வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 13. அடக்கமுடைமை

 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.- 121

அடக்கம் உயர்த்தும், அடங்காமை தாழ்த்தும்

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங் கில்லை உயிர்க்கு.-122

அடக்கத்தைவிட உயிர்க்கு ஆக்கம் வேறில்லை

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.- 123

அறிவன அறிந்து அடங்கியிருத்தல் மேன்மையாகும்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.-124

தன்னிலை மாறாமல் அடங்கியிருத்தல் மலையைவிடப் பெரிது

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.- 125

பணிவு நன்று. செல்வர்க்கு அது இன்னொரு செல்வம் போன்றது

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து.- 126

ஆமை போன்ற அடக்கம், எழுபிறப்பும் தரும் சிறப்பு

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.- 127

காக்க காக்க நா காக்க, காக்காவிட்டால் உனக்கு வரும் இழுக்கு

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.- 128

தீச்சொல் ஒன்றானாலும் அது பிற பெருமைகளை நீக்கிவிடும்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.- 129

தீயினால் சுட்டபுண் ஆறிவிடும், தீச்சொல் ஆறாதது

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து - 130

அடக்கத்துடன் இருப்பவர்களை அறம் விரும்பும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக