வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 4. அறன் வலியுறுத்தல்

 


சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு - 31

செல்வமும், சிறப்பும் தருவதால் அறமே உயர்ந்தது

அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.32

ஆக்கம் என்பது அறமே, மறத்தலே கேடு

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.33

இயன்றவரை அறம் செய்க

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.34

மனதளவில் மாசின்றி இருத்தலே அறங்களுள் சிறந்த அறம்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம். - 35

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல்லைத் தவிர்

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை. - 36

அறத்தைத் தள்ளிப் போடாதே 

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. - 37

அறத்தைப் பற்றி எல்லோரிடமும் பேசாதே     

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்குங் கல். - 38

நாள்தோறும் அறம்செய்தால் பிறவிப் பிணி நீங்கும்

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.- 39

அறத்தால் மட்டுமே நிலையான இன்பம் வரும்

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி. - 40

அறம் செய்து பழியைத் தவிர்க்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக