வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 35. துறவு

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.-  341

எதிலிருந்தெல்லாம் நீங்குகிறோமோ அவற்றால் துன்பங்கள் வராது

வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டுஇயற் பால பல.- 342

இன்பம் பெற பொருளைத் துற, துறந்தபின் பெறும் இன்பம் பல

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய எல்லாம் ஒருங்கு. - 343

ஆசைகளை வெல்ல ஐம்புலன்களை அடக்கவேண்டும்    

இயல்புஆகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை

மயல்ஆகும் மற்றும் பெயர்த்து.- 344

பற்றற்ற நிலையே துறவு, சிறு பற்றும் மயக்க நிலையைத் தரும்

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை.- 345

பிறப்பை அறுக்க நினைப்பவர் உடலையே சுமையாக கருதுவா்    

யான் எனது என்னுஞ் செருக்குஅறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.- 346

நான் என்ற உணா்வை கடந்தால் வீடுபேறு அடையலாம்

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்

பற்றி விடாஅ தவர்க்கு.-347

பற்றுகளைப் பற்றியவரைத் துன்பங்கள் பற்றிக்கொள்ளும்

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர். - 348

முழுத் துறவிகள் மாயவலையில் வீழார்

பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்.- 349

ஆசையில்லாத நிலையே பிறவிப் பிணியைப் போக்கும்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.- 350

பற்றற்று வாழ்பவர்களைப் பின்பற்றுவதே வீடுபேறடையும் வழி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக