வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 22 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 15. பிறனில் விழையாமை

 

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்.- 141

அறிவுடையோர் பிறர் மனைவியைப் பார்க்கமாட்டார்கள்

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரின் பேதையார் இல்.- 142

பிறர் மனைவியை விரும்புவாரைவிட அறிவிலிகள் இல்லை

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

தீமை புரிந்து ஒழுகு வார்.- 143

தன்னை நம்பியவரின் மனைவியை விரும்பியவர் இறந்தவரே

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

தேரான் பிறன்இல் புகல்.- 144

பிறர்மனைவியை விரும்புவோர் எவ்வகையிலும் தாழ்ந்தவரே

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி.- 145

பிறர்மனைவியை விரும்புவோர் அழியாப் பழியை அடைவா்

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்.- 146

பகை, பாவம், அச்சம், பழி நான்கும் தீய நடத்தையால் தங்கும்

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்

பெண்மை நயவா தவன்.- 147

அறவாழ்வென்பது பிறன் மனை நயவாமையே  

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.- 148

ஒழுக்கமுடையவரே பிறன்மனை நோக்காத பேராண்மையாளா்

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்

பிறற்குரியாள் தோள்தோயா தார்.- 149

பிறன் மனை தழுவாதவரே என்றும் பெருமையுடையவா் 

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று.-150

அறம் செய்தலைவிட நல்லது பிறன்மனை விரும்பாமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக