வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 16. பொறையுடைமை

  

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வாரைப் பொறுத்தல் தலை.-151

உன்னை இகழ்வாரையும் நிலம் போலத் தாங்கு

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று.- 152

தீமையைப் பொறுத்தலைவிட மறப்பது மிக நன்று

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.- 153

விருந்தோம்பாமை வறுமை, அறிவற்றவரைப் பொறுத்தல் வலிமை

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை

போற்றி யொழுகப் படும்.- 154

நிறைவெனப்படுவது பொறுமையின் நிறைவு

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.- 155

தண்டித்தவரை உலகம் மறந்துவிடும், பொறுத்தவரை மறக்காது

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்.- 156

நிலையான இன்பமென்பது தீமையைப் பொறுத்தலே

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து 

அறனல்ல செய்யாமை நன்று.-157

தீயைவை பிறர் செய்தாலும் அறனல்லதை செய்யாதிரு

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.- 158

இன்னா செய்தவரையும் இனிய செய்து வென்றுவிடுக

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர்.-159

தீய சொற்களைப் பொறுப்பவர் துறவிகளைவிட சிறந்தவராவார்

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்.-160

தவமிருக்கும் துறவிகளும் இன்னா சொல் பொறுப்பாரின் பின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக