சனி, 8 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் -1. கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு. - 1

எழுத்துக்களின் தொடக்கம் அகரம். உலகின் தொடக்கம் ஆதிபகவன்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின். - 2

கல்வியின் பயன் அறிவுடையவரை வணங்குவதே

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்                   

நிலமிசை நீடுவாழ் வார். - 3

மலர்தூவி வணக்கப்படுபவரைப் பணிந்தவர்  புகழுடன் வாழ்வர்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல. - 4

பற்றற்றவர்களைப் பின்தொடர்பவர்களுக்குத் துன்பங்கள் இல்லை

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. - 5

பக்தர்களுக்கு அறியாமையின் இருவினைகளும் வராது.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார். - 6

புலனடக்கத்துடன் வாழ்பவரைப் பின்பற்றுவோர் நெடுநாள் வாழ்வர்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது. -7

மனக்கவலை நீங்க ஒப்பாரும் மிக்காருமில்லாதவரின் அடியைப் பற்று

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது. - 8

சான்றோர் வழிவாழ்பவரின்றி பிறர் துன்பக் கடலை கடப்பது அரிது

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.- 9

ஈடில்லாத ஆற்றலுடையவரை வணங்கவே ஐம்புலன்களும் தலையும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். - 10

இறைவனை வணங்குவோரே மறுபிறவி அடையார் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக