வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 2 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 51. தெரிந்து தெளிதல்



அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்- 501

அறம், பொருள், இன்பம், உயிர்க்கான அச்சம் அறிந்தவரை ஆய்ந்தறி

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

நாணுடையான் கட்டே தௌவு.- 502

குடி, குற்றம், நாணம் உடையவரா என்பதை அறிந்து தெளிவுகொள்   

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு.- 503

அரியவை கற்ற, குற்றமற்றாரிடமும் அறியாமை இருக்கும்

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.- 504

நற்பண்பு, குற்றம் இவற்றுள் மிகுதியானவையை ஆராய்ந்து அறிக

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.- 505

நம் பெருமைக்கும், சிறுமைக்கும் நம் செயல்களே அடிப்படை

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி.- 506

உறவற்றவர்களை நம்பாதே, அவர்கள் பழிக்கும் வெட்கப்படார்

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

பேதைமை எல்லாந் தரும்.- 507

அன்பால், பேதையரை நம்புதல் பல தீங்கினை விளைவிக்கும் 

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும்.- 508

ஆராயாமல் கொள்ளும் நட்பு எதிர்காலத்திலும் துன்பம் தரும்

தேறற்க யாரையும் தேராதுதேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள்.- 509

ஆராயமல் ஒருவரை நம்பாதே, நம்பியவரை என்றும் ஆராயாதே

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.- 510

ஆராயமல் வரும் தெளிவும்,ஆராய்ந்தவர் மேல் ஐயமும் துன்பம்தரும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக