வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 41. கல்லாமை

 


அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல்.- 401

அரங்கின்றி வட்டாடுதல் போன்றது கல்லாதவர் பேச்சு   

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று.- 402

கல்லாதவன் பேச்சு, மார்பில்லாதவள் காமம் போன்றது

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்.- 403

கற்றவர் முன் பேசாவிட்டால் கல்லாதவரும் மிக நல்லவரே

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளார் அறிவுடை யார் - 404

கல்லாதவரின் சிறந்த கருத்தை, கற்றார் ஏற்பதில்லை

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்.- 405

தோற்றத்தில் மறைத்த கல்லாதார் இயல்பு, பேச்சில் வெளிப்படும்

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் கல்லா தவர்.                        406

விளையாத நிலம்போன்றவர்களே கல்லாதவர்கள்

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை யற்று.- 407

நிறைந்த கல்லாதார், அழகான மண்பொம்மை போன்றோர்

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு.- 408

முட்டாள் பெற்ற செல்வம், அறிவாளி பெற்ற வறுமையினும் கொடிது

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு.- 409

கற்றவர் என்ற பெருமை பிறப்பின் உயர்வு, தாழ்வை நீக்கிவிடும்     

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.- 410

கல்லாதவரும் விலங்குகளும் ஒன்றாகவே கருதப்படுவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக