வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 12 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம்- 5. இல்வாழ்க்கை

 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை - 41

துறவி, ஏழை, ஏதிலிகளுக்கும் இல்வாழ்வாரே துணை

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை. - 42

துறவி, ஏழை, இறந்தவர்களுக்கும் இல்வாழ்வாரே துணையாவர்

தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.- 43

முன்னோர், தெய்வம், விருந்து, சுற்றம், தான் என நினை

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். - 44

பகிர்ந்து உண்டு வாழ்பவர் எதிர்காலம் குறித்து அஞ்சவேண்டாம்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது. - 45

அன்பும், அறனுமே வாழ்க்கையின் பண்பும், பயனும் ஆகும்

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்

போஒய்ப் பெறுவ தெவன். - 46

அறத்தின் வழி வாழ்ந்தால் யாவும் பெறலாம்  

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை. - 47

அறவழி வாழ்க்கை வாழ்பவனே தலைசிறந்தவன்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து. - 48

அறவாழ்க்கை வாழ்பவன் துறவிகளிலும் சிறந்தவன்

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. -  49

பிறர் பழிக்காத அறவழி வாழும் வாழ்வே நல்வாழ்வு

வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும் - 50                

முறைப்படி வாழ்பவன், தேவருள் ஒருவனாவான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக