வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 10 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 59. ஒற்றாடல்

 

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண்.- 581

நல்ல ஒற்றனும், நல்ல நூலும் அரசனின் இரு கண்கள்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்.- 582

எங்கும், எப்போதும், எல்லோரிடமும் ஒற்றராய்தல் மன்னர் கடன்

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்

கொற்றிங் கொளக்கிடந்தது இல்.- 583

ஒற்றாடாத மன்னன் வெற்றிபெறுவது இல்லை

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு

அனைவரையும் ஆராய்வது ஒற்று. - 584

பணியாளர், உறவினர், எதிரி எனப் பாகுபாடின்றி யாரையும் ஆய்ந்தறி

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று.- 585

மாற்று உருவம், தூங்காமை, அஞ்சாத திட மனமும் கொண்டவனே ஒற்றன்

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து

என்செயினும் சோர்விலது ஒற்று.- 586

தவக்கோலத்திலும் ஒற்றாய்ந்து, பிடிபட்டாலும் சோர்விலானே ஒற்றன்

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று.- 587

ஒற்றாடியதை ஐயமின்றி துணிந்து கூறுபவனே ஒற்றன்

ஒற்றோற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.- 588

ஒற்றன் கூறிய செய்தியை மறு ஒற்றன் வழி உறுதிப்படுத்துக

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்

சொற்றொக்க தேறப் படும்.- 589

மூன்று ஒற்றர்களிடம் தனித்தனியே கேட்டு செய்தியை நம்பு

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்

புறப்படுத்தான் ஆகும் மறை.- 590

சிறந்த ஒற்றனாயினும் அவனுக்கு மறைவாகவே சிறப்பு செய் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக