வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 33. கொல்லாமை

 


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும்.- 321

கொல்லாமையே அறம், கொல்லுதலே தீவினை

பகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.- 322

பகிர்ந்து உண்டு வாழ்வதே முதன்மையான அறம்

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்

பின்சாரப் பொய்யாமை நன்று. - 323

வாய்மையைவிடக் கொல்லாமையே நன்று

நல்ஆறு எனப்படுவது யாதெனின் யாதுஒன்றும்

கொல்லாமை சூழும் நெறி.- 324

எவ்வுயிரையும் கொல்லாமையே நல்வழி ஆகும்

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் தலை. - 325

கொல்லாதவனே துறவிகளைவிட உயர்ந்தவன்

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்

செல்லாது உயிருண்ணும் கூற்று. - 326

கொல்லாதனிடம் எமனும் வரத் தயங்குவான்   

தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்உயிர் நீக்கும் வினை.-  327

தன்னுயிரே போனாலும் பிற உயிரைக் கொல்லாதே

நன்றுஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக்

கொன்றுஆகும் ஆக்கம் கடை. - 328

பெரிய நன்மை கிடைத்தாலும் கொல்லாமையே நன்று

கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையார்

புன்மை தெரிவார் அகத்து.- 329

கொலையைவிட இழிவான தொழில் வேறில்லை

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்

செல்லாத்தீ வாழ்க்கை யவர். - 330

உயிர்க்கொலை செய்தவர் என்றும் நோயுடன் வாழ்வர்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக