தவேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக