வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 16 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 38. ஊழ்

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி. - 371

நல்விதி முயற்சியினையும், தீயவிதி சோம்பலையும் தரும்

பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவுஅகற்றும்

ஆகல்ஊழ் உற்றக் கடை. - 372

நல்விதி அறிஞனாக்கும், தீயவிதி பேதையாக்கும்

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை அறிவே மிகும். -373

நல்ல நூல்கள் பல கற்றாலும் இயற்கையான  அறிவே மிகும்

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு. -374

அறிவும், செல்வமும் ஒருசேர அமைவதில்லை

நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வம் செயற்கு.-375

நன்மைக்கும், தீமைக்கும் விதியே அடிப்படையாகிறது

பரியினும் ஆகவாம் பாலல்ல உய்த்துச்

சொரியினும் போகா தம. -376

நமக்குரியவை நீங்காது, நமக்கல்லாதது தங்காது

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. -377

எவ்வளவு சேர்த்தாலும், யாவற்றையும் அனுபவிக்கமுடியாது

துறப்பார்மன் துப்பரவு இல்லார் உறற்பால

ஊட்டா கழியும் எனின்.                      378

தீயவிதி நீங்கினால் வறியவரும் துறவியகளாகவர்

நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆங்கால்

அல்லற் படுவது எவன் - 379

இன்ப துன்பங்களில் இயல்பாக இருக்க முயல்க

ஊழின் பெருவலி யாஉள மற்றுஒன்று

சூழினும் தான்முந் துறும். - 380

விதியைவிட வலிமையானது வேறு இல்லை

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக